வங்கி வைப்பு நிதி விடுங்க, நிறுவன வைப்பு நிதி பற்றித் தெரியுமா..? அதிக லாபம்..!!

Written By:
Subscribe to GoodReturns Tamil

வங்கிகளின் நிரந்தர வைப்புநிதி திட்டங்களுடன் ஒப்பிடும் போது, நிதி நிறுவனங்களின் வைப்புநிதி திட்டங்களின் வட்டிவிகிதம் என்பது மிக அதிகம். ஆனாலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தனிநபர்கள் யாரும், இவற்றில் முதலீடு செய்ய முன்வருவது இல்லை.

எனினும், பல்வேறு நிதி நிறுவனங்களின் நிரந்தர வைப்புநிதி திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் AAA தர நிர்ணயம் பெற்றவை. அதுபோலப் பாதுகாப்பான வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களைத் தரும் 7 நிதி நிறுவனங்களின் பட்டியல் இதோ..

பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance)

இந்நிறுவனம் பல்வேறு கால அளவிலான நிரந்தர வைப்புநிதிக்கு 7.85% வட்டியைத் தருகிறது. இந்த வட்டி விகிதம் என்பது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற பல்வேறு பொதுத்துறை வங்கிகள் கூட வழங்காதது.

பஜாஜ் குழுமத்தின் மூலம் முதலீடுகள் வருவதாலும், நிரந்திரவைப்பு நிதிக்கு AAA தரநிர்ணயம் உள்ளதாலும், நமது முதலீடுகள் மிகவும் பாதுகாப்பானவை. 3-5ஆண்டுகள் வரையிலான முதலீடுகள் நல்ல லாபகரமானதாக இருக்கும். ஃபஜாஜ் நிறுவனம் நிலையானதாக இருப்பதால், நம் முதலீடுகளும் பாதுகாப்பாக இருக்கும்.

மூத்த குடிமக்கள் 0.35% கூடுதல் வட்டிவிகிதம் பெறலாம்.

 

ஶ்ரீராம் டிரான்ஸ்போர்ட் (Shriram Transport)

இந்த நிறுவனம், மூத்த குடிமக்களின் 1 ஆண்டுக்கால நிரந்தர வைப்புநிதிக்கு 7.72% வட்டிவிகிதம் தருகிறது. இதுவே, 5 ஆண்டுக்கால முதலீட்டுக்கான வட்டிவிகிதம் 8.19% வரை இருக்கும்.

மற்றவர்களுக்கு, 1 ஆண்டுக்கான வட்டிவிகிதம் 7.49% இருந்து, 5 ஆண்டுகளுக்கு 7.92% வரை கிடைக்கும்.

மேலும், இந்நிறுவனத்தின் முதலீடுகளுக்கு AAA தரநிர்ணயம் இருப்பதால், இவை மிகப் பாதுகாப்பானவை. இனி வருங்காலத்தில் வட்டிவிகிதம் மேலும் உயர வாய்ப்பு இருப்பதால், இப்போதைக்குக் குறுகிய காலத் திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது.

 

மகேந்திரா பைனான்ஸ் (Mahindra Finance)

மகேந்திர நிறுவனம் 15,20 மற்றும் 27 மாத கால வைப்புநிதிக்கு 7.75% வட்டிவிகிதத்தைத் தருகிறது. மேலும், 33 மற்றும் 40 மாதகால வைப்புநிதிக்கு 7.8% வட்டிவிகிதம் வழங்குகிறது.

AAA தரநிர்ணயம் பெற்றுள்ளதால், இந்த வைப்புநிதி திட்டங்கள் மிகப் பாதுகாப்பானவை. மேலும் இந்தியா முழுவதும் கடந்தசில வருடங்களாக, வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் 10% லிருந்து தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், மகேந்திரா நிறுவன முதலீடு மிகவும் பாதுகாப்பானது.

 

கேரளா டிரோன்ஸ்போர்ட் பைனான்ஸ் (KTDFC)

கேரள அரசு நிறுவனமான இதில், 2000 கோடி வரையிலான முதலீட்டுக்குக் கேரள அரசு உத்தரவாதம் அளித்துள்ளதால் இது மிகவும் பாதுகாப்பான முதலீடு. 1,2,3 ஆண்டுக்கால வைப்புத்தொகைக்கு 8.25 சதவீதமும், 4 மற்றும் 5 ஆண்டுக்குச் சற்று குறைவாக 8% வட்டியும் தரப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கு, 5 ஆண்டுக்கான வைப்புத்தொகைக்கு 10% க்கு அதிகமான வட்டிவிகிதமும், 3 ஆண்டுகளுக்கு 9.32%தரப்படுகிறது.

 

எச்.டி.எப்.சி (HDFC)

HDFC-ன் நிரந்தர வைப்புநிதி திட்டங்கள் AAA தரநிர்ணயம் பெற்றிருப்பதால், மிகவும் பாதுகாப்பான முதலீடுகள் ஆகும். 33 மற்றும் 33 மாத முதலீடுகளுக்கு 7.33% வட்டியைத் தருகிறது. வங்கிகளுடன் ஒப்பிடும் போது இதில் அதிக லாபம் பெறலாம். வேறு எதிலும் முதலீடு செய்ய இயலாத போது, இதில் முதலீடு செய்யலாம். மேலும், இந்நிறுவனத்தில் பல வருடங்களாக வட்டிவிகித்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

டி.எச்.எப்.எல் ஆஷ்ரே டிபாசிட் ப்ளஸ் (DHFL Aashray Deposit Plus)

இதுவும் AAA தரநிர்ணயம் பெற்ற நிறுவனமாகும். 48 முதல் 120 மாத வைப்புநிதிக்கு 8% வட்டி வழங்கப்படுகிறது. வங்கிகள் வழங்குவதை விடக் கூடுதலாக 1% வட்டி வழங்குவதால் இது சிறந்தது. ஆனாலும் KTDFC உடன் ஒப்பிடும் போது, இந்நிறுவனம் சற்று குறைவான வட்டியையே தருகிறது. மேலும், இதில் வட்டி தொகை ரூ5000ஐ தாண்டினால் TDS பிடித்தம் செய்யப்படும். ஒரு முறை வைப்புநிதிக்கு 10% வரை வட்டி தரும் DHFL நிறுவனம், அதன் பிறகு சற்று குறைவாகவே தருகிறது.

பொறுப்புத் துறப்பு

நிதிநிறுவனங்களின் நிரந்தர வைப்புநிதி திட்டங்கள் பாதுகாப்பானவை என உத்திரவாதம் இல்லை. அனைத்தும் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. இந்தக் கட்டுரை வாயிலாக ஏற்படும் எந்தவொரு இழப்பிற்கும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்கும், கிரேனியம் டெக்னாலஜிஸ் நிறுவனமும் பொறுப்பாகாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Company Fixed Deposits To Invest In India

Best Company Fixed Deposits To Invest In India
Story first published: Friday, March 30, 2018, 17:37 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns