இரண்டாவது வீட்டுக் கடன் வாங்குகிறீர்களா..? முதல இதைப் படிங்க..!

வேலை நிமித்தமாகவோ அல்லது இன்ன பிற காரணங்களுக்காகவோ சொந்த ஊரில் இருந்து வேறு நகரத்திற்கு இடம்பெயரநேரிடும். அந்தச் சமயத்தில் சொந்த ஊரில் உள்ள வீட்டை விற்காமல், பணிபுரியும் இடத்தில் இன்னொரு வீடு வாங்குவதற்கான சூழ்நிலை ஏற்படும்.

சில நேரங்களில், கூடுதல் வருமானம் ஈட்டப் புதிதாக வீடு கட்டி வாடகைக்கும் விடலாம்.

இரண்டாவது வீடு என்பது நல்ல முதலீடாக இருந்தாலும், அதற்கு உண்டான வரிகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டுக்கடன் பெறும்பட்சத்தில்.

 வீடு சம்பந்தப்பட்ட சொத்துகளுக்கான இந்திய வரிச் சட்டங்கள்

வீடு சம்பந்தப்பட்ட சொத்துகளுக்கான இந்திய வரிச் சட்டங்கள்

வரிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, சட்டப்படி இந்தியாவில் வீடு வாங்குவதற்கான அடிப்படை விதிகளைத் தெரிந்துகொள்வோம்.

நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சொந்தக்காரர் என்றால், அதில் ஒன்று மட்டுமே நீங்கள் உபயோகிப்பதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதிலும் அந்த வீட்டைக் கடந்த ஆண்டு வாடகைக்கு விட்டு அதன் மூலம் எந்த வருமானமும் பெற்றிருக்கக்கூடாது.

நீங்கள் எந்த வீட்டை உபயோகிக்கிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். அது முதன்முதலில் வாங்கிய வீடாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

வரி விதிப்பு

வரி விதிப்பு

நீங்கள் புதிதாக இன்னொரு வீடு வாங்கி, அதை வாடகைக்கு விடவில்லை என்றாலும் வாடகைக்கு விட்டதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். இரண்டாவது வீட்டை சொத்தாகக் கருத்தில் கொண்டு, அதன் மதிப்பு 30லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் 1% வரி விதிக்கப்படும்.

நீங்கள் எத்தனை வீடுகள்/சொத்துகளை வேண்டுமானாலும் வாங்கலாம். அதற்கு எந்தத்தடையும் இல்லை. வீடுகளுக்காக வீட்டுக்கடன் பெற்றிருந்தால் பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்.

 

திருப்பிசெலுத்திய அசலின் மீதான வரி

திருப்பிசெலுத்திய அசலின் மீதான வரி

உங்கள் முதல் வீட்டுக்கான கடனை இன்னும் திருப்பிச் செலுத்திக்கொண்டு இருந்தால், ஏற்கெனவே திருப்பிச் செலுத்தப்பட்ட அசலுக்கு அதிகபட்சமாக ரூ1.5 லட்சம் வரையில்(மூத்த குடிமக்களுக்கு ரூ2 லட்சம்) பிரிவு 80C ன் கீழ் வரிவிலக்குக் கோரலாம்.

 வரிவிலக்கு

வரிவிலக்கு

உங்களிடம் ஒரே ஒரு வீடு இருந்து, வேறு நகரத்திற்கு இடம்பெயர வேண்டிய காரணத்தால் அதை வாடகைக்கோ அல்லது காலியாக விட்டிருந்தாலும் மேற்கூறிய வரிவிலக்கைப் பெறலாம். மேலும் இந்த வரிவிலக்கைப் பகுதியாக அல்லது முழுவதுமாகச் செலுத்திய கடனுக்கும் பயன்படுத்தலாம்.

 ரூ50,985

ரூ50,985

வரி சேமிக்கும் முதலீடுகள் அனைத்தும் ஒன்றிணைத்துப் பிரிவு 80C ன் கீழ் வரிவிலக்குக் கோரினால், ரூ50,985 வரையிலான முதலீட்டுக்கு வரிவிலக்கு கிடைக்கும்.

இரண்டாவது அல்லது கூடுதல் வீடுகள் அல்லது சொத்துக்கள்/ கட்டிக்கொண்டிருக்கும் வீட்டுக்கு வரிவிலக்கு கோரமுடியாது.

 

குடியிருக்கும் வீடு

குடியிருக்கும் வீடு

நீங்கள் குடியிருக்கும் வீடாஇ இருந்து, கடன் பெற்று 5 ஆண்டுகளுக்குள் வீட்டைக் கட்டிமுடித்திருந்தால், நீங்கள் செலுத்திய வட்டிக்கு அதிகபட்சமாக ரூ2 லட்சம் வரையில் (மூத்த குடிமக்களுக்கு ரூ3 லட்சம்) வரிவிலக்குக் கோரலாம்.

கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்கு, வீடு கட்டிமுடித்த பின் 5 நிதியாண்டுகள் செலுத்திய வட்டியை 5 சம பாகங்களாகப் பிரித்து வரி விலக்குக் கோரலாம். ஆனால் அதிகபட்சம் ரூ2லட்சம் வரை தான் வரிவிலக்கு.

5ஆண்டுகளில் வீடு கட்டி முடிக்கப்படவில்லை என்றால், அதிகபட்சமாக ரூ30,000 வரை வரிவிலக்குப் பெறலாம்.

வீட்டின் மதிப்பு ரூ50 லட்சத்திற்குக் கீழ் இருந்து, பெற்ற கடன் ரூ35லட்சத்திற்குக் கீழ் இருந்தால் கூடுதலாக ரூ50,000 வரை வரிவிலக்குக் கோரலாம்.

 

கூடுதல் வீடுகள்

கூடுதல் வீடுகள்

இரண்டாவது அல்லது கூடுதல் வீட்டுக்குக் கட்டப்படும் வட்டிக்கு அதிகபட்சமாக ரூ2 லட்சம் வரை வரிவிலக்குக் கோரலாம்.

 வீட்டுவாடகை மூலமாக வரும் வருவாய்க்கு வரி

வீட்டுவாடகை மூலமாக வரும் வருவாய்க்கு வரி

வீட்டுவாடகை வருமானம் வரிக்கு உட்பட்டது. உங்கள் கூடுதல் வீட்டை வாடகைக்கு விடவில்லை என்றால், சந்தைமதிப்பிலான வாடகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+