சியோமி நிறுவனம் மொபைல் போன், டிவி போன்ற பொருட்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது சிறு கடன் அளிக்கும் திட்டத்தினையும் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 6 மாதங்களாகவே இது குறித்துப் பணிகளில் ஈடுபட்டு வந்த சியோமி தற்போது சிறு கடன் அளிப்பதற்காக எம்ஐ கிரெடிட் என்ற செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.
சியோமியின் எம்ஐ சமுகப் பக்கத்தில் இருந்து இந்த எம்ஐ கிரெடிட் செயலியினைப் பதிவிறக்கம் செய்துகொண்டு வங்கிகளை விடப் பல மடங்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாடு
என்ன தான் செயலி மூலம் சியோமி இந்தக் கடன் திட்டத்தினை அறிமுகம் செய்து இருந்தாலும் எம்ஐ தயாரிப்புகள் அல்லது எம்ஐ போன் உபயோகிப்பவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.
சியோமியின் எம்ஐ கிரெடிட் ஆப் மூலம் கடன் பெறுவது எப்படி?
எம்ஐ கிரெடிட் செயலியினை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்த பிறகு எம்ஐ கணக்கினை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். பின்னர் அடிப்படை விவரங்களை அளிப்பதுடன் தேவையான ஆவணங்களையும் பதிவேற்றி, முகவரி மற்றும் மாத சம்பளம் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்க வேண்டும்.
பின்னர் நீங்கள் அளித்த விவரங்கள் சரிபார்க்கப்பட்ட உடன் உங்களுக்குத் தேவையான தொகையின் அளவு, எவ்வளவு காலத்திற்குத் திருப்பிச் செலுத்துவீர்கள் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்க வேண்டும்.
பின்னர் இந்தச் செயலி உங்கள் வங்கி கணக்கினை சரிபார்த்து கடன் தொடையினை அளிக்கும். இவை அனைத்திற்கும் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது தனிச் சிறப்பு.
வட்டி விகிதம்
வங்கி நிறுவனங்கள் தனிநபர் கடன் பெறும் போது ஆண்டுக்கு 10 முதல் 30 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் கீழ் கடன் அளிக்கும் நிலையில் சியோமி நிறுவனம் சிறு கடனை மாதம் 1.8 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
எவ்வளவு தொகை வரை சியோமி கடன் அளிக்கும்?
குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்றும், பணத்தினை எளிதாக இணையதள வங்கி சேவை அல்லது டெபிட் கார்டுகள் மூலம் திருப்புச் செலுத்தலாம் என்றும் சியோமி தெரிவித்துள்ளது.
இணைவு
உடனடி சிறு கடன் திட்டத்திற்காகச் சியோமி நிறுவனம் KreditBee தளத்துடன் இணைந்துள்ளது. இந்தச் சிறு கடன் சேவை மூலம் இந்தியாவில் இளைஞர்கள் எளிதாகக் கடன் பெற்றுத் தங்கள் தேவையினைப் பூர்த்திச் செய்துகொள்ள முடியும் என்றும் அதே போன்று எளிமையாகத் திருப்பிச் செலுத்தவும் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications