மகிழ்ச்சியான வாழ்வினை தொடங்குவதற்கான சரியான நேரம் தீபாவளி. இந்தச் சமயத்தில் உங்கள் ஓய்வூதியத்திற்கான முதலீட்டினை தொடங்கி மாதம் லட்சம் ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
பென்ஷன் திட்டங்களில் முன்கூடியே முதலீட்டினை தொடங்கும் போது அதிக லாபத்தினைப் பெற முடியும்.
ராஜாவின் பென்ஷன் திட்டமிடல்
ராஜாவின் வயது தற்போது 25, தன்னுடைய ஓய்வூதியத்திற்காக திட்டமிடும் இவர் என்பிஎஸ் திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடுகிறார். இந்த முதலீடு இவரது வயது 60 ஆகும் போது மாதம் 60,000 ரூபாய் பென்ஷனை அளிக்கும். அது மட்டும் இல்லாமல் 22 லட்சம் ரூபாய் பணத்தினையும் மொத்த தொகையாகவும் பெற முடியும். 8,10,000 ரூபாய் வருமான வரி விலக்கும் கிடைக்கும்.
என்பிஎஸ்
என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தற்போது 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. வரும் காலத்தில் மேலும் அது உயர வாய்ப்புகள் உள்ளது.
30 வயதானவர்கள்
தற்போது முதலீட்டாளரின் வயது 30 என்றால் 60 வயதாகும் போது மாதம் 60,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் மாதம் 7,500 ரூபாயினை என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். எனவே தான் எவ்வளவு விரைவாக ஓய்வூதியத்திற்குத் திட்டமிடுகிறோமோ அவ்வளவு நல்லது எனக் கூறுகின்றேன்.
மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி?
உங்கள் வயது 25 என்றால் மாதம் 9,000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினால் 60 வயதாகும் போது மாதம் 1 லட்சம் ரூபாயினைப் பென்ஷனாகப் பெற முடியும். 35 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்யும் போது 11,34,000 ரூபாய் வரி சேமிப்பும் கிடைத்திருக்கும்.
இதுவே உங்கள் வயது 30 என்றால் மாதம் 12,500 ரூபாயினை என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து இருக்கும் போது மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் 60 வயதில் ஓய்வு பெறும் போது 37,10,762 ரூபாயினை மொத்த தொகையாகவும் பெற முடியும்.
பிஎப்ஆர்டிஏ
என்பிஎஸ் என்ப்படும் இந்தத் தேசிய ஓய்வூதிய திட்டமானது மத்திய அரசின் கீழ் இயங்கும் முக்கியப் பென்ஷன் திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தினை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஒழுங்குமுறை படுத்துகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications