நீண்டகால முதலீடுகள் தான் எப்போதும் அதிகப் பலன்களைத் தரவல்லது. ஆனால் குறைந்த கால முதலீடுகள் எப்போதும் வீண் என்று எண்ணி விடக்கூடாது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் பணம் எப்போது வேண்டுமானாலும் வெகுவிரைவில் தேவைப்படும் என நினைத்தால் 1 வாரம் முதல் 3 ஆண்டுகள் வரையிலான குறுகிய கால முதலீடுகளைத் தேர்வு செய்யலாம்.
எடுக்காட்டாக நீங்கள் வாங்கும் வீட்டிற்கான பத்திரப்பதிவுக்கு எனப் பணம் வைத்திருக்கும் வேளையில், அப்போது தான் அதன் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தால் அதைக் குறுகிய கால முதலீடாகச் செய்யலாம். குறுகிய கால முதலீட்டிற்காகவே சில திட்டங்கள் உள்ளன. அவை பாதுகாப்பானவையும் தான்.
வங்கி சேமிப்பு கணக்கு (Savings Bank Account)
உடனடி மற்றம் வரப்போகும் செலவுகளைச் சமாளிக்க இந்த முறை தான் சிறந்தது. மேலும் இது குறைவான பலனளிக்கக்கூடியது.
வட்டிவிகிதம் குறைந்தபட்சமாக 3.5% என்ற அளவில் இருக்கலாம். ஆனால் அதிகபட்சமாக 7% வரை கிடைக்கும். யெஸ் வங்கி, கோடாக் மகேந்திரா வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, ஆர்.பி.எல் வங்கி போன்ற வங்கிகள் 3.5% க்கும் அதிகமான வட்டியை வழங்குகின்றன.
மேலும் இம்முறையில் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கும் வகையில் அதே நேரம் பாதுகாப்பாகவும் இருக்கும்.
வங்கி நிரந்திர வைப்புநிதி கணக்குகளைப் போல முதிர்ச்சியடையும் முன்னரே திரும்ப எடுத்தால் 1% அபராதம் போன்று இதில் இல்லை.
மேலும் வங்கி சேமிப்புக் கணக்குகளின்மூலம் கிடைக்கும் வட்டிற்கு ரூ10000 வரை வரிவிலக்கும் உண்டு. ஆனால் நிரந்திர வைப்புநிதி கணக்குகளுக்கு வரிச்சலுகைகள் இல்லை.
கே.டி.டி.எப்.சி நிரந்திர வைப்புநிதி திட்டம் (Fixed Deposits from KTDFC)
பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் நிரந்திர வைப்புநிதி திட்டங்கள், குறைந்த கால அளவிற்குக் கிடைக்காது என்ற கருத்தை தவிடுபொடியாக்கி ஒரு வாரம் என்ற குறைந்த காலத்திற்கும் கிடைக்கிறது. குறுகியகால நிரந்திரவைப்புநிதி திட்டங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள இவை நிலையற்ற சேமிப்புகளுக்கு உகந்தவை. வட்டிவிகிதங்கள் குறைவாக இருந்தாலும், சேமிப்பு கணக்குகளை விட அதிகமாகவும், கால அளவு அதிகரிக்கும் போது வட்டிவிகிதமும் அதிகரிக்கும்.
பொதுவாகவே நிறுவனங்களின் வைப்புநிதி திட்டங்கள் பாதுகாப்பற்றவையாக இருந்தாலும், கே.டி.டி.எப்.சி நிரந்திர வைப்புநிதி திட்டத்திற்குக் கேரள அரசு உத்திரவாதம் அளிக்கிறது என்பதால் இது சிறந்தது.கே.டி.டி.எப்.சி நிறுவனம் கேரள அரசுக்கு சொந்தமானது.
இதில் வட்டிவிகிதம் 8-8.5% என்ற அளவில் வழங்கப்படுவதால், குறுகிய மற்றும் நடுத்தரக் கால முதலீட்டிற்கு இது மிகவும் சிறப்பான திட்டம். அது மட்டுமன்றி மிகவும் பாதுகாப்பான முதலீடான இது அதிக லாபத்தையும் தரவல்லது. ஆனால் ரூ5,000 க்கு அதிகமான வட்டிக்கு டிடிஎஸ் வரி பொருந்தும் என்பதை நினைவிற்கொள்ளவும்.
குறுகியகாலப் பரஸ்பர நிதி திட்டங்கள் (Short Term Mutual Funds)
இந்தத் திட்டங்களில் சந்தையில் உள்ள கடன் வகைகளில் முதலீடு செய்யப்படுகிறது. பாதுகாப்பான முதலீடுகளில் சராசரியான லாபம் பார்ப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.
நிரந்திர வைப்புநிதி திட்டங்களை விட நல்ல லாபம் தருவதாக இருந்தாலும் இவை சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீட்டிற்கான கால அளவு 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கும் நிலையில், 6 முதல் 9% வரை லாபம் கிடைப்பதால் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற சேமிப்புகளுக்கு இது சிறந்த திட்டமாக இருக்கும்.
ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் மற்றும் எச்டிஎப்சி மியூட்சுவல் பண்ட் நிறுவனங்கள் வழங்கும் நிலையான முதிர்ச்சியுள்ள பரஸ்பர நிதி திட்டங்களில், அவற்றின் செயல்திறனை எளிதில் கண்காணிக்கலாம் என்பதால் குறைந்த ஆபத்தில் சிறந்த லாபத்தை எதிர்பார்ப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம். இவற்றை ஆபத்துகால நிதியாகவும் பயன்படுத்தலாம்.
கடன் திட்டங்கள் (Debt Instruments)
அரசாங்க பத்திரங்கள், இறையாண்மை மற்றும் பெருநிறுவன பத்திரங்கள், வர்த்தகத் தாள்கள், கருவூல இரசீதுகள் போன்று பலவித கடன் திட்டங்கள் உள்ளன.
இவை நடுத்தரமான ஆபத்தில், நிரந்திர வைப்புநிதியை விடச் சிறந்த லாபத்தைத் தந்தாலும், கால அளவு அதிகமாக இருக்கும். ஆனால் நிலையான கால அளவு இருப்பதால், இறுதியில் கிடைக்கும் லாபத்தை எளிதில் கணக்கிடலாம்.
சமீபத்தில் வெளியான பணக்கொள்கையின் முக்கிய அம்சமே, ரெப்போ வட்டிவிகிதம் 0.25% அதிகரித்து, பணமாக மாற்றுவது நடுநிலையானது ஆகும். இது பத்திர சந்தைக்குச் சாதகமாக அமைந்து, 8% வட்டிவிகிதங்தள் தர வாய்ப்புள்ளது. இதனால் இந்த வகையில் முதலீடு செய்யும் போது கிடைக்கும் லாபத்தின் அளவு அதிகரிக்கும்.
மற்ற குறுகிய கால முதலீட்டுத் திட்டங்கள் (Other Short-term Investment Avenues)
இ.எல்.எஸ்.எஸ், லிக்விட் பண்ட் சிப், ஆர்பிட்ரேஜ் பண்ட் போன்ற பல முதலீட்டுத் திட்டங்கள் நிதி சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இவை பெரும்பாலும் அதிக ஆபத்தானவை மற்றும் அதிக லாபத்தைத் தரக்கூடியவை.
பணத்தை முதலீடு செய்ததில் இருந்து திரும்பப் பெறும் வரையிலான காலம் இந்த நிதிகளின் செயலற்ற நிலை, நிரந்திர வைப்புநிதி திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்களை விட அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications