உங்கள் கார் இன்சூரன்ஸ் கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? அதற்கு காரணம் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளைப் பின் பற்றாதவர்களினால் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் சாலை விபத்துகள் ஏற்படலாம். எனவே, இந்நாளில் எதிர்பாராது ஏற்பட வாய்ப்புள்ள அனைத்திற்கும் தயாராக இருப்பது எப்போதும் நல்லது. தவறு உங்களுடையதோ அல்லது வேறொருவருடையதோ, விபத்து என்று ஒன்று நிகழ்ந்தால் உடல் மற்றும் நிதி ரீதியான விளைவுகளுக்கு நீங்கள் நன்கு தயாராக இருக்கவேண்டியது மிக அவசியம் . எனவே, ஒரு முழுமையான மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியுடன் உங்களையும் உங்கள் வாகனத்தையும் இணைத்து வைத்திருப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மிக நல்லது.

வாகனம், விபத்தைச் சந்திப்பதால் ஏற்படும் சேதம் மற்றும் வலியைவிட சிலசமயங்களில் உங்கள் பாக்கெட்டிலிருந்து மூன்றாம் மனிதருக்கு வாகனம் மற்றும் தனிப்பட்ட சேதங்களுக்காகப் பணம் செலுத்தும் நிலை இன்னும் கொடுமையாக இருக்கும். பெரும்பாலான சூழ்நிலைகளில் பெரும்பாலான காப்பீட்டாளர்கள் தங்கள் பாலிசியின் கவரேச், டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸை தெரியாத காரணத்தால் அவர்களின் கிளைம் நிராகரிக்கப்படுகிறது.

மனநிறைவான மோட்டார் (பாலிசி) காப்புறுதி :

மனநிறைவான மோட்டார் (பாலிசி) காப்புறுதி :

ஒரு முழுமையான மோட்டார் காப்பீட்டுக் கொள்கையானது விபத்தில் நேரும் வாகனத்தின் சேதம், தனிப்பட்ட காயங்கள் அல்லது இறப்பு மற்றும் மூன்றாம் தரப்பு செட்டெல்மென்ட் ஆகிய அனைத்திற்கும் நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தைப் பொறுத்து தகுந்த இழப்பீட்டைத் தருகிறது. இதுமட்டுமில்லாமல் காப்பீடு செய்பவர் மற்றும் விபத்தில் அகப்படும் எதிரணிக்கான பொறுப்புகள் , திருட்டு மற்றும் வாகன இழப்பு ஆகியவைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் ,மெய்ன் பாலிசியோடு தேவையான( சாலைப் பாதுகாப்பு) இன்னும் பிற சிறப்பான பயனளிக்கும் திட்டங்களையும் இணைத்துக்கொள்ளலாம்.

கார் காப்பீட்டைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, நீங்கள் ஆன்லைன் காப்பீடுகளை ஆராயலாம், மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் வெப்சைட் மூலமாகவும் விரைவான காப்பீட்டுக் குறிப்பைப் (கொட்டேசன்) பெறலாம்.

 

கிளைம் புராசசை அறியவும்:

கிளைம் புராசசை அறியவும்:

நீங்கள் ஒரு பாலிசியை வாங்கும்போது, ​​சோம்பேறித்தனமில்லாமல் கிளைம் புராசஸ் உள்ளிட்ட அனைத்து டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். நீங்கள் கார் காப்பீட்டைப் பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே ,விபத்துகள் ஏற்படும்போது அதற்கான தகுந்த மற்றும் உரிய இழப்பீட்டைப் பெறமுடியும். இல்லாவிடில் ,சிறு சிறு பிழைகளால் கூட உங்களுடைய கிளைம் எளிதாக இன்சூரன்ஸ் நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டுவிடும்.

எனவே, நீங்கள் மோட்டார் பாலிசியை ஆன்லைனில் வாங்கும்போது, ​​பாலிசி , விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்(டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ்), உள்ளடக்கம் மற்றும் விதிவிலக்குகள், மற்றும் கிளைம் ப்ராசஸ் போன்ற அனைத்து விவரங்களை எப்போதும் சரிபார்க்கவும்.

 

கிளைம் ரிஜக்சன் (மறுப்பு):

கிளைம் ரிஜக்சன் (மறுப்பு):

விபத்திற்குப் பிறகு உங்கள் காப்பீட்டுக் கிளைம் நிராகரிக்கப்படும்போது, ​​அது முதலில் காப்பீடு வாங்குவதற்கான நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது. உதாரணமாக, ஆவணத்தில் சிறு பிழை இருந்தாலும் உங்கள் கிளைம் நிராகரிக்கப்படலாம் போன்றவை IRDA-வால் (காப்புறுதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) வரையறுக்கப்பட்ட கடுமையான விதிகளாகும். மோட்டார் காப்புறுதி கிளைம்கள்யாவும் மிகவும் முறையான அடிப்படையிலேயே நிராகரிக்கப்படுகின்றன. அதனால் உங்கள்பாலிசியைப் பற்றி நன்கு அறிந்திருந்தால் , துரதிர்ஷ்டமான நேரங்களில் கிளைம் நிராகரிப்புகளைத் தவிர்க்கலாம்.

உங்கள் கார் காப்பீட்டுக் கிளைம் நிராகரிக்கப்படலாம் என்பதற்கான முக்கிய காரணங்கள் இதோ: -

 

காலாவதியான காப்பீட்டுத் திட்டம்:

காலாவதியான காப்பீட்டுத் திட்டம்:

உங்கள் பாலிசியைத் தவறாமல் ஆன்-டைமில் புதுப்பிக்கும் நீங்கள் எப்போதாவது புதுப்பிக்கத் தவறி , அந்த துரதிர்ஷ்ட நேரத்தில் விபத்து நேரிட்டால் அந்த பாலிசியால் உங்களுக்கு ஒரு பயனுமில்லை. ஆன்-டைமில் புதுப்பிக்கும்போது , புதுப்பிக்கப்பட்ட பாலிசி எபக்ட் ஆகும் வரை இடைப்பட்ட காலத்தில் விபத்து நேரிட்டாலும் நீங்கள் கிளைம் செய்ய இயலாது. பாலிசி காலாவதி தேதிக்கு முன்னரே உங்கள் கார்க் காப்பீட்டைப் புதுப்பிப்பது நல்லது. நீங்கள் நேரமில்லாத அளவிற்கு பிஸியாக இருந்தாலும் கூட, ஆன்லைனில் மிக எளிதாக குறைவான நேரத்தில் செய்து முடிக்கலாம்.ஒரு சில நிமிடங்களே ஆகும்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குதல்:

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குதல்:

காரை ஓட்டுகிற எவரும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லாத அல்லது காலாவதியான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் ஒருவர் இயக்கம் பொழுது வாகனம் விபத்தில் அகப்பட்டால் அதற்கான பாலிசியை கிளைம் செய்ய இயலாது.

உங்கள் காப்பீட்டாளருக்கு தாமதமாக அறிவித்தல்:

உங்கள் காப்பீட்டாளருக்கு தாமதமாக அறிவித்தல்:

காப்பீட்டாளரிடம் விபத்து குறித்து, விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் புகார் செய்யாவிட்டால் உங்கள் காப்பீட்டுக் கிளைம் நிராகரிக்கப்படலாம். 24-48 மணிநேர காலக்கெடுவை வழக்கமாக பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்களும் வரையறுத்துள்ளன. ஒரு வாகனம் விபத்தில் சிக்கிய பிறகு அதை மேலும் இயக்கிச்சென்றால் உங்கள் காப்பீட்டாளர் நிச்சயமாக கிளைம்மை நிராகரித்துவிடுவார். எனவேதான் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள், காப்பீட்டாளர்கள் வந்து சோதனையிடும் வரை விபத்துப் பகுதி அல்லது சம்பந்தப்பட்ட ஏரியாவின் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருப்பதை நாம் காணலாம்.

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல்:

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல்:

குடிபோதையில் வாகனத்தைச் செலுத்துதல் ஒரு தீவிரமான குற்றச்செயலாகும். நீங்கள் விபத்தைச் சந்திக்கும் போது மது அருந்தியிருப்பது நிரூபிக்கப்பட்டால் உங்கள் கிளைம்மை நிராகரிக்க வேண்டும் என்பது அனைத்து வாகன இன்சூரன்ஸ் பாலிசியின் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷனில் மிகவும் தெளிவாக இருக்கிறது.

வாகனத்தின் தவறான பயன்பாடு:

வாகனத்தின் தவறான பயன்பாடு:

உங்கள் வாகனம் சொந்தப் பயன்பாட்டிற்கு காப்பீடு செய்யப்பட்டிக்கும்பொழுது அதை வியாபாரப் பணிக்காக பயன்படுத்தினால் , அதை காப்பீட்டாளர்க்கு முறையாகப் பதிவு செய்ய வேண்டும். வாகனத்தின் உபயோகத்திற்கான தெளிவுக் கொள்கை இல்லாதபோது, உங்கள் கிளைம் நிராகரிக்கப்படும்.

பாலிசியில் சேராத கூடுதல் பாகங்கள்:

பாலிசியில் சேராத கூடுதல் பாகங்கள்:

பாலிசி எடுக்கும் பொழுது இல்லாத கூடுதல் பாகங்களுக்குக் கிளைம் கோரப்பட்டிருந்தால் அது நிராகரிப்புக்கு அழைப்பு விடுகிறது. இந்த மாதிரியான நேரங்களில் உங்கள் முழு கிளைமும் நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து எதையும் மறைக்காதீர்கள். நீங்கள் காரில் ஏதாவது மாற்றங்களைச் செய்தால் உங்கள் காப்பீட்டாளருக்கு முறையாகத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் காப்பீட்டாளருக்கு(இன்சூரர்)  தகவலளிக்காமல் பழுது பார்த்தல்:

உங்கள் காப்பீட்டாளருக்கு(இன்சூரர்) தகவலளிக்காமல் பழுது பார்த்தல்:

ஒரு கார் விபத்தில் ஈடுபட்டிருந்தால், அதற்குரிய தகவல்களை சீக்கிரம் உங்கள் காப்பீட்டாளருக்கு தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமையாகும். விபத்திற்குப் பிறகு உங்களுடைய காரை நீங்கள் சொந்தமாக பழுதுபார்த்துக்கொண்ட பிறகு உங்கள் காப்பீட்டாளரிடம் அறிவிக்கும்போது உங்கள் கிளைம் நிராகரிக்கப்படும். இன்சூரரின் அங்கீகாரம் பெற்ற ஒரு நபரின் வாகன ஆய்வுக்குப் பிறகு எந்தவொரு பழுதையும் சரி செய்வது உங்களுக்கு நல்லது.

பாலிசி  உங்கள் பெயரில் இல்லாதபோது :

பாலிசி உங்கள் பெயரில் இல்லாதபோது :

ஒரு காரை புதிதாக வாங்காமல் வேறொருவருக்குச் சொந்தமான காரை வாங்குகிறீர்களானால், கார் காப்பீடு மற்றும் அதன் பதிவுகளை உங்கள் பெயருக்கு உடனடியாக அதன் உபயோகத்திற்கு முன் மாற்றிவிடுங்கள். RC இல் உள்ள பெயரும், காப்பீட்டில் உள்ள பெயரும் வேறுபாடும் பொழுது உங்கள் கிளைமை உங்கள் இன்சூரர் நிராகரிக்கலாம்.

மோசமான வாகனப் பயன்பாடு:

மோசமான வாகனப் பயன்பாடு:

பொதுவாக ஒரு வாகனத்தைப் பயன்படுத்த வரம்புகள் உள்ளன. ஓவர்லோடிங் போன்ற வரம்புகளுக்கு அப்பால் எந்த வாகனத்தையும் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் அதுவும் கிளைம் நிராகரிப்புக்கு காரணமாக அமையலாம்.

உங்கள் கார் இன்சூரன்ஸ் கொள்கையைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமென்ன ?

ஒரு விபத்து ஏற்படும் பொழுது , வாகனத்தைப் பழுது பார்க்கத் தேவையான பெரிய செலவை உங்களுடைய பாக்கெட்டிலிருந்து கொடுக்காமல் அனைத்தையும் பாலிசி மூலமே செலுத்த உங்கள் காரின் காப்பீட்டுக் கொள்கையை முழுவதுமாகப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் உணரவேண்டும். அனைத்து கார் காப்பீட்டுக் கொள்கைகளும் ஒரேமாதிரி இருப்பதில்லை. ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனம் பலவித வசதிகளை(வேறுபட்ட பாதுகாப்பு மற்றும் அது தொடர்புடைய உட்பிரிவுகள் இருக்கலாம்) அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வசதிக்குகேற்ப வழங்குகின்றன. எனவே, பாலிசி ஆவணத்தின் அனைத்துப் பக்கங்களையும் சோம்பேறித்தனம் இல்லாமல் கவனமாக வாசித்து சம்பந்தப்பட்ட விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் புரிந்துகொள்வது உங்கள் கார் காப்பீட்டு கிளைம்கள் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Has your Car Insurance Claim been rejected? Know the Reasons

Has your Car Insurance Claim been rejected? Know the Reasons - Tamil Goodreturns | உங்கள் கார் இன்சூரன்ஸ் கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? அதற்கு காரணம் இதுதான்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, April 29, 2018, 15:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X