பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ சொத்துக்களை அடைமானத்திற்கு எடுத்துக்கொண்டு கடன் அளிக்கிறது. தனிநபர்களின் சொத்துக்களை அடைமானம் வைத்துப் பணம் பெறலாம் என்றும் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ sbi.co.in இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
பணத் தேவை இருக்கும் போது தங்களிடம் உள்ள சொத்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற்று மாத தவணையில் அவற்றைச் செலுத்தலாம். கடன் மீதான வட்டியானது அவர்கள் பெரும் கடன் தொகையினைப் பொருத்து மாறும்.
எனவே இங்கு எஸ்பிஐ வங்கி வழங்கும் சொத்துக்கள் எதிரான கடனின் வட்டி விகிதம், செயல்பாட்டுக் கட்டணம் போன்றவற்றை இங்குப் பார்க்கலாம்.
சொத்துக்கள் எதிரான கடன்
சொத்துக்கள் எதிரான கடன் என்பது பெரும்பாலும் வீடு அல்லது வணிகக் கட்டிடங்களுக்கு எதிராக வழங்கப்படுகிறது.
எவ்வளவு கடன் வழங்கப்படும்?
எஸ்பிஐ வங்கி குறைந்தது 10 லட்சம் முதல் 7.5 லட்சம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் எதிரான கடனை வழங்குகிறது.
எஸ்பிஐ வங்கியில் யாரெல்லாம் சொத்துக்கள் எதிரான கடனை பெற முடியும்?
குறைந்தது மாத வருமானம் 25,000 ரூபாய் வரை உள்ள தனிநபர்கள் ஆண்டுக்கு 3 லட்வம் ரூபாய் வரை சித்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற முடியும். என்ஆர்ஐ-களும் இந்தத் திட்டம் கீழ் கடனை பெறலாம்.
சொத்துக்கள் யார் பெயரில் எல்லாம் இருக்கலாம்?
சொத்துக்களை அடைமானம் வைக்கும் போது அவை தன் பெயரில் அல்லது, மனைவி/கணவர், குழந்தைகள், பெற்றோர், இரத்த பந்தம் உடையவர்கள் பெயர்களில் இருந்தால் எஸ்பிஐ வங்கி சொத்துக்களுக்கு எதிராகக் கடனை அளிக்கிறது.
வயது வரம்பு
கடன் பெறுபவரின் வயது 70 வயது ஆவதற்குள் சொத்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற்று இருந்தால் அவற்றை மீட்டு எடுத்துவிட வேண்டும் என்றும் எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.
குத்தகை
வீடு அல்லது கடைகளைக் குத்தகைக்கு விட்டு இருந்தால் அது குறித்துச் சட்டப்பூர்வமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டி வரும்.
வட்டி விகிதம் எவ்வளவு?
| Loan Amount | Interest Rate |
|---|---|
| UptoRs. 1 crore | 1.60% above 1 year MCLR |
| Above Rs. 1 crore&uptoRs. 2 crores | 2.10% above 1 year MCLR |
| Above Rs. 2 crores&uptoRs. 5 crores | 2.50% above 1 year MCLR |
செயல்பாட்டுக் கட்டணம்
கடன் தொகையில் 1 சதவீதம் + ஜிஎஸ்டி என அதிகபட்சம் 50,000 ரூபாய் + ஜிஎஸ்டி என எஸ்பிஐ வங்கி சொத்துக்களுக்கு எதிரான கடன் திட்டங்களில் செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications