ஆயுள் காப்பீடு திட்டங்கள் வாழ் நாள் காப்பீடு மட்டும் இல்லாமல் குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கிறது. இந்தக் கடன் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லது பிற நிதி சார் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஆயுள் காப்பீட்டுப் பாலிசியினைப் பிணையாகக் கொண்டு கடன் அளிக்கின்றன. ஆனால் இ ந்த கடன் திட்டமானது டர்ம் இன்சூரன்ஸ் அல்லது யூலிப்ஸ் அல்லது ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்குக் கிடையாது.
கடன் அளவு
கடன் அளவானது பாலிசியின் வகை மற்றும் சரண்டர் மதிப்பு இரண்டையும் பொருத்து வழங்கப்படும். கடன் தொகையானது பாலிசியின் சரண்டர் மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவீத அளவில் வழங்கப்படும். அதிகபட்சம் 80 முதல் 90 சதவீதம் வரை சரண்டர் மதிப்பில் இருந்து கடன் பெற முடியும். இந்தக் கடன் திட்டமானது மனி பேக் பாலிசி மற்றும் எண்டோவ்மெண்ட் பாலிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஆவணங்கள்
இன்சூரன்ஸ் பாலிசிக்குக் கீழ் கடன் பெற விண்ணப்பத்தினைப் பூர்த்தூ செது சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தினை இன்சூரன்ஸ் பாலிசி பத்திரம் அல்லது ஆவணத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கப்பட வேண்டும். கடன் தொகையினைப் பெறுவதற்கான கணக்கு விவரங்கள் மற்றும் கேன்சல்டு செக்கினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
கட்டணங்கள்
காப்பீட்டு நிறுவனம் அல்லது நிதி நிறுவனமானது கடன் தொகையினைச் செயல்படுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையினைக் கட்டணமாகப் பெறும்.
வட்டி விகிதம்
தனிநபர் கடனை விட இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கடன் பெறும் போது குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. ஒருவேலை வட்டி தவணையானது பாலிசி சரண்டர் மதிப்பினை விட அதிகமாக இருந்தால் பாலிசிதார் அவரது பாசியை இழக்க நேரிடும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications