எஸ்பிஐ, ஐசிஐசிஐ & எச்டிஎப்சி வங்கிகளில் இந்த சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லாத சேமிப்பு கணக்குகளைத் தொடங்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

 

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைத் தக்க வைத்துக் கொள்ளச் சிரமப்படுபவர்களுக்கு ஒரு தீர்வு :

அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கிற்கு (Basic Savings Bank Deposit Account) குறைந்தபட்ச இருப்புத் தொகையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. இவ்வகையான வங்கிக் கணக்கினை பெரும்பாலான முன்னணி வங்கிகளில் தொடங்கலாம். இவ்வங்கிக் கணக்கினை வைத்திருக்கின்ற வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் அதற்காக வங்கிகள் அபாராதத் தொகை விதிக்காது.

இந்த வசதியை வழங்கும் முன்னணி வங்கிகள்

இந்த வசதியை வழங்கும் முன்னணி வங்கிகள்

பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி போன்ற முன்னணி வங்கிகள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லாத, அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கினைத் (Basic Savings Bank Deposit Account) தொடங்க வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன.

இவ்வங்கிகள் வழங்குகின்ற BSBD வங்கிக் கணக்கின் நன்மைகள் குறித்து இனிக் காண்போம்

 

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கின் சிறப்பு அம்சங்கள்

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கின் சிறப்பு அம்சங்கள்

பாரத ஸ்டேட் வங்கி, இவ்வகையான கணக்கினைத் தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் மூலம் பயன்படுத்தக் கூடிய ரூபே (RuPay ) டெபிட் கார்டுகளை எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்குகின்றது. இணையம் வழியாகப் பணப் பரிமாற்றம் செய்யக் கூடிய ஆர்டிஜிஎஸ்/என்ஈஎப்டி போன்ற செயல்பாடுகளுக்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்குகின்ற காசோலைகளை டெபாசிட் செய்வதற்கும், பணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. நீண்ட காலமாகச் செயல்படாத வங்கிக் கணக்குகளை மீண்டும் இயக்குவதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதே போன்று இவ்வகையான வங்கிக் கணக்குகளை மூடுவதற்கும் எவ்விதக் கட்டணமும் SBI வசூலிப்பதில்லை.

மாதம் ஒன்றுக்கு நான்கு முறை மட்டுமே…
 

மாதம் ஒன்றுக்கு நான்கு முறை மட்டுமே…

ஏ.டி.எம், மூலமாகவோ, இணையம் வழியான ஆர்டிஜிஎஸ்/என்ஈஎப்டி பரிமாற்றம் வழியாகவோ, வங்கிக் கிளையின் மூலமாகவோ பணம் எடுத்தல், பணப்பரிமாற்றம் செய்தல், மாதத் தவணை செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகளை அதிகப்பட்சமாக ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே இவ்வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ள முடியும்.

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கிற்கான வட்டி விகிதங்கள்

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கிற்கான வட்டி விகிதங்கள்

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கிற்கான வட்டி விகிதங்கள் ஏறக்குறைய சேமிப்புக் கணக்கிற்கான (savings bank accounts) வட்டி விகிதங்களைப் போலவே இருக்கும். இந்தக் கணக்கில் உள்ள ஒரு கோடி ரூபாய் வரையிலான இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படும். இதுவே சேமிப்புக் கணக்காக இருந்தால் வட்டி விகிதம் 4 சதவிகிதமாக இருக்கும்.

ஐசிஐசிஐ  வங்கி வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கில் உள்ள நன்மைகள்

ஐசிஐசிஐ வங்கி வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கில் உள்ள நன்மைகள்

ஐசிஐசிஐ வங்கி, இவ்வகையான வங்கிக் கணக்கிற்குக் கணக்குத் தொடங்கிய கிளை வங்கியை அடிப்படையாகக் கொண்ட பாஸ் புத்தகத்தை இலவசமாக வழங்குகின்றது. ஐசிஐசிஐ டெபிட் கார்டுகள் மூலமாகத் தினமும் 10000 ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது செலவு செய்து கொள்ளலாம். எஸ்பிஐ வங்கியோடு ஒப்பிடும் பொழுது இவ்வகையான கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்குகின்ற பரிவர்த்தனை வசதிகள் குறைவுதான்.

இலவச காசோலைப் புத்தகம்

இலவச காசோலைப் புத்தகம்

ஐசிஐசிஐ வங்கி இவ்வகையான வங்கிக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 15 தாள்களைக் கொண்ட காசோலைப் புத்தகத்தை இலவசமாக வழங்குகின்றது. கூடுதலாகத் தேவைப்படும் காசோலைப் புத்தகங்கள் (15 தாள்கள் கொண்டவை) ஒவ்வொன்றுக்கும் 30ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இணையம் வழியான வங்கிச் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஐசிஐசிஐ  வங்கி வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கிற்கான வட்டி விகிதங்கள்

ஐசிஐசிஐ வங்கி வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கிற்கான வட்டி விகிதங்கள்

ஐசிஐசிஐ வங்கி வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கிற்கான வட்டி விகிதங்கள் சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகதங்களைப் போலவே உள்ளன. 50 இலட்சம் வரையிலான இருப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 3.5 சதவிகிதம் வரையிலான வட்டி வழங்கப்படுகிறது. 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட இருப்புத் தொகைக்கு 4 சதவிகித வட்டி வழங்கப்படும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு நாளின் முடிவிலும் உள்ள இருப்புத் தொகைக்கு ஏற்ப வட்டி நிர்ணயம் செய்யப்படும்.

 எச்டிஎப்சி வங்கி வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கில் உள்ள நன்மைகள்

எச்டிஎப்சி வங்கி வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கில் உள்ள நன்மைகள்

எச்டிஎப்சி வங்கி இவ்வகையான கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் லாக்கர் மற்றும் சூப்பர் சேமிப்பு (Super Saver) ஆகிய வசதிகளை வழங்குகின்றது. இலவச பாஸ் புத்தகம், வங்கிக் கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் மற்றும் காசோலைகளைச் செலுத்தும் வசதி, ரூபே கார்டு, மின்னஞ்சல் மூலம் அறிக்கைகளைப் பெறும் வசதி ஆகியவற்றை இவ்வங்கி வழங்குகிறது. ஏ.டி.எம், மூலமாகவோ, இணையம் வழியான ஆர்டிஜிஎஸ்/என்ஈஎப்டி பரிமாற்றம் வழியாகவோ, வங்கிக் கிளையின் மூலமாகவோ பணம் எடுத்தல், பணப்பரிமாற்றம் செய்தல், மாதத் தவணை செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகளை அதிகப்பட்சமாக ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே எச்டிஎப்சி வங்கி வழங்கும் ஜீரோ மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ள முடியும்.

 நான்கு முறைக்கு மேல் எடுத்தால் கணக்கு மாறிவிடும்

நான்கு முறைக்கு மேல் எடுத்தால் கணக்கு மாறிவிடும்

ஒரு வேளை, ஒருமாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் இத்தகைய கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் இந்த அடிப்படை வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றப்படும். அப்படி மாற்றப்பட்டால், சேமிப்புக் கணக்கிற்கு உரிய விதிமுறைகள்தான் இந்தக் வங்கிக் கணக்கிற்கும் பொருந்தும். இணையதள வங்கி சேவை, போன் பாங்க்கிங் மற்றும் மொபைல் பாங்க்கிங் மூலமாக இருப்புத் தொகையை அறிந்து கொள்ளும் வசதி, பணம் செலுத்தும் வசதி, காசோலையை நிறுத்தி வைக்கக் கோரும் வசதி ஆகியவற்றையும் இத்தகைய வங்கிக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கி வழங்குகிறது.

எச்டிஎப்சி வங்கி ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கிற்கான வட்டி விகிதங்கள்

எச்டிஎப்சி வங்கி ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கிற்கான வட்டி விகிதங்கள்

50 இலட்சம் மற்றும் அதற்கும் அதிகமான இருப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. 50 இலட்சத்திற்கும் குறைவான இருப்புத் தொகைக்கு 3.5 சதவிகித வட்டியை வழங்குகிறது. இரண்டுக்குமே சேமிப்புக் கணக்குக்கு உள்ளது போலவே வட்டி விகிதங்கள் அமைந்துள்ளன.

பிற வங்கிக் கணக்குகள்

பிற வங்கிக் கணக்குகள்

மேற்கண்ட வங்கிகள், சேமிப்புக் கணக்கு, சுழல் வைப்புநிதிக் கணக்கு (recurring deposit) மற்றும் நிலையான வைப்புநிதிக் கணக்கு (fixed deposit accounts) போன்ற கணக்குகளைத் தொடங்கவும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கின்றன. முன்னணி வங்கிகள் மட்டும் அல்லாமல் சிறிய சேமிப்பு வங்கிகளும்கூட இத்தகைய கணக்குகளைத் தொடங்கும் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zero Balance Accounts In SBI, ICICI Bank, HDFC Bank

Zero Balance Accounts In SBI, ICICI Bank, HDFC Bank
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X