இந்தியாவில் அதிக மதிப்பு கொண்ட நிறுவனமா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சில மாதங்களுக்கு முன் தான் அடிச்சு புடிச்சு 1st place வந்துச்சு. அதுக்கு முன்னாடி வரை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கம்பெனி தான் முதல் இடம்.
ஒரு சம்பவம்
அக்டோபர் 04, 2018. மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 1.5 ரூபாயை குறைத்தது. "இதுக்கு நம ரிலையன்ஸோட 1st place காலி ஆனதுக்கும் சம்பந்தம் இல்ல". அதைத் தொடர்ந்து எண்ணெய் சுத்தீகரித்து விற்கும் நிறுவனங்கள் தான் மத்திய அரசோட கலால் வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் சுமக்க வேண்டும். "இந்த பாயிண்ட் தான் ரிலையன்ஸோட 1st place-க்கு வேட்டு வெச்சது.
நிகர லாபக் கணக்கு
உதாரணமாக ரிலையன்ஸ் ஒரு வருஷத்துக்கு 100 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விக்கிது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலோட விலை ஒரு ரூபாய். ஆக பெட்ரோல் டீசல் வித்து ரிலையன்ஸ் கம்பெனிக்கு வரும் காசு 100 ரூபாய். இப்போ இந்த 100 ரூபாயில எண்ணெய் சுத்தீகரிப்புக்கான காசு, சம்பளம் எல்லாம் போக நிகர லாபம் 10 ரூபாய் கிடைக்கிது.
நஷ்டம் எப்படி
இப்ப மத்திய அரசோட ஆணைப்படி ரிலையன்ஸ் அவனோட கை காசுல இருந்து ஒரு ரூபாய் போட்டு மத்திய அரசோட காலால் வரியைக் கட்டணும். ஆக, இப்ப இவங்களோட 10 ரூபாய் நிகர லாபத்துல இருந்து தான் அந்த ஒரு ரூபாய் கலால் வரியக் கட்டணும். ஆக இனிமே ரிலையன்ஸோட நிகர லாபம் 9 ரூபாய் தான்.
லாபக் குறைவால் பங்குகளின் விலை சரிவு
ஆக ஒரு நிறுவனத்தோட நிகர லாபம் குறையுதுன்னா, அந்த நிறுவனத்தோட பங்குகளையும் வாங்க மாட்டாங்க, அப்படி வாங்கி இருந்தாலும் வித்துட்டு முதல் காச எடுத்துக்கிட்டு வெளியேறிடுவாங்க. அதத் தான் இந்திய பங்குச் சந்தையிலையும் நடந்துச்சு. ஆகஸ்ட் 28-ம் தேதி 1319-க்கு முடிந்த பங்குகள் விலை இன்று சுமாராக 1057 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
மொத்தக் கணக்கு
அதாவது ஆகஸ்டு 28-ம் தேதி 8.24 லட்சம் கோடி ரூபாயாக இருந்த ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு இப்போது வெறும் 6.61 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. இந்த 1.63 லட்சம் கோடி சரிவு ரிலையன்ஸ் நிறுவனத்தின் 1st place-ஐ தட்டிப் பரித்துவிட்டது. இவை எல்லாம் சேர்ந்து கொள்ள சந்தையே "ஸாரி ரிலையன்ஸ் , உங்களுக்கு 1st place கிடையாது" எனச் சொல்லி விட்டது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications