ஏன் பணியாளர்கள் தங்களின் மாதக் கடன் திட்டத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறீர்கள் தானே? இது ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியின் பின்விளைவு தான்.
பணியாளர்களுக்குப் பணிபுரியும் நிறுவனம் வழங்கும் உணவு கூப்பன் மற்றம் இதர வகையில் திரும்பப் பெறும் பணத்தை (reimbursement) சம்பளத்தில் இருந்து கழிக்கும் போது, அவ்வாறு கழிக்கும் தொகைக்கு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என மேம்படுத்தப்பட்ட விதிகள் ஆணையம் புதிய விதியை அறிவித்துள்ளது.

தொழிற்சாலைகள் சட்டத்தின் படி, 250க்கு மேற்பட்டோர் பணிபுரியும் நிறுவனங்கள் கட்டாயம் உணவு விடுதி (கேன்டின்) சேவையை வழங்கவேண்டும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு முன்பு வரை ஆதரவு நடவடிக்கையாக இருந்துவந்த இது, புதிய ஜி.எஸ்.டி விதிகளின் படி இத்தகைய சேவைகள் நிறுவனத்தின் முக்கியத் தொழில் வரம்பிற்குள் கொண்டுவரப்படுகின்றன.
உணவு கூப்பன் மற்றும் கேண்டின் போன்ற சேவைகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுப் பின்னர் மாதாந்திர சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஜி.எஸ்.டி சட்டத்தின் படி, நிறுவனம் இது போன்ற சேவைகளை வழங்கும் போது அவற்றைத் தொழில் வரம்பிற்குள் எடுத்துக்கொண்டு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும்.
ஆனால் இன்னமும் ஜி.எஸ்.டி வரிவிகிதங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. உங்கள் மாதசம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பணத்திற்கு மட்டுமில்லாமல், வீட்டுவாடகை, சீருடை, மருத்துவச் செலவு போன்றவற்றைக் கணக்குக்காட்டி திரும்பப் பெறும் பணத்திற்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட இருக்கிறது.
திரும்பப் பெறப்படும் பணம் மற்றும் மறைமுக வருவாயை, மறைமுக வரியின் கீழ் ஜி.எஸ்.டி வரி வரம்பிற்குள் கொண்டுவர ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. நிச்சயம் இந்த நடவடிக்கை தனியார் துறையில் பணியாற்றும் மாத சம்பளதாரர்களின் பாக்கெட்டில் பெரிய ஓட்டையைப் போட்டுப் பட்ஜெட்டில் துண்டு விழவைக்கப்போகிறது.


Click it and Unblock the Notifications