ஒரே நாளில் ரூ.10,000 கோடிக்கு ஸ்வாஹா சொன்ன இன்ஃபீபீம் பங்குகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே நாளில் ரூ.10,000 கோடிக்கு ஸ்வாஹா சொன்ன இன்ஃபீபீம் பங்குகள்

என்னங்க இப்ப தான் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் சரிவுன்னு சொன்னீங்க, இப்ப இன்னொரு கம்பெனியும் சரிவு லிஸ்டுல வந்துடுச்சு, இப்படி இன்னும் எத்தன கம்பெனிங்க இருக்கு, அந்த லிஸ்டுல நாம வாங்கி இருக்குற கம்பெனிங்களும் வந்துடுமோன்னு தெரியலயே என்கிற பயத்திலேயே முதலீட்டாளர்கள் தங்கள் சந்தை முதலீடுகளை விற்று வெளியேறி வருகின்றனர்.

 

யார் இந்த இன்ஃபீபீம்அவென்யூ

யார் இந்த இன்ஃபீபீம்அவென்யூ

குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் சாஃப்ட்வேர் டெவலெப்மெண்ட் (Software Development), சாஃப்ட்வேர் மெயிண்டனென்ஸ் (Software Maintenance), வெப் டெவலெப்மெண்ட் (Web Development), இ-காமர்ஸ் (E Commerce) போன்ற துறைகளில் பணியாற்றுகின்றன. இந்த நிறுவனம் கடந்த மார்ச் 2016-ல் தான் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இன்ஃபீபீம் அவென்யூ (Infibeam Avenue) இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த வியாழக்கிழமை அன்று சுமாராக 215 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்தது. திடீரென வெள்ளிக் கிழமை காலையே 3.8% இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கிய பங்குகள் அப்படியே சரிவின் ஆழம் அதிகரித்து சுமார் 72.7% வரை பங்கின் விலை சரிந்தது.

ஏன்? என்ன பிரச்னை
 

ஏன்? என்ன பிரச்னை

தன்னுடைய என்.எஸ்.ஐ இன்ஃபினியம் குளோபல் (NSI Infibeam Global) என்கிற துணை நிறுவனம் ஒன்றுக்கு வட்டி இல்லாக் கடனைக் கொடுத்திருக்கிறதாம். அதுவும் எட்டு வருடங்களில் பகுதி பகுதியாகத் திருப்பிச் செலுத்தினால் போதுமானதாம். அந்த துணை நிறுவனத்தின் சொத்துக்கள், வாங்கி இருக்கும் கடன்களை விடக் குறைவாக இருப்பதால் ஒரு மொக்கை நிறுவனமாகவே சந்தை இதைப் பார்க்கிறது. ஒரு மொக்கை நிறுவனத்துக்கு கடன் கொடுக்கும் கம்பெனி வெளங்குமா என்கிற ரீத்யிலேயே பங்கின் விலை சரியத் தொடங்கியது ஒரு காரணம்.

வேற என்ன காரணம்

வேற என்ன காரணம்

இந்த கடன் பிரச்னை போக, இன்ஃபீபீம் நிறுவனத்தின் துணை நிறுவனர் வைத்திருக்கும் பங்குகளை, நிறுவனரல்லாதவர் வைத்திருக்கும் பங்குகள் என்று தங்கள் நிதி நிலை அறிக்கைகளில் தவறாகக் காட்டி இருக்கிறார்கள். இது செபி மற்றும் பங்குச் சந்தை விதிகள் படி தவறு. இந்த தவறும் வெளியே தெரிய, மொத்த விளைவுகளும் முதலீட்டாளர்கள் பணத்தில் எதிரொலித்துவிட்டது.

நஷ்டக் கணக்கு

நஷ்டக் கணக்கு

14,245 கோடி ரூபாயாக இருந்த இந்த பங்குகளின் சந்தை மதிப்பு, அடுத்த சில மணி நேரங்களில் வெறும் 3,900 கோடி ரூபாயாக சரிந்துவிட்டது. வியாழக்கிழமை வர்த்தக நேர முடிவில் சுமார் 200க்கு நிறைவடைந்த வர்த்தகம் அடுத்த நாள், வெள்ளிக்கிழமை காலை 190க்கு வர்த்தகமாகத் தொடங்கி 72 சதவிகிதம் இறக்கம் கண்டு 58 ரூபாய்க்கு வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தது.

மாற்று முதலீடு

மாற்று முதலீடு

இதை எல்லாம் செபி எப்படி சரி செய்து, மக்களின் முதலீடுகளுக்கு என்ன பதுகாப்பு கொடுக்கப்போகிறது எனத் தெரியவில்லை. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை இப்படி நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்து இழப்பதற்கு, சற்று பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது குறித்து யோசிக்கலாமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: crash market share
English summary

10,000 crore loss due to infibeam avenue shares in one day

10,000 crore loss due to infibeam avenue shares in one day(Friday, Sep 28, 2018.
Story first published: Saturday, September 29, 2018, 11:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X