பேமன்ட்ஸ் வங்கிகள் (Payments Bank) என்னும் புது வகையான வங்கிகள் தொடங்குவதற்கு 2015 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி, கருத்துருக்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியது. பேமன்ட்ஸ் வங்கிகள் தொடங்க 11 நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தன. அதன்படி சில நிறுவனங்களின் பேமன்ட்ஸ் வங்கிகள் தற்போது இந்தியாவில் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள 5 பேமன்ட்ஸ் வங்கிகள் குறித்துப் பார்ப்போம்.
பேமன்ட்ஸ் வங்கிகள் என்றால் என்ன?
பேமன்ட்ஸ் வங்கிகளுக்கும் மற்ற வங்கிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. பேமன்ட்ஸ் வங்கிகள் மற்ற வணிக வங்கிகளைப் போல வாடிக்கையாளர்களுக்குக் கடன்களையோ கடன் அட்டைகளையோ (கிரடிட் கார்டு) வழங்காது. ஆனால், ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை ஆகியவற்றைப் பேமன்ட்ஸ் வங்கிகள் வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் இவ்வங்கியில் சேமிப்புப் கணக்குகளைத் தொடங்கலாம். தற்போது, வாடிக்கையாளர்கள் இவ்வங்கியில் அதிகபட்சமாக ஒரு இலட்ச ரூபாய் மட்டுமே வைப்புத் தொகையாக வைக்க முடியும். வருங்காலத்தில் இந்த உச்ச வரம்பு மாற்றியமைக்கப்படலாம். இந்தியாவில் செயல்படுகின்ற பேமன்ட்ஸ் வங்கிகளையும் அதன் சிறப்புக்களையும் பார்க்கலாம்.
ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பேமன்ட்ஸ் வங்கி என்னும் பெருமையை ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் இவ்வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு 7.25% வட்டி வழங்கிய நிலையில் தற்போது 5.5 சதவீத வட்டி மட்டுமே அளிக்கிறது. பெரிய மற்றும் சிறிய வணிக வங்கிகளோடு ஒப்பிடுகையில், ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் தான் சேமிப்புக் கணக்குகளுக்கான மிக அதிகமான வட்டி விகிதமாகக் கருதப்படுகிறது.
முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இவ்வங்கியில் பேப்பர்களுக்கு வேலையில்லை. மொபைல் செயலி வழியாக மட்டுமே இவ்வங்கிக் கணக்கை இயக்கமுடியும். ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இணையம் வழியாகப் பயன்படுத்த கூடிய மாஸ்டர் கார்டு வழங்கப்படுகிறது.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, கடந்த 2017ஆம் ஆண்டு, மே மாதம் பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியைத் தொடங்கி வைத்தார். இவ்வங்கி, சேமிப்புக் கணக்குகளுக்கு 4% வட்டி வழங்குகின்றது. உடனடிப் பணப்பரிமாற்ற சேவை (IMPS), பணம் செலுத்தலுக்கான ஒருங்கிணைந்த இணைப்புநிலைச் சேவை (UPI), தேசிய மின் நிதிப் பரிமாற்றம் (NEFT) ஆகிய சேவைகளை இணையம் வழியாக இவ்வங்கி வழங்குகிறது. இச்சேவைககள் விரைவான பணப்பரிமாற்த்திற்கு உதவுகின்றன.
ஃபினோ பேமன்ட்ஸ் வங்கி (Fino Payments Bank)
ஃபினோ பேடெக் (Fino Paytech) நிறுவனத்தால் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது ஃபினோ பேமன்ட்ஸ் வங்கி. சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் வழங்குவது மட்டும் அல்லாமல், நடப்புக் கணக்கு மற்றும் சிறுஅளவிலான கடன் வழங்குதல் போன்ற வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு இவ்வங்கி வழங்குகின்றது. ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகிய இரண்டு மட்டும் இருந்தாலே போதும், இவ்வங்கியில் வணிகம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக நடப்புக் கணக்குகளைத் தொடங்க முடியும். இவ்வங்கி சேமிப்புகளுக்கு 4% வட்டி வழங்குகின்றது.
இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி
இந்திய அஞ்சல் துறையால் தொடங்கப்பட்டுள்ள இவ்வங்கி, இன்னும் தன்னுடைய சேவையினை முழுமையாக வழங்கவில்லை. சோதனை முயற்சியாக, உத்தரகாண்டில் உள்ள ராய்ப்பூர், ஜார்கண்டில் உள்ள ராஞ்சி ஆகிய நகரங்களில் மட்டும் தற்போது செயல்படுகிறது. விரைவில் நாடு முழுவதும், இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கியின் கிளைகளை எதிர்பார்க்கலாம். இவ்வங்கி சேமிப்புகளுக்கு 5.5% வட்டியை வழங்குகிறது. இவ்வங்கி தன்னுடைய வாடிக்கையாளருக்கு டெபிட் கார்டினை இலவசமாக வழங்குகிறது. கார்டு வழங்கப்பட்ட இரண்டாம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 100 ரூபாய் பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கிறது.
ஜியோ பேமன்ட்ஸ் வங்கி
பேமன்ட்ஸ் வங்கிகளின் வரிசையில் சமீபத்திய புது வரவாக ஜியோ பேமண்ட்ஸ் வங்கி தன்னுடைய சேவையைத் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் மூலமாக இவ்வங்கிகள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்திய ஸ்டேட் வங்கியுடன் சேர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் இந்தச் சேவையை வழங்குகிறது. சேமிப்புகள் மற்றும் வைப்புத் தொகைகளுக்கான வட்டிவிகிதம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் யெஸ் வங்கி (Yes Bank) ஆகியவற்றில் உயர் பதவி வகித்த ஸ்ரீகிருஷ்ணன் என்பவர் ஜியோ பேமன்ட்ஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications