மாணவர்கள் படிக்கும் போது ஸ்மார்ட்டாக இப்படியும் சம்பாதிக்கலாம்..!

கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற 9 பகுதி நேர வேலைவாய்ப்புகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாணவர்களாக இருக்கும் போது அதிக நேரங்களை வீண் அடிப்பதைக் குறைத்துக்கொண்டு பகுதி நேர வேலை ஏதாவது ஒன்று செய்து சம்பாதிக்கவும் செய்யலாம். இந்த வேலை வாய்ப்புகள் குறைந்த அளவில் மட்டுமே பணத்தினை ஈட்ட உதவினாலும் உங்களுக்கு அனுபவ ரீதியாகப் படிப்பை முடித்த பிறகு பல்வேறு வகையில் உதவும். படிப்பை முடித்து வேலை தேடும் போது பிறரை விட உங்களுக்கு நிறுவனங்கள் முன்னுரிமையும் அளிக்கும்.

எனவே கல்லூரிகளில் படித்துக்கொண்டே எந்த மாதிரியான பகுதி நேர வேலை வாய்ப்புகளைச் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.

சமுக வலைத்தள உதவியாளர்

சமுக வலைத்தள உதவியாளர்

கல்லூரி மாணவர்கள் அதிகளவில் சமுக வலைத்தளங்களில் இயங்குவது வழக்கம். சில நிறுவனங்கள் இது போன்று சமுக வலைத்தளங்களில் ஈடுபாட்டுடன் உள்ளவர்களை வைத்து அவர்களது தயாரிப்புகளுக்கு விளம்பரம் செய்ய ஆட்கள் தேடுவார்கள். இந்தப் பணிகள் எப்போது கிடைக்காது என்றாலும் குறைந்த நாட்களில் அதிக வருவாயினை அளிக்கும்.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

பள்ளியில் படிக்கும் போது நீங்கள் தான் கிலாஸ் டாப்பர் என்றால் உங்கள் வீட்டின் அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் மூலம் பயிற்சி அளித்தும் வருவாயினை ஈட்டலாம். நீங்கள் எந்தப் பாடங்களை எடுக்க இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து வருமானம் மாறும். ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை இந்த வேலையினைச் செய்தால் போதும்.

வாகன ஓட்டுநர்

வாகன ஓட்டுநர்

உங்கள் வீட்டில் அதிகம் பயப்படுத்தப்படாத கார் இருக்கும் போது, உங்களுக்கு வாகனம் ஓட்டுவது ஜூஜூப்பி என்றால் அதனை ஓலா அலற்று உபர் போன்ற வாடகை கார் சேவை வழங்குநருடன் இணைத்தும் சம்பாதிக்கலாம். ஒரு நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாடகை கார் சேவை வழங்குநர்களுடன் இணைந்து வாகனத்தினை ஓட்ட முடியும். அது மட்டும் இல்லாமல் நீங்கள் எப்போது வேலை இல்லாமல் பொழுதை போக்கிக் கொண்டு இருக்கிறீர்களோ, உங்களது எப்போது பணம் தேவையோ அப்போது மட்டும் கூட வாகனத்தினை ஓட்டி பணம் சம்பாதிக்கலாம்.

உணவகங்கள்

உணவகங்கள்

பல உணவகங்கள் மாணவர்களை மாலை நேரங்களில் பகுதி நேர அடிப்படையில் பணிக்கு எடுக்கின்றனர். உணவு பரிமாற, பில்லிங், உணவு டோர் டெலிவரி போன்ற பணிகள் மிக எளிதாகக் கிடைக்கும். உணவு பரிமாறும் சர்வர் வேலை செய்யும் போது டிப்ஸ் ஆக மட்டும் அதிகம் சம்பாதிக்க முடியும்.

வடிவமைப்பாளர்கள்

வடிவமைப்பாளர்கள்

போஸ்டர் டிசைன், டிடிபி, ஆட்டோ கேடு டிசைன் போன்றவை தெரிந்தாலும் வீட்டில் இருந்த படியும் அல்லது அருகில் உள்ள சிறு நிறுவனங்கள் மூலமாகவும் வடிவமைப்பாளர்கள் வேலையைப் பகுதி நேரமாகச் செய்து படித்துக்கொண்டே சம்பாதிக்கலாம்.

 இ-காமர்ஸ் டெலிவரி

இ-காமர்ஸ் டெலிவரி

இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல தங்கள் இணையதளங்களில் ஆர்டர் செய்யும் பொருட்களைக் குறித்த நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக டெலிவரி பாய்களாக மானவர்களைப் பகுதி நேரமாக வேலைக்கு எடுக்கிறார்கள். இதன் மூலமாக மாதம் 6,000 முதல் 12,000 ரூபாய் வரை மாதம் சமாதிக்க முடியும்.

ஐடி உதவி

ஐடி உதவி

உங்கள் கல்லூரியில் கணினி, மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்கள் பற்றிய சந்தேகங்களை அனைவரும் உங்களைக் கேட்டு தான் தெரிந்துகொள்வார்கள் என்றால் ஐடி உதவியாளர் வேலையைத் தேடலாம். இதன் மூலம் கணினியை பழுதுபார்த்தல், மென்பொருள் நிறுவுதல் போன்ற பணிகள் செய்து வருவாயினை ஈட்ட முடியும்.

பைக்/கார் மெக்கனிக்

பைக்/கார் மெக்கனிக்

வாகனங்களைத் தான் பிரித்து மேய்ந்துவிடுவேன் என்ற கூறுபவர்களா நீங்கள். அப்படியானால் மானவர்களாக இருக்கும் போது பகுதி நேரமாகப் பைக்/கார் மெக்கனிக் பணிகளும் செய்து சம்பாதிக்க முடியும். டயர் பஞ்சர் போட்டால் மட்டும் 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க முடியும்.

நிகழ்ச்சி விளம்பரதார்கள்

நிகழ்ச்சி விளம்பரதார்கள்

சமுக வலைத்தள வேலை வாய்ப்பினை போன்றே தான் இதுவும் என்றாலும் இதானை நேரடியாக வெளியில் செய்ய வேண்டி வரும். கார்ப்ரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சி, அல்லது ஏதேனும் நிறுவனங்களின் பிராண்டுகளை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல இது போன்ற வேலையை விரும்புபவர்களைத் தேடுவார்கள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Part Time Jobs For College Students in India

Best Part Time Jobs For College Students in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X