லைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராகக் கடன் பெற முடியுமா..?

நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு நம்முடைய அன்புக்கு உரியவர்களை நம்முடைய கண்ணின் மணி போன்று பாதுகாத்து வருகின்றோம். நம்முடைய ஆயுளுக்குப் பிறகும் அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க ஆயுள் காப்பீடு செய்கின்றோம். இத்தகைய ஆயுள் காப்பீடு என்பது நம்முடைய மரணத்திற்குப் பின்னர் நம்முடைய அன்புக்கு உரியவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகின்றது.

ஆயுள் காப்பீடு என்பது நம்முடைய மரணத்திற்குப் பிறகே செயல்பட்டு நம்முடைய அன்புக்குரியவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகின்றது. எனினும் இத்தகைய ஆயுள் காப்பீடுகளால், காப்பீடு செய்த நமக்கு ஏதேனும் பயன் உண்டா? நம்முடைய கடினமான நிதிச் சூழலில் ஆயுள் காப்பீடுகளினால் ஏதேனும் பயன் கிடைக்குமா? இந்தக் கேள்விகள் நாம் அனைவரின் முன்னர்த் தொக்கி நிற்கின்றது.

 கடன் பெறும் வாய்ப்பு

கடன் பெறும் வாய்ப்பு

சில நேரங்களில் மக்கள் அனைவரும் தங்களுடைய அவசர செலவினங்களையும் தேவைகளையும் பூர்த்திச் செய்யப் பணத்தைத் தேடுகின்றனர். அத்தகைய சூழலில் நாம் அனைவரும் நம்முடைய ஆயுள் காப்பீடுகளைத் திரும்ப ஒப்படைத்து (Surrender) பணத்தைப் பெறுகின்றோம்.

எனினும் இது அதிகச் செலவு பிடிக்கும். எனவே இது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகக் கருதப்படுவதில்லை. இதற்கு மாற்றாக ஆயுள் காப்பீட்டை பயன்படுத்திக் கடன் பெறலாம். அதோடு ஆயுள் காப்பீட்டை பயன்படுத்திச் சிக்கலான நோய்களுக்கான ரைடர் பாலிசி அல்லது விபத்துப் பெனிஃபிட் ரைடர் பாலிசி ஆகியவற்றைப் பெறலாம்.

 

பிரீமிய தொகை

பிரீமிய தொகை

அதோடு பாலிசிக்கான பிரீமியத்தைத் தொடர்ந்து செலுத்த விரும்பாத ஒரு நபர் தான் ஏற்கனவே செலுத்திய காப்பீடு பிரீமியத்தைப் பயன்படுத்தி மீதி உள்ள பிரீமியத்தைச் செலுத்தலாம். எனவே ஆயுள் காப்பீட்டைப் பயன்படுத்தி, பாலிசி எடுத்த நபர் பல்வேறு நன்மைகளைப் பெற இயலும். நாம் இந்தக் கட்டுரையில் காப்பீட்டு பாலிசியைப் பயன்படுத்தி எவ்வாறு கடன் பெறுவது என்பதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம்.

 காப்பீட்டு பாலிசிக்கு எதிரான கடன்

காப்பீட்டு பாலிசிக்கு எதிரான கடன்

இந்த வசதி ஆயுள் காப்புறுதிக் திட்டங்களுக்கு மட்டுமே கிட்டும். எனினும், காலக் காப்பீட்டுக் கொள்கைகள் அல்லது யூலி போன்ற திட்டங்களுக்கு இந்த வசதி கிடையாது. எண்டூமென்ட் திட்டம், மனி பேக் திட்டம் போன்ற பாரம்பரிய காப்பீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தியும் நாம் கடன் பெறலாம்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், ஆயுள் காப்பீடு திட்டங்களைப் பயன்படுத்திக் கடன் வாங்கிய பிறகு, பாலிசிதாரர்கள் காப்பீட்டிற்கான பீரிமியக் கட்டணத்தைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்தாவிட்டால், சில காப்பீடு நிறுவனங்கள் ஆயுள் காப்பீடு திட்டங்களை ரத்துச் செய்து விடும்.

 

வரிச் சலுகை

வரிச் சலுகை

ஆயுள் காப்பீடு திட்டங்களைப் பயன்படுத்தி, கடன் பெற்ற பின்னரும், பாலிசிதாரருக்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும். ஏனெனில் அவர் தன்னுடைய வாழ்வை ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் பாதுகாத்துள்ளார்.

 உங்களுடைய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்?

உங்களுடைய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்?

அதிகபட்ச கடன் தொகை கணக்கிட, சில காப்பீட்டு நிறுவனங்கள் பின்வருபவனவற்றைக் கருத்தில் கொள்கின்றன. காப்பீடு திட்டத்தின் வகை மற்றும் அதனுடைய சரண்டர் மதிப்பு. சரண்டர் மதிப்பு என்பது ஒருவர் தன்னுடைய காப்பீடு திட்டத்தை அதனுடைய முதிர்ச்சி அடையும் காலத்திற்கு முன்பே திரும்ப ஒப்படைத்தால் அவருக்குக் கிடைக்கும் தொகை ஆகும்.

பாலிசிதாரரால் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத் தொகை

பாலிசிதாரரால் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத் தொகை

இந்தத் திட்டத்தில் கிடைக்கக் கூடிய கடனின் அதிகபட்ச மதிப்பு என்பது ஒருவருடைய காப்பீடு திட்டங்களின் வகை மற்றும் அந்தக் காப்பீடு திட்டத்தின் சரண்டர் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தது. இதில் கிடைக்கக் கூடிய கடன் அளவு என்பது பொதுவாகக் காப்பீடு திட்டத்தைச் சரண்டர் செய்தால் கிடைக்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாகக் கருதப்படுகின்றது. காப்பீடு திட்டத்தின் சரண்டர் மதிப்பு என்பது ஒரு காப்பீடு திட்டத்தை அதனுடைய முதிர்வு காலத்திற்கு முன்னர்த் திரும்ப ஒப்படைக்கும் போது கிடைக்கும் தொகை ஆகும்.

 30% போனஸ்

30% போனஸ்

காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்து பாலிசியின் சரணடைதல் மதிப்பு அதிகரிக்கும். ஏனெனில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்தப் பாலிசிக்கு கிடைக்கும் போனஸ் அந்தப் பாலிசியுடன் இணைந்து, அதனுடைய சரண்டர் மதிப்பை அதிகரிக்கும். பொதுவாகக் காப்பீடு திட்டங்களுக்குப் பாலிசி மதிப்பில் 30% போனஸ் கிடைக்கின்றது.

கடன் அளவீடு

கடன் அளவீடு

பாரம்பரிய திட்டங்களான பணம் திரும்பப் பெறும் திட்டம் அல்லது நிவாரணம் காப்பீட்டுத் திட்டங்களில், சரண்டர் மதிப்பில் 80% முதல் 90% வரை கடன் கிடைக்கும். உதாரணமாக, உங்களிடம் ரூ 20 லட்சம் தொகைக்குக் காப்பீடு உள்ளது மற்றும் அதனுடைய தற்போதைய சரண்டர் மதிப்பு ரூ 5 லட்சம் என்றால், உங்களுக்கு 4 முதல் 4.5 லட்சம் வரை கடன் கிடைக்கும்.

50% தொகை

50% தொகை

ஒரு சில காப்பீட்டு நிறுவனங்கள், நீங்கள் இதுவரை செலுத்திய மொத்த பிரீமியத் தொகையின் அடிப்படையில் அதிகபட்சமாக 50% வரை கடன் தருகின்றன. உதாரணமாக உங்களிடம் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு காப்பீட்டு இருக்கின்றது என வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் இது வரை அந்தக் காப்பீடு திட்டத்திற்காக இதுவரை சுமார் 8 லட்ச ரூபாய்ப் பிரீமியமாகச் செலுத்தியுள்ளீர்கள் எனில் உங்களுக்குச் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும்.

காப்பீடு திட்டங்களுக்கு எதிரான கடனுக்கான வட்டி

காப்பீடு திட்டங்களுக்கு எதிரான கடனுக்கான வட்டி

கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் கடனின் மற்ற நிபந்தனைகள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் காப்பீடு திட்டங்களைப் பொருத்து மாறுபடும். எனவே ஒருவர் காப்பீடு திட்டங்களைப் பயன்படுத்திக் கடன் வாங்குவதற்கு முன்னர் அதைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

காப்பீட்டு நிறுவனங்கள் 8% -12% வட்டி வரம்பில் கடன் வழங்குகின்றன. மேலும் இந்த வட்டி விகிதங்கள் ஆண்டுதோறும் திருத்தப்படுகின்றன. வழக்கமாக வட்டி என்பது 3 மாதம், 6 மாதம் மற்றும் 1 வருட இடைவெளியில் வசூலிக்கப்படுகின்றன. ஒரு சில காப்பீடு நிறுவனங்கள் நீங்கள் கண்டிப்பாக 6 மாத காலத்திற்கு வட்டி செலுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை விதிக்கின்றன. இந்த வட்டி விகிதம் தனிநபர் கடன்களுடன் ஒப்பிடும் போது மிகவும் சிக்கனமானது. பொதுவாகத் தனிநபர் கடன்களுக்கு 13% -15% வட்டி விதிக்கப்படுகின்றன.

 

 காப்பீடு திட்டங்களுக்கு எதிராக எவ்வாறு கடன் பெறுவது?

காப்பீடு திட்டங்களுக்கு எதிராக எவ்வாறு கடன் பெறுவது?

இந்தக் கடன் திட்டத்தில், கடனுதவி வழங்கல் கட்டணம் என்பது பொதுவாகக் கடன் தொகையில் 0% முதல் 3% ஆக உள்ளது. சில காப்பீடு நிறுவனங்கள் கடனுதவி வழங்கல் கட்டணமாக ஒரு தட்டையான கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்தக் கடன் வகையில், கடன் வழங்கும் நடைமுறை மிகவும் எளிமையானது. எனவே நீங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த நாளில் இருந்து 2 முதல் 7 நாட்களில் கடன் வழங்கப்படும். காப்பீடு திட்டங்களுக்கு எதிராகக் கடன் பெற உங்களுடைய சிபில் மதிப்பெண் சரிபார்க்கப் படமாட்டாது. எனவே, இந்தத் திட்டத்தில் குறைந்த சிபில் மதிப்பெண் உடையவர்களும் கடன் பெறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+