தலைப்பு உண்மை தாங்க. இனிமேல் நாம் ATM இயந்திரங்களில் இருந்து ATM அட்டைகள் இல்லாமலேயே காசு எடுக்கலாம். அதோடு காசோலைகளுக்கும் வங்கிகளுக்குச் சென்று சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டாம். அதே ATM இயந்திரங்களிலேயே நம் காசோலைகளுக்கான பணமும் கிடைக்கும். அதுவும் ஒரே நிமிடத்தில்
யார் எல்லாம்
இரண்டு தனியார் வங்கிகள் இந்த ரக ATM-களை குருகிராம் மற்றும் பெங்களூரில் பொருத்தி இருக்கிறார்கள். இதன் சேவையையும் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறார்களாம்.
மொழித் தேர்வு
ATM இயந்திரத்தில் முதலில் நமக்கு தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் இந்த ATM நேரடியாக ஒரு வங்கி அதிகாரியின் கவனத்துக்குச் செல்லும். இப்போது அந்த ATM இயந்திரத்தின் முழு கட்டுப்பாடு இந்த வங்கி அதிகாரியின் கையில்.
காசோலை
இப்போது அந்த வங்கி அதிகாரி சொல்வது போல முதலில் நம் காசோலையை டெபாசிட் செய்ய வேண்டும். அதொடு உங்கள் அடையாளத்தைச் சொல்லும் சில ஐடிகளையும் கேட்கும். அதையும் அந்த ATM இயந்திரத்திலேயே ஸ்கேன் செய்து கொள்ளலாம். அதன் பின் ATM இயந்திர ஸ்கிரீனிலேயே ஒரு கையெழுத்தும் போட வேண்டும்.
காசோலைக்கான காசு ரெடி
இந்த எல்லாம் வேலைகளும் நடக்கும் நேரத்தில் உங்கள் அடையாளங்கள் சரி பார்க்கப்பட்டு உங்களுக்கான பணம் ATM இயந்திரத்தில் தயாராக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய காசு எந்த ரூபாய் நோட்டுக்களாக வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம்.
எல்லாம் காசோலைகளூம்
இந்த ATM இயந்திரத்தில், உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகள் என எல்லா ரக காசோலைகளையும் காசாக மாற்றிக் கொள்ளலாமாம். அப்படித் தான் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால் அந்த வங்கிகள் மற்ற வங்கிகளோடும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டுமாம். குறிப்பாக இந்த சேவை 24/7 நேரமும் கிடைக்குமாம்.
கார்ட் இல்லாமல் எப்படி
நம் வங்கிக் கணக்கோடு ஆதார் எண்னை இணைத்திருக்க வேண்டும். இந்திய உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் படி, ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளோடு இணைக்கத் தேவை இல்லை. ஆனால் ATM அட்டைகள் இல்லாமல் காசு எடுக்க கட்டாயம் ஆதார் எண்ணை வங்கிக் கணக்கோடு இணைத்திருக்க வேண்டும். இணைக்கப்பட்டிருக்கும் ஆதார் எண்களில் பயோ மெட்ரிக் சரி பார்ப்புகளுக்குப் பிறகு உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்தே காசு நமக்கு வழங்கப்படும்.
வேறு என்ன சேவைகள்
இந்த ATM இயந்திரங்களின் மூலம் ஒரு வங்கிக் கிளையில் செய்யப்படுவது போல கேவொய்சி சரிபார்ப்புகள் வரை செய்து கொள்ளலாமாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications