டிக்கெட் ரத்து காப்பீடு திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் திரைப்பட டிக்கெட் மற்றும் பிற பொருட்கள் என இணையதளம் மூல வாங்குபவர்கள் என்றால் சில நேரங்களில் அந்தப் பரிவர்த்தனைகளில் தவறு நடைபெறும்பட்சத்தில் பணத்தினை இழக்கும் ரிஸ்க் வர வாய்ப்புள்ளது. இதுபோன்ற ரிஸ்க்கில் இருந்து தீர்வுகள் பெறவே எச்டிபெசி எர்கோ நிறுவனம் காப்பீடு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் பாலிசி மூலம், முன்பதிவு செய்யப்பட்ட முன்பதிவுக்கான டிக்கெட் ரத்துச் செய்யப்படும் வாடிக்கையாளர், பணத்தைத் திரும்பப் பெற முடியும் மற்றும் நிகழ்வுகள் அமைப்பாளர்கள் மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சி வழங்குநர்கள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் பார்ட்னர்கள் என அனைவருக்கும் பொருந்தும். வாடிக்கையாளர்கள் ரீஃபண்டு பெறக்கூடிய டிக்கெட் மற்றும் ரீஃபண்டு சேவை இல்லா டிக்கெட் என அனைத்திற்கும் பாதுகாப்பினை பெறலாம்.

எந்த ரிஸ்க் எல்லாம் கவர் செய்யப்படும்?

எந்த ரிஸ்க் எல்லாம் கவர் செய்யப்படும்?

டிக்கெட் விற்பனை, டிக்கெட் ரத்து செய்தல், டிக்கெட் வழங்குநர் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தினைத் திருப்பி அளிக்கும் போது உள்ள ரிஸ்க்கை எல்லாம் இந்தப் பாலிசி கவர் செய்யும்.

எவ்வளவு தொகை திரும்பக் கிடைக்கும்?

எவ்வளவு தொகை திரும்பக் கிடைக்கும்?

டிக்கெட் புக் செய்து ரத்து செய்யும் போது டிக்கெட் பணத்தில் மொத்த மதிப்பையும் திரும்பப் பெற முடியும். ஆனால் எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும் என்ற விவரங்களைக் காப்பீட்டு நிறுவனங்கள் வெளியிடவில்லை.

முக்கியக் காரணங்கள்

முக்கியக் காரணங்கள்

அதே போன்று எந்தக் காரணத்திற்காக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் எல்லாம் பணத்தினைத் திருப்பி அளிப்பார்கள் என்ற விவரங்களும் தெரியவில்லை.

தற்போது உள்ள விதிகளின் படி நிகழ்ச்சி வழங்குநரால் ரத்து செய்யப்பட்டால், தேதி மாற்றப்பட்டால், இடம் மாற்றப்பட்டால் எல்லாம் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது.

 

எந்த டிக்கெட்களை எல்லாம் பாலிசி கவர் செய்யும்?

எந்த டிக்கெட்களை எல்லாம் பாலிசி கவர் செய்யும்?

எச்டிபெசி எர்கோ வழங்கும் இந்தப் பாலிசியானது விளையாட்டுப் போட்டிகள், பயிற்சி வொர்க்‌ஷாப்புகள், கார்ப்ரேட் நிகழ்வுகள், சாகச நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்ச்சி டிக்கெட்களுக்கும் பாலிசி கவரேஜ் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things know about Ticket Cancellation Insurance Policy

Things know about Ticket Cancellation Insurance Policy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X