நீண்ட கால முதலீடுகள் மூலம் திடீர் பணம் தேவையைப் பூர்த்திச் செய்யும் சூப்பரான வழிகள்..!

உங்கள் வாழ்வின் முக்கிய லட்சியங்களை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெறுவது, உங்களின் பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும். ஆனால் நீண்ட கால முதலீட்டில் உள்ள சில அம்சங்கள் உங்களின் குறுகிய காலத் தேவைகளை எளிதாகப் பூர்த்திச் செய்ய முடியும்.

இப்படிப்பட்ட சில முக்கியமான தகவல்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

1) பொது வருங்கால வைப்புநிதி (Public Provident Fund )

1) பொது வருங்கால வைப்புநிதி (Public Provident Fund )

தீர்வு1: முதிர்ச்சிக்கு முன்பே திரும்பப்பெறுதல்

பொது வருங்கால வைப்புநிதிக்கான கால அளவு 15 ஆண்டுகள். 7வது நிதியாண்டில் பகுதி பணத்தைத் திரும்பப்பெறுவது அனுமதிக்கப்படுகிறது.

4வது ஆண்டின் இறுதியில் இருக்கும் மொத்த பணத்தில் 50% அல்லது பணம் எடுப்பதற்கு முந்தைய ஆண்டில் உள்ள மொத்த பணத்தில் 50%, இவ்விரண்டில் எது குறைவோ அந்த அளவு பணத்தை எடுக்கலாம்.

எடுத்துக்காட்டு:

பணம் திரும்பப்பெறும் ஆண்டு : 2018-19
2014-15 ன் இறுதியில் உள்ள இருப்பு: ரூ6 லட்சம்
2017-18 ன் இறுதியில் உள்ள இருப்பு: ரூ8 லட்சம்

அனுமதிக்கப்பட்ட பணம் : ரூ3லட்சம்

தீர்வு 2 : கடன்

3வது மற்றும் 6வது நிதியாண்டுக்கு மத்தியில் கடன் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடன் கேட்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இருப்பில் 25% பணத்தை அதிகபட்ச கடனாகப் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

கடனுக்கு விண்ணப்பிற்கும் ஆண்டு: 2018-19
2016-17ன் இறுதியில் உள்ள இருப்பு: ரூ3 லட்சம்

அனுமதிக்கப்பட்ட கடன் : ரூ75,000

தீர்வு 3: முதிர்ச்சி காலத்திற்கு முன்பு கணக்கை முடித்தல்

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளின் கல்வி அல்லது பெற்றோர், குழந்தைகள்/உங்களின் உயிர் காக்கும் மருத்துவச் செலவு போன்றவற்றிற்காக முன்கூட்டியே கணக்கை முடிக்கலாம். ஆனால் வட்டி விகிதம் 1% குறைவாக இருக்கும்.

 

2) தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ( Employees’ Provident Fund)

2) தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ( Employees’ Provident Fund)

பதிவுசெய்யப்பட்ட சங்கங்களில் இருந்து வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டவோ, பகுதி பணத்தை மத்தியில் திரும்ப எடுக்கப் பயனர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சந்தாதாரராக இருத்தல் அவசியம் மற்றும் அந்தப் பதிவு செய்யப்பட்ட வீட்டுவசதி சங்கத்தில் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் இருப்பது அவசியம்.

அனுமதிக்கப்பட்ட பணம் : 90% தொழிலாளர் வைப்புநிதி (வாழ்க்கைத்துணையின் பணத்தையும் சேர்த்து) , குறைந்தபட்சம் ரூ20,000.

 

3) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens’ Saving Scheme )

3) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens’ Saving Scheme )

இத்திட்டத்தின் கால அளவு ஐந்தாண்டுகள் என்றபோதும், முதல் அல்லது இரண்டாம் ஆண்டின் இறுதியில் முன்கூட்டியே கணக்கை முடிக்க அனுமதிக்கப்படுகிறது.

அபராதம்: 1 ஆண்டிற்குப் பிறகு வைப்புநிதியில் 1.5%, 2 ஆண்டுகளுக்குப் பிறகு வைப்புநிதியில் 1%

 

 4) நிரந்திர வைப்புநிதி ( Fixed deposits)

4) நிரந்திர வைப்புநிதி ( Fixed deposits)

நிரந்திர மற்றும் தொடர் வைப்புநிதி திட்டங்கள் மிகவும் எளிதாகப் பணமாக மாற்றக்கூடியவை மற்றும் முன்கூட்டியே திரும்பப்பெறக் கூடியவை.

அபராதம்: வைப்புநிதி காலத்தைப் பொறுத்து 0.5% முதல் 1% அல்லது உண்மையான விகிதத்தில் இருந்து 0.5% முதல் 1% குறைவு, இவையிரண்டில் குறைவான ஒன்று அபராதமாக விதிக்கப்படும்.

 

5) SIP பரஸ்பர நிதி ( SIP in mutual funds)

5) SIP பரஸ்பர நிதி ( SIP in mutual funds)

SIP தற்காலிக நிறுத்தம்:

நீங்கள் பண நெருக்கடியைச் சந்திக்கும் போது இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதைத் தற்காலிமாக நிறுத்துவதால் உங்கள் நீண்ட காலப் பொருளாதாரத் திட்டங்கள் பாதிக்கப்படாது.

கால அளவு:
1 முதல் 3 மாதங்கள். இந்தக் காலத்திற்குப் பிறகு மீண்டும் திட்டம் தானாகச் செயல்பாட்டிற்கு வரும். இதை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

 

6) மானிய காப்பீட்டுத் திட்டம் (Endowment policies)

6) மானிய காப்பீட்டுத் திட்டம் (Endowment policies)

உங்களின் மானிய அல்லது இதர காப்பீடு திட்டங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்தியிருந்தால், அதன் பேரில் கடன் பெற முடியும். இந்தக் கடனை காப்பீட்டு நிறுவனம் அல்லது வங்கியில் அந்த ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெறலாம்.

இத்திட்டத்தில் மொத்த மதிப்பில் 80-90% கடனாகப் பெறலாம். வட்டிவிகிதத்தைப் பொறுத்தவரை எல்.ஐ.சி 10% வட்டி விதிக்கிறது. ஒவ்வொரு 6 மாதத்திற்கு வட்டி செலுத்த வேண்டும்.

 

7) யூலிப் (ULIPS)

7) யூலிப் (ULIPS)

ஐந்து ஆண்டுகள் பண முடக்கக் காலம் உள்ள இந்தத் திட்டத்தில், அதற்குப் பின்பு பகுதியாக அல்லது முழுவதுமாகப் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

செலுத்திய ப்ரீமியத்தில் 10 முதல் 20% வரை அல்லது மொத்த மதிப்பில் 25%. இது உங்கள் காப்பீடு நிறுவனம் மற்றும் அதன் விதிமுறைகளைப் பொறுத்தது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+