உங்களுக்குத் தெரியாத சில எளிய கடன் திட்டங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிதி நெருக்கடி நேரங்களில் குறுகிய மற்றும் நீண்டகால நிதித் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கு நிதி திரட்டும் பல வழிகளை நீங்கள் அறிந்திருக்கலாம் . ஆனால், நீங்கள் அறியாத சில எளிய வழிகளும் உள்ளன. பல நேரங்களில் இவற்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் கணிசமான தொகையைச் சேமிக்கலாம்.

 

அதில் சிலவற்றைக் கீழே காணலாம் வாருங்கள்

1. உங்கள் சொந்தக் காரின் பேரில் கடன்:

1. உங்கள் சொந்தக் காரின் பேரில் கடன்:

நீங்கள் மிகவும் விரும்பும் வாகனத்தைப் பெற வழங்கப்படும் வாகனக் கடன் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில், சிறிதளவு முன்பணம் மட்டுமே உங்களிடம் பெறப்படும். மீதிப் பணத்தைக் கடன் தரும் வங்கிகளோ அல்லது NBFC நிறுவனமோ அளிக்கும் . அந்தப் பணத்தை நீங்கள் கடனளிப்பவரின் விதிமுறைகளுக்கேற்ப திரும்பச் செலுத்துவீர்கள்.

ஆனால், கார் உங்களுக்குச் சொந்தமான பிறகு அதன் மொத்த மதிப்பின் 85-90% அளவுக்குக் கடன் பெறும் கடன் வசதியும் உள்ளது. உங்கள் கார் இங்கு ஒரு பிணைச்சொத்தாகக் கருதப்படுகிறது. நிதி சார்ந்த கடன்களைச் சந்திப்பதற்காக வங்கிக்கடன் அல்லது கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றைப் பெறுவதை விடக் கார் கடன் வகை மலிவானது. இதை 1-3 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும். மேலும் ஒரு தனிநபரின் வங்கி கிரெடிட் ஸ்கோர், கடன் பெரும் நிலையில் இல்லாத பொழுதும் இத்தகைய கடன் மிக எளிதாகக் கிடைக்கும். எனவே இம்முறையில் உடனடி பணப்புழக்கத்தைப் பெறலாம்.

 

தனியார் வங்கிகள்
 

தனியார் வங்கிகள்

ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடாக் மஹிந்திரா போன்ற அனைத்துத் தனியார் வங்கிகளும் இத்தகைய கடன்களை வழங்க ஆரம்பித்துள்ளன. தமது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் வங்கிகள் இந்தக் கடன்களை ஏற்கனவே வழங்கிய கடனின் டாப் அப் கடனாக வழங்குகின்றன. வங்கிகள், ஏற்கனவே கடன் கொடுத்த வாடிக்கையாளர்களின் தனி விவரங்களைச் சரிபார்த்துள்ளதால் KYC (தமது வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுதல்) சரிபார்த்தலின் ஆபத்தும் குறைவு.

வங்கிகள் தமது அக்கௌன்ட் ஹோல்டர் அல்லது ஏற்கனவே வாகனக் கடன் வங்கி திரும்பிச் செலுத்தியவருக்கு மற்றவர்களை விட அதிக முன்னுரிமை வழங்குகின்றன.

 

 2. உங்கள் கிரடிட் கார்டின் மேல் கடன்:

2. உங்கள் கிரடிட் கார்டின் மேல் கடன்:

உடனடி பணத் தேவைக்கு நீங்கள் தனிநபர் கடன்களை வாங்க வேண்டியிருக்கும், இதற்கு முதலில் வங்கி அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்.

நீங்கள் ஒரு வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கும் பொழுதே, அதில் ஒரு முன்பு ஒப்புதல் (pre-approved) செய்யப்பட்ட கடன் திட்டம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும். தேவைப்படும்பொழுது அதை நீங்கள் மற்ற லோன்களைப்போலில்லாமல் எந்தவித டாகுமென்ட்களோ அல்லது அப்ரூவல்களோ இன்றி உடனடியாகப் பெறலாம்.

கிரெடிட் கார்டின் வழியாகப் பெறப்படும் கடன் பணத்துக்கான வட்டி விகிதம் 15-20 விழுக்காடுகளாக உள்ளது. ஐசிஐசிஐ, சிட்டி பேன்க், எச்.டி.எஃப்.சி மற்றும் எச்.எஸ்.பி.சி வங்கி போன்ற பல வங்கிகளும் இத்தகைய கடனை வழங்குகின்றன.

 

 3. வியாபாரிகளின் முன்பணம் கடன் அல்லது கிரெடிட் கார்டின் உபயோக வழிக்கடன்:

3. வியாபாரிகளின் முன்பணம் கடன் அல்லது கிரெடிட் கார்டின் உபயோக வழிக்கடன்:

இது ஒரு வணிகக் கடன் திட்டம் ஆகும், அதாவது வியாபாரிகளின் கல்லாவில் கஸ்டமர்களின் கிரெடிட் கார்டு ஸ்வைப்பின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு இக்கடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 6 மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ வியாபாரத்தில் ஈடுபடும் புதிய வணிக நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி ரூபாய் வரை லோன் வழங்கப்படுகிறது. புதிய வர்த்தகர்களுக்கு ரூ. 50 லட்சம் வரை லோன் வழங்கப்படுகிறது. கிரெடிட் கார்டு அட்டை ஸ்வைப்களின் சராசரி மதிப்பு அடிப்படையில் லோனின் வரம்பு தீர்மானிக்கப்படுகிறது. வணிகர்கள் 12 மாதங்கள் வரை ஓவர் டிராஃப்ட் வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் 36 மாதங்கள் வரை ஓவர் டிராஃப்ட் இன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக, வணிகம் செயல்படத்தேவையான மூலதனத் தேவைகளை இத்தகைய கடன்களின் மூலம் வணிகர்கள் எளிதாகச் சமாளிக்க முடியும். இத்தகைய கடன் திட்டத்துக்கான கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 6 மாதம் முதல் 2 வருடங்களுக்கும் இடைப்பட்டதாக இருக்கும்.

 

4. முத்ரா கடன்:

4. முத்ரா கடன்:

மைக்ரா-மைனிங் யுனிட்ஸ் டெவலப்மெண்ட் அண்ட் ரிபினேன்ஸ் ஏஜென்சியின் சுருக்கமே "முத்ரா" . இந்தத் திட்டம் MSME அல்லது மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய்களுக்குக் கீழுள்ள தேவைகளுக்குக் கடன் வழங்குகிறது.

பிரதான் மந்திரா முத்ரா யோஜனா எனப் பிரபலமாக அறியப்படும் இத்திட்டமானது ஷிஷு, கிஷோர் மற்றும் தருண் என்ற பெயர்களில் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.50000 முதல் ரூ.10,00,000 வரை கடன் பெற முடியும். வாகனத்தை வாங்க அல்லது வியாபார நோக்கங்களுக்காக இந்தத் திட்டத்தின் மூலம் நிதி திரட்ட முடியும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Some Loan Options That You Did Not Know

Some Loan Options That You Did Not Know
Story first published: Tuesday, April 3, 2018, 17:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X