இந்தியாவில் உள்ள சொத்தை லாபத்துடன் விற்கும் போது மூலதன வருமானம் பற்றி அறியலாம். மூலதன சொத்தை வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து மூலதன வருமானம், குறுகிய அல்லது நீண்டகால மூலதன வருமானம் என இருவகையாக இருக்கலாம். நீங்கள் வசிக்கும் சொத்தை வாங்கியதிலிருந்து 2 ஆண்டுகளுக்குப் பின் (2017பட்ஜெட்டில் 3 ஆண்டுகள் 2 ஆகக் குறைக்கப்பட்டது) விற்றால் அது நீண்டகால மூலதன வருமானம். 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே விற்றுவிட்டால் அது குறுகிய கால மூலதன வருமானம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் மூலதன வருமானத்திற்கும் வரி மற்றும் டி.டி.எஸ் (TDS)
வெளிநாடுவாழ் இந்தியர்கள், இங்கு உள்ள சொத்தை விற்றால், அதன் மூலம் கிடைக்கும் மூலதன வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் வரிப் பிடித்தம் செய்யக்கூடிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் மொத்த வருமான அடிப்படையில், வருமான வரி விகிதப்படி குறுகிய கால மூலதன வருமானத்திற்கு 20% வரிவிதிக்கப்படும்.
முன்னோர்களின் சொத்துக்களுக்கும் வரி
நீங்கள் விற்கும் சொத்து உங்கள் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்டிருந்தால், அது நீண்டகால மூலதன வருமானமா அல்லது குறுகிய கால மூலதன வருமானமா எனக் கண்டறிய , உண்மையான உரிமையாளரிடம் சொத்து வாங்கிய தேதியை கணக்கில் கொள்ள வேண்டும். சொத்தின் மதிப்பையும் முந்தைய அல்லது உண்மையான உரிமையாளரிடம் வாங்கிய மதிப்பையே எடுத்துக்கொள்ளலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு எவ்வளவு டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படும்?
வெளிநாடுவாழ் இந்தியர் சொத்து வாங்கி 2 வருடங்களுக்குப் பிறகு விற்றால், சொத்தை வாங்குபவரிடம் 20% டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படும். 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே என்றால் 30% டி.டி.எஸ் பிடிக்கப்படும். இந்தியாவில் வசிப்பவர் என்றால், விற்பதில் 1% பிடித்தம் செய்யப்படும்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை
வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் தாங்கள் சொத்தை விற்று கிடைத்த வருமானத்தை அவர்கள் வாழும் நாட்டில் தெரிவிக்க வேண்டும்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் டி.டி.எஸ் பிடித்தம் வேண்டாம் என நினைத்தாலோ, கிடைத்த மூலதன வருமானத்தை முதலீடு செய்ய விரும்பினாலோ வருமான வரித்துறையின் டி.டி.எஸ் இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
1 மில்லியன் டாலர்
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 1 மில்லியன் டாலரை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லலாம். ஆனால் அதற்குக் கணக்கு தணிக்கையாளரின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
வரி கட்டுகிறீர்களோ இல்லையோ, பணபரிவர்த்தனைகள், கிடைத்த வருமானம், மூலதன வருமானம் போன்ற விவரங்களுடன் கண்டிப்பாக வருமானவரி தாக்கல் செய்யவேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications