கிசான் விகாஸ் பத்ரா மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான அக்டோபர் - டிசம்பர் காலாண்டு வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. தபால் நிலையங்களில் இருந்து இயங்கி வரும் இந்த நிரந்தர வருவாய் அளிக்கக் கூடிய சேமிப்புத் திட்டங்களில் உங்களுக்கு ஏற்றது எது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
கிசான் விகாஸ் பத்ரா
1988-ம் ஆண்டு விவசாயிகளுக்கு வங்கிகளை அணுகுவதில் இருந்து வந்த சிக்கலினை போக்கவே இந்தக் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இது மிகப் பிரபலமான ஒரு சேமிப்புத் திட்டமாக வளர்ந்து வந்தது. ஆனால் 2011-ம் ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ் பணமோசடி அதிகம் நடைபெறுவதாக நிறுத்திவிட்டனர்.
ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இதில் மேலும் பாதுகாப்பு அம்சங்களைக் கூட்டி மீண்டும் அறிமுகம் செய்துள்ளனர்.
தகுதி
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் தனியாக அல்லது கூட்டாக முதலீட்டினை தொடங்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம். அதிக மதிப்பிலான தொகையினை முதலீடு செய்யும் போது பான் எண் கட்டாயம் ஆகும்.
முதலீடு வரம்பு
குறைந்தது 1,000 ரூபாய் முதல் 1,000 பெருக்கலில் எவ்வளவு வேண்டும் என்றால் வரம்பின்றிக் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
லாபம்
முதலீட்டாளர்களுக்கு 2018 அக்டோபர் 1 முதல் 2018 டிசம்பர் 31-ம் தேதி வரை 7.7 சதவீத லாபம் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் உள்ள பணம் 112 மாதங்களில் இரட்டிப்பாகி கையைகளுக்கு வந்து செறும்.
வரி நன்மைகள்
கிசான் விகாஸ் பத்ரா திடத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை.
தேசிய சேமிப்புப் பத்திரம்
பிக்சட் முதலீடு திட்டமான தேசிய பென்ஷன் திட்டமும் தபால் நிலையத்தில் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சேமிப்பு முறையாகும்.
தகுதி
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முந்தலீடு செய்யும் போது 18 வயது நிறமியிருக்க வேண்டும். இல்லை என்றால் தந்தை/ தாய் / சட்டப்பூர்வமான பாதுகாவலர் கீழ் இதில் முதலீடு செய்யலாம்.
முதலீடு தொகை
தேசிய சேமிப்புப் பத்திரம் திட்டத்தில் குறைந்தது 100 ரூபாய் முதல் 10 பெருக்கலில் முதலீட்டினை துவங்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்று ஏதுமில்லை.
லாபம்
5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் போது 2018 அக்டோபர் 1 முதல் 2018 டிசம்பர் 31 வரை 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும்.
வரி நன்மைகள்
தேசிய சேமிப்பு பத்திர திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு1,50,000 வரை வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரம் இரண்டு திட்டங்களின் வட்டி விகிதமும் ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைக்கப்படுவதால் முதிர்வு காலத்தில் இவ்வளவு தொகை கைகளுக்குத் திரும்ப வரும் என்பதை மட்டும் துல்லியமாக்க கூற முடியாது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications