முதியவர்களுக்கான மலிவு விலை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள்

இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டு சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் நிலையில், இக்காப்பீடு அவசியம் தேவைப்படும் முதியவர்களுக்கான திட்டங்கள், சலுகைகளைக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் முதியவர்களுக்கான மலிவு விலை கிடைக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

பல்வேறு விதமான பலன்களை வழங்கக்கூடிய காப்பீட்டுத் திட்டங்கள் ஏகப்பட்டது இருக்கும் போது, கீழே குறிப்பிட்டுள்ள காப்பீட்டுத் திட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் ஓட்டை விழாமல் பார்த்துக்கொள்ளும்.

இது மருத்துவச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பல கோடி முதியவர்ளுக்குப் பெரிய அளவில் பயனளிக்கும்.

1) பணிபுரியும் உங்கள் மகன்/மகள்-இன் குழு மருத்துவக் காப்பீட்டில் இணைத்துக் கொள்ளுங்கள்

1) பணிபுரியும் உங்கள் மகன்/மகள்-இன் குழு மருத்துவக் காப்பீட்டில் இணைத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் மருத்துவக் காப்பீட்டின் தவணைத்தொகை செலுத்திய நாளில் இருந்து,ஏற்கனவே உள்ள அனைத்து நோய்களுக்கும் சேர்த்தே மருத்துவக் காப்பீடு கிடைக்கும் என்பதால் இது சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் மற்ற பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் 1 முதல் 3 ஆண்டுகள் காத்திருப்புக் காலம் இருக்கும் நிலையில், இதில் காத்திருப்புக் காலம் இல்லை.

ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விசயம் என்னவென்றால், நிறுவனத்தை விட்டு உங்கள் மகன்/மகள் வெளியேறினால் மருத்துவக் காப்பீடும் முடிவுக்கு வந்துவிடும். ஆனாலும், மலிவான விலையில் மருத்துவக் காப்பீடு கிடைப்பதால் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

 

2) வங்கி காப்பீடு

2) வங்கி காப்பீடு

சில பொதுத்துறை வங்கிகள் யூனைட்டேட் இந்தியா, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் போன்ற காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தங்களின் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை வழங்கி வருகின்றன. சில வங்கிகள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளன.

இவ்வகைத் திட்டங்கள் மலிவு விலையில் கிடைப்பதோடு வயதுவரம்பு சலுகைகளும் கிடைக்கின்றன. பொதுவாக 65 வயதில் காப்பீடு எடுக்கும் போது , 5 லட்சம் ரூபாய் காப்பீடு திட்டத்திற்கு ரூ10,000- 20,000 தவணைத்தொகை செலுத்த வேண்டும்.

மேலும் 80 வயது வரை இந்தக் காப்பீட்டுத் திட்டங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

 

குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

ஆனால் குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போல் இல்லாமல், இதில் காத்திருப்புக் காலம் உள்ளது. மேலும் காப்பீட்டு நிறுவனங்களின் வலையமைப்பில் உள்ள மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவம் பார்க்கப்படும்.

ஆனால் இந்தக் காப்பீட்டுத் திட்டங்களில் காப்பீட்டுப் பணத்தைப் பெறும் போது சில தடைகள் இருக்கின்றன. சில சமயங்களில், குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் பகுதி பணத்தைச் செலுத்துமாறு காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளும். மீதியை அவர்கள் செலுத்துவர்.

 

4) மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள்

4) மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள்

பெரும்பாலும் இந்தக் காப்பீட்டுத் திட்டங்களில், 5 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டுக்கு ரூ20,000 முதல் ரூ 40,000 வரை மிக அதிகத் தவணைத்தொகை இருக்கும். மேலும் காப்பீட்டு விண்ணப்பத்தை ஏற்கும் முன்னர் மருத்துவப் பரிசோதனைகள் செய்யவேண்டும்.

குறிப்பிட்ட நோய்களுக்கும் சிகிச்சைகளுக்கும் காப்பீட்டுப் பணத்தைத் திரும்பப் பெற சில வரம்புகளும் உள்வரம்புகளும் உள்ளன. சில சமயங்களில், குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் பகுதி பணத்தைச் செலுத்துமாறு காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+