இந்தியாவில் உள்ள 380 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் 65 சதவீத திட்டங்கள் கடந்த ஒரு வருடமாக நட்டத்தினையே அளித்துள்ளன என்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.
கட்டுமான துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக நட்டத்தினை ஏற்படுத்தியுள்ளனர். அதிலும் அதிகபட்சமாக எச்எஸ்பிசி இன்ஃப்ரா ஸ்ட்ரக்ச்சர் ஈக்விட்டி ஃபண்டு 30.66 சதவீத நட்டத்தினைப் பதிவு செய்துள்ளது என்றும் வேல்யூ ரிசர்ச் தரவுகள் கூறுகின்றன.
கடந்த ஒரு வருடத்தில் லாபம் அதிக நட்டம் அளித்த மியூச்சுவல் ஃபண்டுகள்
| மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் | ஒரு வருட வருவாய் (%) (அக்டோபர் 2018 வரை) |
|---|---|
| எச்எஸ்பிசி இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் ஈக்விட்டி | -30.66 |
| எஸ்பிஐ பிஎஸ்யூ | -24.12 |
| எச்டிஎப்சி இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் | -21.8 |
| சுந்தரம் ஸ்மால் கேப் | -20.95 |
| ஆதித்யா பிர்லா சன் லைப் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் | -20.95 |
| இன்வெஸ்கோ இந்தியா பிஎஸ்யூ ஈக்விட்டி | -19.61 |
| ஐடிஎப்சி இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் | -18.48 |
| எசெஸ்பிசி ஸ்மால் கேப் ஈக்விட்டி | -18.46 |
| ஆதித்யா பிர்லா சன் லைப் பியூர் வேல்யூ | -17.85 |
| ஆதித்யா பிர்லா சன் லைப் ஸ்மால் கேப் | -17.31 |
நட்டம் அளித்த லார்ஜ் கேப் ஃபண்டு திட்டங்கள்
ஜேஎம் கோர் 11 ஃபண்டு, ஐடிபிஐ இந்தியா டாப் 100 ஈக்விட்டி டண்டு, எஸெல் லார்ஜ் கேப் ஈக்விட்ட் ஃபண்டு போன்ற லார் கேப் ஃபண்டு திட்டங்களும் சென்ற ஒரு ஆண்டி -6.7 முதல் -9.7 சதவீதம் வரை நட்டம் அளித்துள்ளன.
சரிந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களின் வருவாய்
மியூச்சுவல் ஃபண்டில் மிட் கேப் திட்டங்கள் சராசரியாக -8.58 சதவீதமும், ஸ்மால் கேப் திட்டங்கள் -11.11 சதவீதமும் நட்டத்தினை அளித்துள்ளதாக வேல்யூ ரிசர்ச் தரவுகள் கூறுகின்றன.
மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்
2017-2018 நிதி ஆண்டில் 14,200 கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்த்து இருந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 10,080 கோடி ரூபாய் முதலீட்டினை பெற்றுள்ளது. இதில் பல சில்லறை முதலீட்டாளர்கள் நட்டம் அடைந்துள்ளனர்.
பங்குகள்
2018-ம் ஆண்டுத் தொடங்கியது முதல் 80 சதவீத பங்குகள் சிவப்பாகவே உள்ளன. டெக்னாலஜி மற்றும் பார்மா உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த சில நிறுவனங்களின் பங்குகள் மட்டும் லாபத்தினைப் பெற்றுள்ளன. இதற்கு ரூபாய் மதிப்பு சரிவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications