45 லட்ச cheque திருட்டு வரி செலுத்திய திருடன், chequeகளை குறிவைக்கும் சூவிங்கம் கும்பல்.!

எங்க சார் பணம் சேஃபா இருக்கும் , பேங்குக்கு பொயிடுங்க சார். அது தான் சேஃப் என்று பேசப்பட்ட உரையாடல்கள் "என்ன சார் பேங்குல சேஃபா இருக்கும்-ன்னு பாத்தா ஆன்லைன்ல திருடிடறாங்க. சரி ஆன்லைனே வேண்டாமுன்னு cheque கொடுத்தா, அதுவும் சரியா கொடுத்த ஆளுங்களுக்கு போய்ச் சேர மாட்டேங்குது" என்று உரையாடல்கள் இன்று புகாரக வெளியில் வரத் தொடங்கி இருக்கிறது. அதற்கு நேரடி சாட்சியம் சென்னை cheque திருட்டு வழக்கு.

ஓப்பன் cheque

ஓப்பன் cheque

cheque இரண்டு வகைப் படும் ஒன்று 1. open cheque 2. crossed cheque. ஓப்பன் செக் எனும் போது யாருக்கு cheque எழுதுகிறோமோ அவர் வங்கியில் cheque கொடுத்து காசை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
உதாரணமாக: ராம், சீதாவுக்கு 18,000 ரூபாய் கொடுக்க வேண்டும், இப்போது சீதா பெயரில் ராம் தன்னுடைய cheque-ஐ கொடுக்கிறார். சீதா ராமின் cheque-ஐ பெற்றுக் கொண்டு நேரடியாக சீதா வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அவளுடைய வங்கிக்கு சென்று cheque-ஐ சமர்பித்தால் கையில் 18,000 ரூபாயை எண்ணிக் கொடுத்துவிடுவார்கள்.

திருட்டு ஸ்டெப் 1

திருட்டு ஸ்டெப் 1

இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், வங்கிக்கு வந்து cheque எழுதுபவர்கள் அருகிலேயே இருந்து யாருக்கு எழுதுகிறார்கள்., எவ்வலவு தொகை எழுதுகிறார்கள், என்ன தேதி போடுகிறார்கள், எந்த வங்கியின் cheque, வங்கிக் கணக்கு விவரங்கள்... ஒரு cheque-க்கு தேவையான அனைத்து விவரங்களையும் நோட்டம் விட்டு குறித்துக் கொள்வார்கள்.

திருட்டு ஸ்டெப் 2

திருட்டு ஸ்டெப் 2

சம்பந்தப்பட்ட நபர் செக் டெபாசிட் செய்யும் டப்பாவில் போட்ட பிறகு மெல்லிய ஈக்குச்சியின் முனையில் சூவிங்கம் ஒட்டி செக் டெபாசிட் டப்பாவில் விட்டு குறி வைத்து cheque-ஐ திருடிவிடுவார்கள். அப்படி செய்ய முடியவில்லை என்றால் குறித்து வைத்த வங்கி விவரங்களைச் சொல்லி அந்த cheque-ஐ தருமாறு டெபாசிட் செய்த வங்கிகளிடமே கெட்டுக் வாங்கிக் கொள்வார்கள்.

திருட்டு ஸ்டெப் 3

திருட்டு ஸ்டெப் 3

இப்போது சில கெமிக்கல்களைப் பயன்படுத்தி cheque சேதம் ஆகாமல் தங்கள் பெயருக்கு அல்லது தாங்கள் வைத்திருக்கும் போலி ஆவணங்களில் இருக்கும் பெயர்களுக்கு cheque-ஐ மாற்றி எழுதுவார்கள். குறிப்பாக 50,000 ரூபாய்க்கு மேல் தொகையை எழுத மாட்டார்கள். க்ராஸ்டு cheque-ஆக இருந்தால், அதை ஓப்பன் cheque ஆகவும் அதே கெமிக்கல்களைப் பயன்படுத்தி மாற்றி விடுவார்கள்.

திருட்டு ஸ்டெப் 4:

திருட்டு ஸ்டெப் 4:

இப்போது அந்த செக்கை வங்கிக்கு வரும் வாடிக்கையாளர் போல cheque-களை சமர்பித்து மொத்தக் காசையும் எண்ணி எடுத்துக் கொள்வார்கள். cheque டெபாசிட் செய்தவருக்கு விஷயம் தெரிய வந்து வங்கியை அணுகி விவரத்தைக் கேட்டால், அது ஓப்பன் செக் அதற்கு காசு கொடுத்துவிட்டோம் என்று சொல்வார்கள்.

திருட்டு ஸ்டெப் 5

திருட்டு ஸ்டெப் 5

யாருக்கு கொடுத்தார்கள் என்கிற விவரமும் வங்கியிடம் இல்லாத படிக்கு 50,000 ரூபாய்க்கு கீழான தொகைகளையே நிரப்பி எடுப்பார்கள். அதையும் மீறி ஒரு லட்சம் இரண்டு லட்சம் எல்லாம் கொடுக்கும் போது போலி ஆவணங்களைக் கொடுத்து விடுவார்கள். ஆக என்ன செய்தாலும் யார் இவர்களின் cheque-களைப் பயனப்டுத்தி பணம் எடுத்தது என்கிற விவரம் பிடிபடாமலேயே இருந்தது.

கலங்கிய சிதாரா

கலங்கிய சிதாரா

சிதாரா என்பவர் சில வாரங்களுக்கு முன் தனக்கு ஒரு உறவினர் வழங்கிய 1.40 லட்சம் ரூபாய்க்கான ஒரு cheque வங்கியில் டெபாசிட் செய்து இருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு மேல் சம்பந்தப்பட்ட வருக்கு பணம் போய் சேரவில்லை. வங்கியிடம் விசாரித்த போது சிதாரா என்கிற பெயரில் எந்த ஒரு cheque-ம் வரவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

போலீஸிடம் புகார்

போலீஸிடம் புகார்

தொகையோ பெரிது என்பதால் சிதாரா சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவலர்களும் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு, சிதாரா வங்கிக்கு வந்து போன நேரத்தை குறிப்பிட்டு வங்கியின் சிசிடிவி பதிவுகளைப் பார்த்து இருக்கிறார்கள். பின், ஓப்பன் cheque-களை பணமாகப் பெற்றவர்களின் சிசிடிவி பதிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து சூவிங்கம் கும்பலில் ஒருவனைப் பிடித்திருக்கிறார்கள்.

பிடிபட்ட நபர்

பிடிபட்ட நபர்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சுரேஷ் என்பவர் இந்த சூவிங்கம் கும்பலில் ஒருவர். இவர் தான் சிதாராவின் cheque-ஐ சூவிங்கம் டெக்னிக் பயன்படுத்தி திருடி ஓப்பன் cheque-ஆக மாற்றி பணம் எடுத்தவர் என்பதை சுரேஷே ஒப்புக் கொண்டார்.

வங்கித் தொடர்பு

வங்கித் தொடர்பு

இன்னும் இந்த சூவிங்கம் கும்பல் நபர்களுக்கு அடையார், நீலாங்கரை சாஸ்திரி நகர், வேளச்சேரி, ஈஞ்சம்பாக்கம் என்று பல ஏரியாவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் வேலை பார்த்திருக்கிறார்களாம். அங்கு எல்லாம் இவர்களை கண்டும் காணாதது போல் அதிகாரிகள் உதவிக் கொண்டும் இருப்பதாக சுரேஷ் ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆனால் வங்கி அதிகாரிகல் இந்த சூவிங்கம் கும்பளுக்கு உதவியதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் வங்கி தலைமையகத்திற்கு தகவல் சொல்லி இருக்கிறார்களாம்.

சுரேஷ் வாழ்கை

சுரேஷ் வாழ்கை

சுரேஷுக்கு ரம்மி மிகவும் பிடிக்குமாம். சமீபத்தில் பிரபலமாகி வரும் ஆன்லைன் ரம்மியில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை தோற்று இருக்கிறானாம். மீதத் தொகையினை சுரேஷின் மனைவி வங்கிக் கணக்கில் சமர்த்தாக வரவு வைத்து வருமான வரி வேறு செலுத்தி இருக்கிறானாம். எப்படி 45 லட்சம் வந்தது என்பதற்கு பிசினஸ் செய்ததாக கணக்கு காட்டி இருக்கிறானாம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

cheque-களை எழுதும் போது நல்ல பால்பாயின்ட் பேனாக்களை பயன்படுத்தி க்ராஸ்டு cheque-களாக மட்டுமே எழுதுமாறு சென்னை காவல் துறை வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரித்திருக்கிறது. மை பேனாக்கள் மற்றும் ஜெல் பேனாக்களில் எழுதப்படும் cheque-கள், அவர்கள் பயனப்டுத்தும் ரசாயனங்களால் எளிதில் அளிக்க முடிகிறதாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+