மத்திய பட்ஜெட் அறிக்கை 2018ல் , மூத்த குடிமக்களுக்கு இலாபகரமான மற்றும் அவர்களின் பொருளாதாரக் கண்ணோட்டத்தை மாற்றும் வகையில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, நடப்புப் பொருளாதாரச் சூழ்நிலையில் பாதுகாப்பான முதலீடுகள் செய்யவும், அவற்றின் மூலம் அதிக லாபகரமான மற்றும் நிரந்தர வருமானமும் பெறமுடியும். பணிஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் சில..
நிரந்தர வைப்புத்தொகையில் அதிக முதலீடு
பணவீக்கம் அதிகரித்துத் தனது உச்சபட்ச பாதுகாப்பு நிலையைக் கடந்த போதிலும், ரிசர்வ் வங்கி கடந்த இரு கூட்டங்களிலும் வட்டிவிகிதங்களை மாற்றாமல் உள்ளது. எனினும், முதலீட்டுப் பத்திரங்களின் மதிப்பு உயரும் என்பதால், 10 வருட அரசு முதலீட்டுப் பத்திரங்களுக்கு 7.5% வரை லாபம் கிடைக்கும். வங்கிகளும் வைப்புத்தொகைக்கான வட்டியை உயர்த்த வாய்ப்புள்ளது.
வைப்புத்தொகைக்கான கால அளவு
இதில் அதிக முதலீடு செய்வதில் காட்டிலும், வட்டி விகிதத்தைப் போலக் கால அளவிலும் கவனம் செலுத்த வேண்டும். குறைந்த கால வைப்புத் திட்டங்களில் அதிக லாபம் ஈட்ட முடியும்.
80TTB யின் கீழ் வரிவிலக்கு
குறைந்த அளவு வரி செலுத்தும் மூத்தகுடிமக்களுக்கு 80TTB பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்படுவதால் 5 முதல் 20% வரை குறைந்த வருமான வரம்பிற்குள் வருபவர்கள் வைப்புத்தொகையில் முதலீடு செய்யலாம்.
இதன் மூலம் வரும் ரூ50000 வரையிலான வட்டிக்கு 80TTB யின் கீழ் வரிவிலக்குக் கோரலாம் என்பது சிறப்பு. அதுபோல இந்தவகை வட்டிக்கு TDS ம் செலுத்த தேவையில்லை.
தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளை ஒப்பிடும் போது தனியார் மற்றும் புதிய வங்கிகள் 366 நாட்களுக்கு 7.5% வட்டி தரும் சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளன.
உயர்த்தப்பட்ட வரிவரம்பு மற்றும் TDS விலக்கு, வரியற்ற வருவாய் உயர வழிவகைச் செய்கிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம்
மிகவும் நீண்டகால ஆனால் பாதுகாப்பான முதலீடான இதில் 8.3% வட்டிவிகிதம் உள்ளது. ஓராண்டுக்கு பின்பு முதிர்ச்சியடையும் முன்பே முதலீட்டை எடுத்தால் 1.5% அபராதமாக எடுக்கப்படுகிறது.
அதிகபட்சமாக 15லட்சம் முதலீடு செய்பவருக்கு, ஆண்டுக்கு 3 லட்சம் வரை வருமானம் தரும் சிறந்த திட்டம் இது. அதிலும் 80c பிரிவின் கீழ் 3 லட்சம் வரை வரிவிலக்குக் கோரலாம்.
பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா (PMVVY)
நிரந்தர வைப்புத்தொகையைக் காட்டிலும் சிறந்த திட்டமான இதில் நிலையான ஓய்வூதியம் கிடைக்கிறது. 2018 பட்ஜெட் படி 2020 வரை இந்தத் திட்டத்தில் இணையலாம்.
பணம் செலுத்தும் முறையைப் பொறுத்து ஆண்டுக்கு 8-8.3 % வட்டிவிகிதத்தில் திட்டங்கள் உள்ளன. தனிநபர் அதிகபட்சம் 10000 வரை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெறலாம் என்ற போதிலும் 50000 வரையிலான வட்டிக்கு 80TTB யின் கீழ் வரிவிலக்குக் கிடையாது.
ரிசர்வ் வங்கியின் 7.5% முதலீட்டுப் பத்திரங்கள்
இந்த வகை முதலீட்டுப் பத்திரங்கள் 7.5% வட்டியுடன் கூடிய பாதுகாப்பான திட்டமாக இருந்தாலும் 7ஆண்டுக்கால நீண்ட திட்டம். மேலும், இதன் மூலம் வரும் வட்டிக்கும் , TDS க்கும் வரிவிலக்கு இல்லை.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications