தொழிலாளர் ஓய்வு கால வைப்புத் திட்டத்தில் வாரி வழங்கப்படும் சலுகைகள்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வுகாலம் கவலையற்றதாகவும், ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்து சகொள்ளவும் சம்பளதாரர்கள் நீண்டகால முதலீட்டுத் திட்டங்களை நாடுகின்றனர். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதார்கள், ஓய்வு கால வைப்புத் திட்டத்தின் நன்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அரசு உத்தரவாதம் மற்றும் வரிச்சலுகை காரணமாக பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தை பலர் நாடுகின்றனர்.

 

பொது சேமநல நிதித்திட்டத்தை விட, ஓய்வு கால வைப்பு நிதி திட்டத்தில் பல்வேறு சலுகைகள் உள்ளன. குறைந்த முதலீடுகளுக்கு அதிக வட்டியும், பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

அதிக வட்டி

அதிக வட்டி

2014-15 ஆம் ஆண்டுகளில் பொது வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு முதலில் 8.70 விழுக்காடும், பின்னர் 8.75 விழுக்காடும் வட்டி வழங்கப்பட்டது. காலப்போக்கில் படிப்படியாக குறைக்கப்பட்டது. 2017 -18 ஆண்டுகளில் அதாவது தற்போது தொழிலாளர் ஓய்வுகால வைப்பு நிதித் திட்டத்துக்கு 8.55 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. அதேநேரம் பொது வைப்பு நிதிக்கு 7.6 முதல் 7,9 சதவீதமே வட்டி வழங்கப்படுகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஆண்டுதோறும், பொது வருங்கால வைப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறையும் மாற்றி அமைக்கப்படுகிறது. பொது வருங்கால நிதித்திட்டத்தை விடத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி அதிகமாகவே நிர்ணயிக்கப்படுகிறது.

சலுகைகள்

சலுகைகள்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அல்லது தொழிலாளர் வைப்புநிதி திட்டத்துக்கு வரிச்சலுகையும், தேவைக்கு ஏற்ப இடைக்காலத்தில் பணத்தை திரும்பப் பெறவும் வசதி உள்ளது. திருமணம், கல்வி மற்றும் வீட்டுக்கடனை திரும்பச் செலுத்துவதற்காக இடைக்காலங்களில் பகுதி சேமிப்பையோ, முழுமையாகவோ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சலுகையைப் பெற 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

ஓய்வு காலத்துக்குப் பிறகு சேமிப்பின் முழுத்தொகையைப் பெற முடியும், 2 அல்லது அதற்குக் கூடுதலான மாதங்கள் வேலையின்றி இருப்பின் முழுத் தொகையை திரும்பப் பெற முடியும். ஆனால் பொது சேமநல நிதியை 15 ஆண்டுகளுக்குத் திரும்ப எடுக்க முடியாது.

வரி தள்ளுபடி
 

வரி தள்ளுபடி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்களிப்புத் தொகைக்கு 80-சி யின் படி வரிச்சலுகை பெற வாய்ப்பு உள்ளது. அடிப்படைச் சம்பளத்திலிருந்து கூடுதலாக செலுத்தும் பங்களிப்புக்கு 1.5 லட்சம் வரை 80 சி யின்படி வரித்தள்ளுபடி கிடைக்கிறது.

கணக்கைத் திறக்கும் முறை

கணக்கைத் திறக்கும் முறை

பொது வருங்கால வைப்புத் திட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ சொந்த பங்களிப்புடன் கணக்கை திறக்கலாம். தொழிலாளர் ஓய்வுகால வைப்பு நிதி திட்டத்தை, பணிபுரியும் அலுவலக மனிதவள அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட எழுத்துப் பூர்வமான கடிதத்தையோ, மின்னஞ்சல் முகவரியோ சமர்ப்பித்து கணக்கைத் தொடங்க வேண்டும். உங்கள் சம்பளத்திலிருந்து சந்தா தொகை கழிக்கப்படும்.

உங்கள் அடிப்படைச் சம்பளத்தின் 100 விழுக்காட்டையும் இந்தத் திட்டத்தில் அளிக்க அனுமதிக்கப்படுகிறது. வேலை இடமாற்றம் ஆகியிருந்தால் எந்தச் சிரமமும் இன்றி கணக்கை மாற்றிக் கொள்ள வசதி உள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ppf pf
English summary

4 reasons consider voluntary provident fund over ppf

4 reasons consider voluntary provident fund over ppf
Story first published: Thursday, November 15, 2018, 16:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X