பயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி?

பயணங்கள் எப்பொழுதும் முடிவதில்லை. உன்மையில் ஒரு பயணத்தின் தொடக்கம் என்பது மற்றொரு பயணத்தின் முடிவில் இருந்து ஆரம்பிக்கின்றது. வானுயர்ந்த மலைகள், துள்ளிக் குதித்தோடும் நீர்வீழ்ச்சிகள், பசுமை மாறாத அடர்ந்த காடுகள், அங்கே சுதந்திரமாக வாழ்ந்திடும் விலங்குகள் போன்றவை, நகரத்தின் மத்தியில் கான்கீரீட் காடுகளில் வாழும் நம்மை, பயணத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. ஒரு பயண ஆர்வலரால் தன்னுடைய பயணங்களை நீண்டகாலத்திற்குத் தள்ளி வைக்க இயலாது. எனினும் எப்படிப்பட்ட பயண ஆர்வலரையும் பணம் பாடாய் படுத்தி விடுகின்றது. மனம் இருக்குப் பயணம் மேற்கொள்ள. எனினும் பணம் இல்லையே எனக் கவலைப்படும் பயண ஆர்வலரா நீங்கள். கவலையை உடனடியாக உதறித் தள்ளுங்கள்.

உங்களுக்கு உதவும் நோக்கில், உலகெங்கிலும் நீங்கள் பயணம் மேற்கொள்ளும் பொழுது அந்தப் பயணத்தை மிகக் குறைந்த செலவில் அல்லது செலவே இல்லாமல் எவ்வாறு மேற்கொள்ளுவது என்பதைப் பற்றிய பயணக் குறிப்புகளை உங்களுக்காக நாங்கள் இங்கே வழங்கியுள்ளோம்.

 பண் மொழித் திறன்

பண் மொழித் திறன்

உங்களுடைய தலைமை பண்பு உங்களைப் பிறரிடம் இருந்து தனித்துக் காட்டும். அத்தையைத் தலைமைப் பண்புடன் பன் மொழித் திறனும் உங்களுக்கு அமையப் பெற்றிருந்தால், உங்களால் பயணத்தின் நடுவே, பல்வேறு வேலைகளைப் பெற இயலும். உங்களுடைய பயணத்தின் நடுவே நீங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேலை பார்க்கலாம். அல்லது மொழி பெயர்ப்பாளராக வேலையில் சேரலாம். இதன் மூலம் உங்களால் மிக எளிதாக மிகப்பெரிய தொகையைச் சம்பாதிக்க முடியும்.

ஆங்கில மொழியை ஆன்லைனில் கற்பிப்பதன் மூலம், உங்களுடைய மொழித் திறமையை நல்ல முறையில் பயன்படுத்தி மிக எளிதாகப் பணம் ஈட்டலாம். நீங்கள் உலகம் முழுவதும் பயணிக்கையில், நீங்கள் இணைய வழியே இந்த ஆங்கில மொழியைக் பல்வேறு இணையத்தளங்களைப்ப பயன்படுத்திக் கற்பிக்கலாம். அதன் மூலம் மிக எளிதாக உங்களுடைய பயணத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.

 

கிளிக் செய்யவும்! கிளிக் செய்யவும்! பெரிதாகச் சம்பாதிக்க அழகிய படங்களைக் கிளிக் செய்யவும்

கிளிக் செய்யவும்! கிளிக் செய்யவும்! பெரிதாகச் சம்பாதிக்க அழகிய படங்களைக் கிளிக் செய்யவும்

இயற்கைக்கு நெருக்கமான இடங்களின் அழகு, நகரத்தின் வாழ்வில் தினசரி உழலும் மக்களுக்கு மிகவும் ஈர்ப்புடையதாக இருக்கின்றது. அதிலும் மாசடையாத பசுமை நகர மக்களை மிகவும் வசீகரிக்கின்றது.

உலகெங்கிலும் புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுது அங்கே நீங்கள் கண்ட இயற்கை அழகை உங்களுடைய கேமிராவினால் அப்படியே அள்ளி வர முடிந்தால், உங்களுக்கு அதிக அளவிலான பணம் கிடைக்கும். பணத்தை விடுங்கள் உங்களுடைய பெயர் மற்றும் புகழ் உங்களை வேறு தளத்திற்கு அழைத்துச் செல்லும்.

சரியான இணையதளங்கள், இதழ்கள், செய்தித்தாள்கள், அல்லது வலைத்தளங்களைக் கண்டுபிடித்து அதில் உங்களுடைய படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு அதிகப் பணத்தைப் பெற்றுத் தரும்.

 

டிஜிட்டலுக்கு மாறுங்கள்

டிஜிட்டலுக்கு மாறுங்கள்

இப்பொழுது நடந்து வரும் டிஜிட்டல் புரட்சிக்கு நன்றி செலுத்துங்கள். வலைத்தளத்தில் ஆர்வமுள்ள பயணி பேஸ்புக், வேர்ட்பிரஸ், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள பயண விரும்பிகளுடன் தங்களுடைய எளிமையான பயணக் குறிப்புகள் மற்றும் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய தந்திரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதில் உங்களுடைய ஈடுபாடு பயனுள்ளதாக மாறும் பொழுது உங்களைப் பல்வேறு பார்வையாளர்கள் பின்பற்றுபவர்கள். அவர்களின் எண்ணிக்கையே உங்களின் பலம். அந்த எண்ணிக்கை அதிகரிக்க இறுதியில் நீங்கள் சமூக ஊடக உலகின் ஒரு புகழ்பெற்ற ஆளுமையாக மாறி விடுவீர்கள். இது முடிந்தவுடன், பல பிராண்டுகள் மற்றும் உச்சநிலை நிறுவனங்கள் உங்களைக் கூட்டு முயற்சிக்காக அணுகும்.

 

புகைப் படம் எடுத்தல்

புகைப் படம் எடுத்தல்

வன வாயேஜர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலங்கார் சந்திராவின் சில குறிப்புகள் உள்ளன:

நீங்கள் ஒரு அரைகுறை புகைப்படக்காரராகவே இருந்தாலும், குறைந்து அறியப்பட்ட மலைகள் மற்றும் இதுவரை யாருமே பார்த்தரியாத விலங்குகளின் படங்களை நீங்கள் எடுத்தால், பல பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் உங்களுடைய புகைப்படங்களுக்குப் பணம் செலுத்த தயாராக இருக்கும்.

 

 சமூகச் சுயவிவரம்

சமூகச் சுயவிவரம்

நீங்கள் உங்களுடைய சொந்த வலைப்பதிவையோ அல்லது சமூகச் சுயவிவரத்தையோ பராமரித்து வர வேண்டும். அதில் வழக்கமான இடைவெளிகளில் உங்களுடைய பயண அனுபவங்களைப் பதிவிட வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையானது அதிவேகமாக வளரும். ஆன்லைன் பயண ஆய்வாளர்கள் இதுவரை தாங்கள் சென்றிராத இடங்களின் விபரங்களை அறிய எப்பொழுதும் ஆர்வமுடன் இருப்பார்கள்.

இலவச பயணங்கள்

இலவச பயணங்கள்

நீங்கலள உங்களுடைய வலைப்பதிவிலும் சமூக ஊடகத்திலும் வளர வளர, பல்வேறு ஹோட்டல் நிறுவனங்கள், பிராண்டுகள், பயண நிறுவனங்கள் போன்றவை உங்களுக்கு இலவச பயணங்களை வழங்க முன்வரும்.

அதே சமயம், நீங்கள் உங்களுடைய தெளிவான பயணச்செய்தியை (மலையேற்றம், வன வாழ்வு, வீட்டுவசதி, தொலைதூர நாடுகள்) பராமரிக்க வேண்டும். அந்தச் செய்தி உங்களுடைய சொந்த செய்தியாகவும் உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவும் இருப்பது மிகவும் அவசியம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+