இந்தியாவின் முதல் வெளிநாட்டு சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டம் பற்றி தெரியுமா?

பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் உள்நாட்டு மருத்துவக் காப்பீடு திட்டங்கள் மட்டும் இல்லாமல் முதன் முறையாக வெளிநாட்டுச் சிகிச்சைகளுக்கான திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வழங்கும் இந்த வெளிநாட்டு மருத்து காப்பீடு திட்டத்தின் கீழ் இதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல், புற்றுநோய், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றை உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் செய்துகொண்டு காப்பீட்டினை பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.

 மருத்துவ காப்பீட்டின் பெயர்

மருத்துவ காப்பீட்டின் பெயர்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சர்வதேச அளவிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் பெயர் நியூ இந்தியா குளோபல் மெடிக்கிளைம் பாலிசி ஆகும்.

 மருத்துவமனைகள்

மருத்துவமனைகள்

சர்வதேச அளவிலான இந்த மருத்துவக் காப்பீடு திட்டத்திற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஜான் ஹாப்கின்ஸ், சிடார்-சினாய் மருத்துவ மையம் மற்றும் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை உட்பட 99 சர்வதேச மருத்துவ நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தினைப் போட்டுள்ளது.

 பிற நன்மைகள்

பிற நன்மைகள்

இந்தப் பாசியை 18 வயது முதல் 65 வயது வரை யார் வேண்டுமானாலும் பெறலாம். மேலும் 8 லட்சம் அல்லது அதற்கு அதிகமாகக் காப்பீடு அளிக்கும் திட்டங்களை வாங்கியுள்ளவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் காப்பீட்டினை பெற்று பயன்படுத்த முடியும்.

இன்சூரன்ஸ் திட்டங்கள்

இன்சூரன்ஸ் திட்டங்கள்

ஆசிய நாடுகளுக்குள் கவரும் பாலிசி மற்றும் ஆசியா உட்படச் சர்வதேச அளவில் கவரும் பாலிசி எனத் திட்டங்களை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வகுத்துள்ளது. அனைத்துச் சிகிச்சைகளுக்கும் 90 நாட்கள் காத்திருப்பு நாட்களுடன் பாலிசி உள்ளது. மேலும், வெளிநாடுகளில் சிகிச்சை பெறும் ஒரு கொள்கையை வழங்குவதற்கு முன்பு இரண்டாவது மருத்துவக் கருத்து பெற வேண்டியது அவசியம்.

லைப்டைம் கவரேஜ்

லைப்டைம் கவரேஜ்

ஆசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 1 மில்லியன் டாலர் வரை காப்பீடு கிடைக்கும். இதுவே சர்வதேச அளவு திட்டம் என்றால் 2 மில்லியன் டாலர் வரை காப்பீடு பெற முடியும்.

பிரீமியம் தொகை

பிரீமியம் தொகை

மருத்துவக் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகையானது வயது மற்றும் காப்பீடு பெறும் பயனரின் மருத்துவ வரலாற்றைப் பொருத்து மாறும். 30 வயது நிரம்பிய வாடிக்கையாளர் ஒருவருக்கு லோடிங் இல்லாமல் ஆசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு 9,003 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். இதுவே ஆசிய மருத்துவமனைகளுக்கு வெளியில் என்றால் 11,453 ரூபாய் ஆண்டுப் பிரீமியம் ஆகும்.

கேஷ் லஸ் பாலிசி

கேஷ் லஸ் பாலிசி

இந்தியர்கள் மட்டுமே இந்தப் பாலிசிகளை வாங்க முடியும். இந்தியாவில் கீமோதெரப்பிச் செய்து இருப்பவர்கள் இதனைப் பயன்படுத்த முடியாது. முழுமையான கேஷ் லஸ் பாலிசி.

 லோடிங்

லோடிங்

அதிக ரிஸ்க் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பிரீமியம் தொகையினை உயர்த்தும் முறையே லோடிங் ஆகும். 25 முதல் 100 சதவீதம் வரை பிரீமியம் லோடிங் உண்டு.

நியூ இந்தியா இன்சூரன்ஸ்

நியூ இந்தியா இன்சூரன்ஸ்

இந்தியாவின் மிகப் பெரிய ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன, என்ற பெயரை அதன் பிரீமியம் வசூல் அளவினை வைத்து நியூ இந்தியா இன்சூரன்ஸ் பெற்று இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+