ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய திடனத்தில் உங்கள் குழந்தைகளின் வருங்காலத்தினைக் கருத்தில் கொண்டு சேமிப்பது நல்லது.
மறுபக்கம் மாறி வரும் கல்வி சூழலில் தரமான கல்வியைப் பெற நிறையச் செலவு செய்ய வேண்டிய சூழலுக்குக் குழந்தைகள் தள்ளப்படுவதால் பெற்றோர்கள் இப்போதே அவர்கள் கல்விக்கான சேமிப்பினை திட்டமிட்டால் வரும் நாட்களில் கல்வி கடன் பெற்று தான் படிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து விலக்கு பெற முடியும்.
எனவே குழந்தைகள் எதிர்காலத்திற்கான எங்கு எல்லாம் சேமிக்கலாம் என்பதைத் தமிழ் குடிரிட்டர்ன்ஸ் தளம் மூலம் அறிந்துகொள்ளுங்கள்
குழந்தைகள் படிப்பு மற்றும் மியூச்சுவல் ஃபண்டு
குழந்தைகள்லின் கல்வி செலவிற்காக மியூச்சுவல் ஃபண்டு வழியாக முதலீடு செய்வது நல்ல பயனை அளிக்கும். மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி மூலமாக மாத தவணையில் முதலீட்டினை தொடங்கலாம்.
இன்னும் இரண்டு வருடத்தில் தங்களது குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க விரும்புபவர்கள் ரிஸ்க் குறைவான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள், டெபட் ஃபண்டு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். நீண்ட கால இலக்கிற்குப் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போது வருமான வரிச் சட்டப்பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் பெற முடியும்.
குழந்தைகளின் படிப்பும், பங்கு சந்தை முதலீடும்
பங்கு சந்தையில் முதலீடு செய்ய நேரம் உள்ள பெற்றோர்கள் நேரடி பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலமும் அதிக லாபத்தினை அடைய முடியும். 5 வருடங்களுக்குப் பிறகு நல்ல லாபம் வேண்டும் என்று தெரிவிப்பார்கள் அதற்கு ஏற்றப் பங்கு எது என்று திட்டமிட்டு முதலீட்டினை தொடங்க வேண்டும். இதுவே குறைந்த காலத்தில் அதிக லாபம் வேண்டும் என்றால் ரிஸ்க் இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு குழந்தைகளின் படிப்பிற்காகச் செலவு செய்ய விரும்புபவர்கள் நேரடி பங்கு சந்தை முதலீட்டினை செய்யலாம்.
குழந்தைகளின் கல்வியும், பிக்சட் டெபாசிட்டும்
ரிஸ்க் ஏதும் இன்று முதலீட்டினை தொடங்கும் போது கூறியபடி லாபம் வேண்டும் என்றால் 1 முதல் 5 வருடத்தில் முதிர்வை அளிக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீட்டினை தொடங்கலாம். இது போன்ற பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது இடையில் வெளியேறினாலும் ரிஸ்க் இருக்காது.
பிபிஎப் மற்றும் என்எஸ்சி
தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்களும் குழந்தைகளின் கல்விக்கு ரிஸ்க் இல்லாமல் சேமிக்க உதவு திட்டங்கள் ஆகும். இந்தத் திட்டங்களில் மூலம் முதலீடு செய்யும் போது ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டாலும் சிறந்த ஒரு முதலீடு திட்டமாக உள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications