பென்ஷன் திட்டங்களில் எல்ஐசி ஜீவன் சாந்தி மற்றும் என்பிஎஸ் உள்ளிட்டவற்றைப் பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தால் தொடர்ந்து பென்ஷன் பெற முடியும். இரண்டு திட்டங்களும் வெவ்வேறு வகையில் முதலீட்டாளர்கள் பயன் அளிக்கிறது.
ஆனால் இங்கு மாதம் 50,000 ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி என்று மட்டும் விளக்கமாகப் பார்க்கலாம்.
எல்ஐசி
எல்ஐசி ஜிவன் சாந்தி திட்டத்தில் ஒரே அடியாக அதாவது ஒற்றைப் பிரீமியாக ஒரு பெறும் தொகையினை முதலீடு செய்து அதனைப் பென்ஷனாகப் பெறுவது ஆகும். இந்தத் திட்டம் கீழ் முதலீடு செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை திரும்ப வழங்கப்படும்.
உடனடியாக மாதம் 50,000 ரூபாய் பென்ஷன்
ஜீவன் சாந்தி திட்டம் கீழ் 60 வயதில் முதலீடு செய்து மாதம் 50,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் இந்தத் திட்டத்தில் 70 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 50 வயதில் பென்ஷன் வேண்டும் என்றால் 80 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதுவே 40 வயது என்றால் 86 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
இந்தத் திட்டம் கீழ் முதலீடு செய்யக் குறைந்தபட்ச வயது 30 ஆகும்.
20 வருடங்களுக்குப் பிறகு பென்ஷன் வேண்டும் என்றால்
இதே எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டத்தில் முதலீட்டினை தொடங்கிய 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் 50,000 ரூபாய் பென்சன் வேண்டும் என்றால் 30 வயது ஆகும் போது 29 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 50 வயதாகிறது என்றால் 33 லடம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும்.
எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டம் கீழ் அதிகத் தொகையினை ஒற்றைப் பிரீமியமாக முதலீடு செய்யும் போது எளிமையாகப் பென்ஷன் பெற முடியும் என்ற நிலையில் அடுத்து என்பிஎஸ்ச் கீழ் முதலீடு செய்வது பென்ஷன் பெறுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.
என்பிஎஸ்
என்பிஎஸ் திட்டத்தில் 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். தற்போது உங்கள் வயது 25 என்றால் மாதம் 4,150 ரூபாய் முதலீடு செய்யும் போது 60 வயதாகும் போது மாதம் 50,000 ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications