இந்தியாவின் சிறந்த கிலிட் எட்ஜ் ஃபண்ட்ஸ் எது தெரியுமா..? இதுல முதலீடு செய்தால் லாபம் அதிகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மின்னுவதெல்லாம் பொன்னல்ல. ஆனால் பொன் கண்டிப்பாக மின்னும். எனவே நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு சிறந்த பொருளையும் தங்கத்திற்கு ஒப்பிட்டு அதன் தரத்தை மிக அழகாக வெளிப்படுத்தினர். இந்த ஒப்பீடு நிதித் துறையில் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகின்றது. மிகச் சிறந்த நிறுவனங்கள் மற்றும் முதலீடு வாய்ப்புகளைத் தங்கத்திற்கு நிகராக ஒப்பிட்டு அதன் தரத்தை உயர்த்திக் கூறும் பழக்கம் நம்முடைய பொருளாதார வல்லுனர்களிடையே இருக்கின்றது. ஒப்பீட்டளவில் தங்கத்திற்கு நிகரான ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்புதான் இந்தக் கிலிட் எட்ஜ் பண்ட் ஆகும்.

 

கிலிட் எட்ஜ் பண்ட்

கிலிட் எட்ஜ் பண்ட்

கிலிட் எட்ஜ் பண்ட் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உயர் தர முதலீட்டுப் பத்திரங்கள் ஆகும். கடந்த காலத்தில், இந்தகைய பத்திரங்களை இந்திய அரசாங்கம், தங்க நிறத்திலான காகிதங்களில் மீது மிகவும் பளபளப்பாக அச்சிட்டு வெளியிட்டது. எனவே இது, கிலிட் எட்ஜ் பண்ட் என அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் காரணத்திற்கு அச்சிடப்பட்ட காகிதம் காரணமாக இருந்தாலும் இந்தப் பத்திரத்தின் தன்மை, அதன் மதிப்பு நெடுங்காலந்தொட்டு மிகவும் நிலையானதாக உள்ளது. எனவே இந்தப் பத்திரத்தின் தரத்திற்கேற்ப இந்தப் பெயர் நிலைபெற்று விட்டது.

உறுதி மற்றும் நம்பிக்கையானது

உறுதி மற்றும் நம்பிக்கையானது

இந்திய நிதிச் சூழலில், அரசாங்கத்தினால் துவங்கப்பட்ட இந்தப் பத்திரம், நிதிச் சந்தையிலிருந்து இந்திய அரசு கடன் பெற உதவுவதற்காக உருவாக்கப்பட்ட போதிலும், இது மிகவும் உறுதியானது மற்றும் நம்பகமானதாக உள்ளது. இதைப் பற்றிய குறிப்புகள் 2006 இன் அரசாங்க பத்திரங்கள் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

எளிதில் விற்கலாம்
 

எளிதில் விற்கலாம்

இந்திய சூழலில், கிலிட் எட்ஜ் ஃபண்ட்கள் வரையறுக்கப்பட்ட அல்லது உத்திரவாதத்துடன் கூடிய வருவாயைத் தரக்கூடியதாக இல்லை. எனினும் இந்தப் பத்திரங்களை மிக எளிதில் விற்று காசாக்கி விடலாம். அதாவது இந்தப் பத்திரங்களைத் திரவ நிதியாக மாற்ற நூறு சதவிகித உத்திரவாதம் உள்ளது. அதோடு இந்தப் பத்திரங்களின் வருவாய் சதவிகதமும் மிகவும் அதிகமாக உள்ளது.

விருப்பமான முதலீட்டுத் திட்டம்

விருப்பமான முதலீட்டுத் திட்டம்

மேலே குறிப்பிட்ட காரணங்களை உற்று நோக்கும் பொழுது, முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சாத்தியமான மற்றும் மிகவும் விருப்பமான முதலீட்டுத் திட்டமாகத் தெரிகின்றது. இருப்பினும் இத்தகைய முதலீட்டு பத்திரங்களின் வரிசையில் அதிகமான பத்திரங்கள் பல்வேறு நிறுவனங்களினால் வெளியிடப்படுகின்றன. எனவே எந்த நிறுவனத்தின் பத்திரங்களில் முதலீடு செய்வது என்பது ஒரு மிகப் பெரிய கேள்வியாக முதலீட்டாளர்களின் முன்னால் நிற்கின்றது. எனவே நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக, இந்தக் கட்டுரையில் இந்தியாவில் உள்ள சிறந்த கிலிட் எட்ஜ் பண்ட்களைப் பற்றி ஆராய்ந்து அதனுடைய சாதகப் பாதகங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

 ரிலையன்ஸ் கில்ட் செக்யூரிட்டிஸ் ஃபண்ட் - நேரடி திட்டம் (ஜி)

ரிலையன்ஸ் கில்ட் செக்யூரிட்டிஸ் ஃபண்ட் - நேரடி திட்டம் (ஜி)

தற்போதைய சூழலில் இந்த நிதியின் நிகரச் சொத்து மதிப்பு ரூ. 24.202 ஆக உள்ளது. கடந்த இரண்டு காலாண்டுகளாக இந்தத் திட்டமானது நீண்ட கால நோக்கில் செயல்படும் ஜில்ட் எட்ஜ் திட்டங்களில் மிகச் சிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியின் வருவாய் விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கும் பொழுது, இந்தக் கில்ட் எட்ஜ் பத்திரங்களின் வருவாயும் கண்டிப்பாக அதிகரிக்கும். இது இந்தப் பத்திரங்களின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதப்படுகின்றது.

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் ஜில்ட் - முதலீட்டுத் திட்டம் - பிஎஃப் விருப்பம் (ஜி)

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் ஜில்ட் - முதலீட்டுத் திட்டம் - பிஎஃப் விருப்பம் (ஜி)

இந்த நிதியின் தற்போதைய நிகரச் சொத்து மதிப்பு ரூ. 35.126 ஆகும். முந்தைய திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டமும் அதன் செயல்திறன் அடிப்படையில் மிகவும் நிலையானது மற்றும் கடந்த இரண்டு காலாண்டுகளில் நீண்ட காலக் கில்ட் எட்ஜ் பண்ட்களின் செயல் திறன் அடிப்படையில், இந்தக் கிலிட் எட்ஜ் பண்ட் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் அனைத்து அல்லது பெரும்பாலான நிதி அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லாங் டெர்ம் கில்ட் ஃபண்ட் - நேரடி திட்டம் (ஜி)

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லாங் டெர்ம் கில்ட் ஃபண்ட் - நேரடி திட்டம் (ஜி)

இதனுடைய முந்தைய பெயர் ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் கில்ட் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் திட்டமாகும். இதனுடைய பெயர் 2013 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் மாற்றப்பட்டு ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லாங் டெர்ம் கில்ட் ஃபண்ட் என அழைக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் தற்போதைய நிகரச் சொத்து மதிப்பு ரூ 62.419 ஆகும். மேலும் இந்தத் திட்டமானது கிரிசிலின் மதிப்பீட்டின் அடிப்படையில், நீண்ட காலத் திட்டங்களின் வகைகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 பிஎன்பி பரிபாஸ் அரசாங்க பத்திரங்கள் நிதி - நேரடி திட்டம் (ஜி)

பிஎன்பி பரிபாஸ் அரசாங்க பத்திரங்கள் நிதி - நேரடி திட்டம் (ஜி)

இந்த நிதியின் தற்போதைய நிகரச் சொத்து மதிப்பு ரூ15.572 ஆகும். இது நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு உகந்த முதலீடாகக் கருதப்படுகின்றது. திரவ மற்றும் பத்திர நிதிகள் போன்ற கடன் சார்ந்த நிதிகளை ஒப்பிடும் பொழுது இது மிதமான மற்றும் குறைந்த அபாயத்தைக் கொண்டுள்ள திட்டமாகக் கருதப்படுகின்றது. இது சராசரியான மற்றும் நடுத்தர வர்க்க இந்திய முதலீட்டாளர்களிடையே இந்தத் திட்டத்தின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது.

 கோட்டாக் கில்ட் முதலீட்டுத் திட்டம் - வழக்கமான - நேரடி திட்டம் (ஜி)

கோட்டாக் கில்ட் முதலீட்டுத் திட்டம் - வழக்கமான - நேரடி திட்டம் (ஜி)

இந்த நிதியின் தற்போதைய நிகரச் சொத்து மதிப்பு ரூ. 61.541ஆகும். இந்த நித்யின் வருவாய் மேலே குறிப்பிடப்பட்ட நிதிகளின் வருவாயை விட மிகவும் குறைவாக உள்ளது. அதாவது முதல் வருட இறுதியில் இதனுடைய வருவாய் மொத்த மதிப்பில் 4.7 சதவீதமாக மட்டுமே இருந்தது. எனவே இந்தத் திட்டத்தின் முழுப் பயனைப் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் இந்தப் பத்திரத்தில் நீண்ட கால நோக்கில் மட்டுமே முதலீடு செய்வது நல்லது.

டிஎஸ்பி பி.ஆர். அரசு பத்திரங்கள் - டி.பி. (ஜி)

டிஎஸ்பி பி.ஆர். அரசு பத்திரங்கள் - டி.பி. (ஜி)

இரண்டு வருட காலப்பகுதியில் இந்தத் திட்டத்தின் வருடாந்திர வருமானம் மிக அதிகமாக அதாவது சுமார் 8 சதவீதம் என்கிற அளவில் உள்ளது. எனவே இத்திட்டம் ஆபத்தை எதிர் கொள்ள விரும்பாத மற்றும் குறுகிய கால நோக்கில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகின்றது. இத்தகைய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் கணிசமான வருவாயை ஈட்ட இயலும்.

ஹெச்.டி.எஃப்.சி கிலிட் ஃபண்ட் - லாங் டிம் பிளான் - நேரடி திட்டம் (ஜி)

ஹெச்.டி.எஃப்.சி கிலிட் ஃபண்ட் - லாங் டிம் பிளான் - நேரடி திட்டம் (ஜி)

இந்தத் திட்டத்தின் தற்போதைய நிகரச் சொத்து மதிப்பு ரூ. 35.803 ஆகும். எனவே இந்தத் திட்டத்தோடு கூடிய ஆபத்துக்களும். சற்றே அதிகம் எனக் கருதப்படுகின்றது. நீண்ட கால நோக்கில் அதிக வருவாயை ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களின் முதல் விருப்பமாக இந்தத் திட்டம் இருக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் முழுமையான வருமானம் குறைந்தபட்சமாக ரூ 1.0 முதல் அதிகபட்சமாக ரூ19.6 வரை இருக்கின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Gilt Edged Funds In India

Best Gilt Edged Funds In India
Story first published: Friday, May 4, 2018, 19:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X