நடுத்தரக் குடும்பங்களில் பலரின் கனவுகளில் நாம் எப்படியாவது கோடீஸ்வரன் ஆக மாட்டோமா என்று இருக்கும். ஆனால் அந்த இலக்கினை எப்படி அடைவது என்பது பலருக்கும் தெரியாது.
அதிலும் இந்தத் தீபாவளியின் போது எந்த ஒரு ரிஸ்க்கும் ரிஸ்க்கும் இல்லாமல் முதலீட்டினை தொடங்கி, வருமான வரி விலக்குடன் கோடீஸ்வரன் ஆவது எப்படி அல்லது முதலீட்டுத் தொகையினை இரட்டிப்பாக்குவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.
பிபிஎப்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் முதலீட்டுத் தொகையினை 15 வருடத்தில் இரட்டிப்பாக்கலாம் அல்லது கோடீஸ்வர்ன் ஆகலாம்.
வட்டி விகிதம்
சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்தால் தற்போது 8.1 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் மாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளது.
15 வருட முதலீடு
ரூ. 1.5 லட்சம்/ஆண்டு: ரூ. 46,75,910
ரூ. 1 லட்சம்/ஆண்டு: ரூ. 31,17,278
ரூ. 50000/ஆண்டு: ரூ. 15,58,634
ரூ. 25,000/ஆண்டு: ரூ. 7,79,319
ரூ. 10,000/ஆண்டு: ரூ. 3,11,730
1 கோடி
பிபிஎப் திட்டத்தில் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு ஆண்டுத் தீபாவளியின் போது 1,15,000 ரூபாயினை முதலீடு செய்து வந்தால் உங்களுக்கு 25 ஆண்டுக்கு பிறகு 1,30,00,000 ரூபாய் திரும்பக் கிடைக்கும்.
தேசிய சேமிப்பு அமைப்பு
தேசிய சேமிப்பு அமைப்பினால் 1968-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது இன்று அஞ்சல் அலுவலகங்கள் மட்டும் இல்லாமல் வங்கிகளில் கிடைக்கிறது. தீபாவளி முதல் முதலீட்டினை தொடங்கி நல்ல லாபம் பெறுக.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications