ஆன்லைன் மூலமாக முதலீட்டாளர்கள் எஸ்ஐபி தவணையினைச் செலுத்தலாம் என்ற போதே மியூச்சிவல் ஃபண்ட் எளிமையாக்கப்பட்டுவிட்டது. இதன் அடுத்தக் கட்டமாக விரிச்சுவல் பேமெண்ட் முகவரிகளை உள்ளிட்டு எளிதாக யூபிஐ செயலி மூலமாகவும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி தவணையினைச் செலுத்த கூடிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யாரெல்லாம் இந்தச் சேவையினைப் பயன்படுத்தலாம்?
மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் அல்லது நீண்ட காலமாகவே முதலீடு செய்பவர்கள் என அனைவரும் யூபிஐ மூலமாக மொத்தமாக அல்லது எஸ்ஐபி தவணையாகப் பணத்தினைச் செலுத்தலாம்.
இந்தச் சேவையினைப் பெற என்ன செய்ய வேண்டும்?
யூபிஐ சேவையினைப் பயன்படுத்த உங்கள் வங்கி கணக்கில் அதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் கொண்ட போனில் பிம் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் முன்பு விரிச்சுவல் பேமெண்ட் முகவரி போன்ற விவரங்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
தேவையான விவரங்கள்
முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் பரிவர்த்தனையினைத் தேர்வு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலமாக முதலீடு செய்து வருபவர்கள் அவர்களது லாக் இன் விவரங்களை அளித்து முதலீட்டு போர்ட்போலியோவை அணுகலாம். அடுத்து முதலீட்டாளர் கூடுதலாக வாங்குதல் அல்லது புதிய திட்டங்களை வாங்கும் போது ஃபண்டுகளைத் தேர்வு செய்து எவ்வளவு முதலீடு செய்ய உள்ளார் என்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
பணம் செலுத்தும் முறை
பணத்தினைச் செலுத்தும் தெரிவைத் தேர்வு செய்யும் போது முதலீட்டாளர் யூபிஐ-ஐ கிளிக் செய்ய வேண்டும். பின்னர் முதலீட்டாளர் யூபிஐ விரிச்சுவல் ஐடியினை உள்ளிட்டுப் பணத்தினைச் செலுத்த அனுமதிக்கப்படுவார்.
அனுமதி
யூபிஐ விரிச்சுவல் ஐடியினை அளித்த பிறகு பிம் செயலிக்கு நிலுவையில் உள்ள யூபிஐ பரிவர்த்தனைக்கான கோரிக்கை வரும். அங்குத் தான் செலுத்த வேண்டிய நிலுவை தொகைகள் என்பதைத் தேர்வு செய்தால் மியூச்சுவல் ஃபண்டு பரிவத்தனை தோன்றும். அதனைக் கிளிக் செய்து முதலீட்டாளரால் வெற்றிகரமாகப் பணத்தினைச் செலுத்த முடியும்.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை
விரிச்சுவல் பேமெண்ட் முகவரி என்பது பயனரால் வங்கி கணக்குடன் இணைப்பை ஏற்படுத்தி மொபைல் பரிவர்த்தனை செய்ய உதவுவதாகும். இதனை பிம் செயலியில் எளிதாக உருவாக்க முடியும். ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை யூபிஐ மூலமாகப் பணம் செலுத்த முடியும்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications