பணத்தை இரட்டிப்பாக்க எத்தனை வருடம் வேண்டும் தெரியுமா..?

நிதி முதலீடுகள் என வரும் போது ஏராளமான அறிவுரைகள், பல ஆலோசனைகள், நிறைய டிப்ஸ்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிவரும். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை புரிந்துகொள்ளக் கடினமாக இருப்பதால் நாம் தவிர்த்து விடுவோம்.

ஒருவர் தனது முதலீட்டில் இருமடங்கு அல்லது மும்மடங்கு லாபம் எதிர்பார்க்கும் போதோ அல்லது நிலையான வருங்காலத்திற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதையோ எளிதாகப் புரிந்துகொள்ள, சில அடிப்படை கணித விதிகளைப் பயன்படுத்தலாம். எனவே ஒரு சாதாரணக் கால்குலேட்டரை எடுத்து ஆய்வைத் துவங்குங்கள்.

1) விதி 72

1) விதி 72

உங்கள் முதலீடு இரட்டிப்பாக எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கண்டறியும் எளிய வழிமுறை இது. 72ஐ உங்களுக்கு வழங்கப்படும் ஆண்டு வட்டிவிகிதத்தால் வகுத்தால், உங்கள் பணம் இரட்டிப்பாக எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதைக் கூறும்.

எடுத்துக்காட்டாக, ரூ1000யை 8% ஆண்டு வட்டி விகிதத்தில் முதலீடு செய்யும் போது, (72/8 =9) 9ஆண்டுகள் கழித்து ரூ2000 ஆக இரட்டிப்பாகும்.

 

2) 114 விதி

2) 114 விதி

உங்கள் முதலீடு மும்மடங்காக எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கண்டறியும் எளிய வழிமுறை இது.114ஐ உங்களுக்கு வழங்கப்படும் ஆண்டு வட்டி விகிதத்தால் வகுத்தால், உங்கள் பணம் மும்மடங்காக எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதைக் கூறும்.

எடுத்துக்காட்டாக, ரூ1000யை 8% ஆண்டு வட்டி விகிதத்தில் முதலீடு செய்யும் போது, (114/8 =14.25) 14.25 ஆண்டுகள் கழித்து ரூ3000 ஆக மும்மடங்காகும்.

 

3)144 விதி

3)144 விதி

உங்கள் முதலீடு நான்மடங்காக எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கண்டறியும் எளிய வழிமுறை இது.மேலே கூறிய அதே முறையில் 144ஐ உங்களுக்கு வழங்கப்படும் ஆண்டு வட்டிவிகிதத்தால் வகுத்தால், உங்கள் பணம் நான்மடங்காக எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதைக் கூறும்.

 4)50:20:30 விதி

4)50:20:30 விதி

பொதுவான விதியான இதன் மூலம் குறிப்பாக இளைஞர்கள் தங்களின் சம்பாத்தியத்தைச் சிறப்பாக மேலாண்மை செய்ய உதவுகிறது.

இந்த விதியின் படி, அனைத்து வரிபிடித்தங்களுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த சம்பளத்தில், 50%ஐ உணவு, கட்டணங்கள் போன்ற அன்றாடத் தேவைகளுக்குச் செலவாளிக்க வேண்டும். 20%ஐ குறுகிய கால முதலீடுகள் மற்றும் அவசரக்கால நிதிக்கும் பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள 30%ஐ நீண்ட கால முதலீடுகளுக்காக ஒதுக்க வேண்டும். இந்த விதியை நினைவில் வைத்துக்கொண்டால் உங்களால் சிறப்பாகச் சேமிக்க முடியும்.

 

5)100ல் வயதில் கழித்தல் விதி

5)100ல் வயதில் கழித்தல் விதி

உங்கள் வயதுக்கு ஏற்ற ஆபத்தை எதிர்கொள்ள இந்த விதியைப் பயன்படுத்தலாம். இதன் படி, 100லிருந்து உங்கள் வயதைக் கழிக்கும் போது கிடைக்கும் எண்ணை சதவீதமாகக் கருதி, அவ்வளவு சதவீத நிதியைப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு மாதமும் ரூ5000ஐ நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிடுகிறீர்கள் மற்றும் உங்கள் வயது 20 என்றால், (100-20=80) ரூ5000ல் 80%ஐ பங்குகளில் முதலீடு செய்யவேண்டும். மிதமுள்ளதைப் பாதுகாப்பான வகையில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, வயது அதிகரிக்க அதிகரிக்க ஆபத்தான முதலீடுகளைக் குறைக்க வேண்டும்.

 

6)எதிர்கால மதிப்பு

6)எதிர்கால மதிப்பு

முதலீடு செய்யும் போது பணவீக்க காரணியைக் கண்டிப்பாகக் கருத்தில் கொள்ளவேண்டும். தற்போது ரூ10,000க்கு உள்ள மதிப்பு, எதிர்காலத்தில் இருக்குமா எனச் சொல்ல முடியாது.

உங்களின் வாங்கும் திறன் குறையும் என்பதால், இதே ரூ10000 க்கு எதிர்காலத்தில் என்ன மதிப்பு எனக் கணக்கிட்டு, நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தால் பலன் கிடைக்குமா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்கால மதிப்பு = நிகழ் மதிப்பு(1 r/100)n.

இங்கே r என்பது, ஆண்டுப் பணவீக்க மதிப்பையும், n என்பது உங்கள் பொருளாதார லட்சியங்களை அடைய மீதமுள்ள காலத்தையும் குறிக்கிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+