எஸ்பிஐ வங்கி அன்மையில் தங்களது ஏடிஎம் டெபிட் கார்டு பயனர்களின் தினசரி பணம் எடுக்கும் வரம்பினை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாகக் குறைத்து அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு எல்லாம் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கப்படும் அடிப்படை டெபிடி கார்டுகளுக்கு மட்டுமே ஆகும்.
வங்கி நிறுவனங்கள் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் டெபிட் கார்டுகளை விநியோகம் செய்து வருகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் 20,000 ரூபாய்க்கும் அதிகமாகக் கூடுதலான பணத்தினை ஏடிஎம்-ல் இருந்து எடுக்க வேண்டும் என்றால் கார்டின் வகையினை மாற்றுவது நல்லது.
எனவே இந்தியாவின் டாப் 5 வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு எப்படி 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதிக்கும் டெபிட் கார்டுகள் பற்றி இங்குப் பார்ப்போம்.
எஸ்பிஐ
எஸ்பிஐ வங்கியின் அடிப்படை டெபிட் கார்டு மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது 40,000 வரை எடுக்கலாம் என்று இருந்த வரம்பு அக்டோபர் 31-ம் தேதி முதல் 20,000 ரூபாயாகக் குறைகிறது. இதுவே எஸ்பிஐ வங்கியின் பிளாட்டினம் டெபிட் கார்டினை பயன்படுத்தும் போது ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை ஏடிஎம் மையங்களில் பணத்தினை எடுக்க முடியும்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியின் பிளாட்டினம் சிப் டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு 1,00,000 ரூபாய் வரை எடுக்க முடியும். இதுவே விசா சிக்னேச்சர் டெபிட் கார்டு என்றால் 1,50,000 ரூபாய் ஒரே நாளில் ஏடிஎம் மையங்களில் இருந்து பணத்தினை எடுக்கலாம்.
எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கி தங்களது பிளாட்டினம் சிப் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று hdfcbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி தங்களது ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டுகளில் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது. இதுவே விசா டைட்டானியம் கார்டுகள் என்றால் ஒரு நாளைக்குக் 50,000 ரூபாய் வரை பணம் எடுக்க முடியும்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் பிளாட்டினம் ரூபே டெபிட் கார்டுகளில் ஒரு நாளைக்கு 50,000 ரூபாய் வரை ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கலாம். இதுவே கிளாசிக் ரூபே அல்லது மாஸ்டர் டெபிட் கார்டுகள் என்றால் ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications