ஜாயிண்ட் லைப் கவர் என்பது பெயருக்கு ஏற்றார் போலப் பாலிசிதாரர் மற்றும் அவரைச் சார்ந்து உள்ளவர்களுக்கு எனக் கூட்டாகக் காப்பீட்டினை அளிக்கக் கூடிய டெர்ம் இன்சூரன்ஸ் திட்டமாகும்.
இவரைச் சார்ந்துள்ள இரண்டாம் தரப்பினர் என்றால் மனைவி ஆவார். இந்தப் பாலிசியானது கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் செல்வதால் இருவருக்கும் சேர்த்து பாலிசி எடுப்பதற்காகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜாயின்ட் லைப் கவர் பாலிசி அளிக்கும் காப்பீட்டு நிறுவனங்கள்
பிஎன்பி மெட் லைப்
ஆதித்யா பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ்
ஏகோன் இன்சூரன்ஸ்
குறிப்பிட்ட காலம்
இது பொதுவாக ஒரு ஒப்பந்தத்தின் கீழ் இரு பங்குதாரர் உள்ளடக்கியது, பிளைன் டெர்ம் போன்று குறிப்பிட்ட காலத்திற்குப் பிரீமியமை செலுத்திய பிறகும் காப்பீடு இன்னும் சில ஆண்டுகள் வரை கிடைக்கும். ஒருவேலை ஒரு பாலிசிதாரர் இறந்தால் இணை பாலிசிதாரர் பணத்தினைப் பெற முடியும்.
இந்தப் பாலிசியை நீங்கள் வாங்க முடிவு செய்யும் முன்பு அதில் உள்ள நிறை மற்றும் குறைகளை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.
நிறைகள்
1. ஜாயிண்ட் லைப் கவர் திட்டத்தில் முதன்மை பாலிசிதாரார் இறந்தால் அருக்கான காப்பீடு தொகை இணை பாலிசிதாரருக்கு கிடைக்கும். பின்னர் இணை பாலிசிதாரருக்கான ஆயுள் காப்பீடு மட்டும் முதிர்வு காலம் வரை தொடரும். முதன்மை பாலிசிதாரருக்கான பிரீமியம் தொகையினைச் செலுத்த தேவையில்லை.
2. நீங்கள் இணை பாலிசிதாரர் இறந்த விட்டால் என்ன ஆகும் என்று நீங்கள் கேட்பீர்கள். ஒருவேலை இணை பாலிசிதாரர் முன்பு கூறியது போன்றே முதன்மை பாலிசிதாரருக்கு காப்பீடு தொகை அளிக்கப்படும். பின்னர் முதன்மை பாலிசிதாரருக்கான காப்பீடு மற்றும் பிரீமியம் மட்டும் முதிர்வு காலம் வரை தொடரும்.
3. இணை பாலிசிதாரருக்கு வருமானம் ஏதுமில்லை என்றால் பிரைமரி பாலிசிதாரரின் காப்பீடு 50 லட்சம் அல்லது அதற்கும் அதிகம் என்றால் உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில் இருந்து 25 முதல் 50 சதவீதம் வரை இணை பாலிசிதாரருக்குப் பாதுகாப்பு நீட்டிக்கப்படும் வழியும் உண்டு.
குறைபாடுகள்
1. பெரும்பாலும் முதன்மை பாலிசிதாரரின் உறுதியளிக்கப்பட்ட தொகையானது 50 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே இந்தப் பாலிசிய பெற முடியும்.
2. கூட்டாக இல்லாமல் இருவருக்கும் தனித்தனியாகப் பாலிசியை வாங்கினால் மிகப் பெரிய நன்மைகள் மற்றும் நெகிழ்வு தன்மையும் கிடைக்கும்.
3. பிரீமியம் அம்சத்தைக் கருத்தில் கொண்டால் இணை பாலிசிதாரர் வேலை செய்துகொண்டு இருக்கும் போது பெரியதாகப் பிரீமியம் தொகையில் தள்ளுபடி கிடைக்காது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications