தனியார் ஊழியர்களே மாதம் ரூ. 1000 முதலீடு செய்து மாதம் ரூ.10,000 பென்ஷன் பெறுவது எப்படி?

தனியார் ஊழியர்களே மாதம் ரூ. 1000 முதலீடு செய்து மாதம் ரூ.10,000 பென்ஷன் பெறுவது எப்படி?

விமல் 30, திவ்யா 26 என்ற இருவருக்கும் திருமணமான உடன் தங்களது ஓய்வு காலத்தில் மாதம் 10,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்று திட்டமிட்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குகின்றனர்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது 60 வயது நிரம்பிய பிறகு தனிநபர் ஒருவருக்குக் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் மட்டுமே பெஷன் தொகை கிடைக்கும் என்பதால் இருவர் பெயரிலும் தனித்தனியாக முதலீட்டைச் செய்ய முடிவு செய்கின்றனர்.

கார்பஸ்

கார்பஸ்

இந்தத் திட்டத்தின் கீழ் மாதம் 5,000 ரூபாய் பென்ஷன் பெற முதலீடு செய்யும் போது இருவருக்கும் தனித்தனியாக 8.5 லட்சம் ரூபாய் என 17 லட்சத்திற்கான கார்பஸ் தொகையும் கிடைக்க வேண்டும். இதற்கு விமல் மாதம் 577 ரூபாயும், திவ்யா 409 ரூபாயும் தவணையாக 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும்.

பென்ஷன் + கார்பஸ்

பென்ஷன் + கார்பஸ்

இப்படி மாதம் 1,000 ரூபாய்க்கும் குறைவாக இருவரும் முதலீட்டினை செய்து வரும் போது 60 வயதிற்குப் பிறகு இருவருக்கும் சேர்த்து மாதம் 10,000 ரூபாய் பென்ஷன் மட்டும் இல்லாமல் இறக்க நேர்ந்தால் நாமினிக்கு 17 லட்சம் ரூபாய் கார்பஸ் தொகையும் கிடைக்கும்.

தனியார் ஊழியர்கள்

தனியார் ஊழியர்கள்

அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் பென்ஷன் என்ற நிலை மாறி தனியார் ஊழியர்களுக்கும், சாதாரணப் பொது மக்களும் மாத பென்ஷன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசால் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

வயது வரம்பு

வயது வரம்பு

அடல் பென்ஷ யோஜனா திட்டம் கீழ் முதலீடு செய்யக் குறைந்தது 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுக்கு ஏற்றவாறு தவணை தொகை மாறும்.

அடல் பென்ஷன் யோஜனா கணக்கை தொடங்குவது எப்படி?

அடல் பென்ஷன் யோஜனா கணக்கை தொடங்குவது எப்படி?

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் கீழ் முதலீடு செய்து மாத பென்ஷன் பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் / வங்கி கிளைக்குச் சென்று இதற்கான விண்ணப்ப படிவத்தினைப் பூர்த்திச் செய்து அளிப்பதன் மூலம் கணக்கினை தொடங்கலாம்.

இந்தக் கணக்கினை இணையதள வங்கி சேவை மூலமாகத் தொடங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இப்படிச் செய்யும் போது தானாகவே ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும்.

 

அட்டவணை

அட்டவணை

வயதுபங்களிப்பு ஆண்டுமாத பென்ஷன் ரூ. 1000.மாத பென்ஷன் ரூ. 2000.மாத பென்ஷன் ரூ. 3000.மாத பென்ஷன் ரூ. 4000.மாத பென்ஷன் ரூ. 5000.
18 42 42 84 126 168 210
19 41 46 92 138 183 228
20 40 50 100 150 198 248
21 39 54 108 162 215 269
22 38 59 117 177 234 292
23 37 64 127 192 254 318
24 36 70 139 208 277 346
25 35 76 151 226 301 376
26 34 82 164 246 327 409
27 33 90 178 268 356 446
28 32 97 194 292 388 485
29 31 106 212 318 423 529
30 30 116 231 347 462 577
31 29 126 252 379 504 630
32 28 138 276 414 551 689
33 27 151 302 453 602 752
34 26 165 330 495 659 824
35 25 181 362 543 722 902
36 24 198 396 594 792 990
37 23 218 436 654 870 1,087
38 22 240 480 720 957 1,196
39 21 264 528 792 1,054 1,318

பிஎப்ஆர்டிஏ

பிஎப்ஆர்டிஏ

ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையமான பிஎப்ஆர்டிஏ இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினை ஒழுங்குமுறை படுத்தி நிர்வகிக்கும். தற்போது இந்தப் பென்ஷன் தொகையினை 10,000 ரூபாய் அளிக்குமாறு திட்டத்தினை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பிஎப்ஆர்டிஏ கோரிக்கை வைத்துள்ளது.

வட்டி எப்படி அளிக்கப்படும்?

வட்டி எப்படி அளிக்கப்படும்?

கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் வளர்ச்சிப்படி 8 சதவீதமும், கார்பஸ் தொகையில் 7 சதவீதமும் கணக்கிட்டு உறுதி செய்யப்பட்ட பென்ஷன் தொகையாக வழங்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+