உங்க பொண்ணு கோடீஸ்வரியா மறு வீட்டுக்கு போணுமா...? இதப் படிங்கப்பு

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பான முறையில் அமைக்க மத்திய அரசு sukanya samriddhi yojana எனும் திட்டத்தை வடிவமைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது.

சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தை ஆகி உள்ளீர்களா. இதோ இந்த நல்ல செய்தி உங்களுக்காக. மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்காக அரசுக்கு உங்கள் நன்றியை தெரிவித்துடுங்கள். இப்போது நீங்கள் உங்கள் மகளை அவரது 25-வது வயது நிறைவடையும் போது கோடீஸ்வரி ஆக்கலாம். அதற்கு நீங்கள் நான்கில் ஒரு பங்கை மட்டும் 14 வருடங்களுக்கு முதலீடு செய்யவேண்டும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா

சுகன்யா சம்ரிதி யோஜனா

இந்தத் திட்டத்தில் இணைய உங்கள் மகள் பெயரில் ஒரு சுகன்யா சம்ரிதி கணக்கை தொடங்க வேண்டும். அதில் மாதம் மாதம் சிறுதொகையோ அல்லது ஒரு வருடத்திற்கு உங்கள் சக்திக்கு தங்குதார்கள் போலப் பெரிய தொகையையோ முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 14 வருடங்களுக்கு மட்டும் தான் முதலீடு செய்ய முடியும்.

முதிர்வு காலம்

முதிர்வு காலம்

இந்தக் கணக்கு முதிர்வாக 21 வருடங்கள் ஆகும். உங்கள் மகளுக்குக் கல்யாணம் நடக்கும் வரை உங்கள் முதலீட்டிற்கு வட்டி தரப்படும், 21 வருடங்களுக்கு மேல் ஆனாலும் வட்டி கிடைக்கும்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

தற்போது சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு அரசினால் வழங்கப்படும் வட்டி விகிதம் 8.5%, இது ஆண்டுதோறும் கூட்டப்படும். இந்த வட்டி விகிதம் ஒவ்வரு ஆண்டும் அரசால் மாற்றப்படுகிறது. ஒருவர் அதிகபட்சமாக ஆண்டிற்கு 15 லட்சம் தான் ஒரு கணக்கில் முதலீடு செய்யமுடியும்.

வயது

வயது

இந்தக் கணக்கை தொடங்க உங்களின் குழந்தைக்கு வயது 1-10 க்குள் இருக்கவேண்டும். உங்கள் மகளுக்கு ஒரு வயது ஆன உடனேயே இந்த
சுகன்யா சம்ரிதி யோஜனாவில் கணக்கைத் தொடங்கினாள், நீங்கள் மாத்திற்கு 10,000 அல்லது 12,500-யோ 14 வருடங்களுக்கு முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.

12,500/மாதத்திற்கு

12,500/மாதத்திற்கு

தற்போது உள்ள வட்டி விதிகள் படி நீங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கில் 12,500 முதலீடு செய்தால், 21 வருடங்கள் முடிவில் உங்கள் மகளுக்கு 77,99,280 ரூபாய் கிடைக்கும். மேலும் ஐந்து வருடங்கள் கழித்து தான் உங்களுக்கு மகளுக்குத் திருமணம் செய்யப் போகிறீர்களா. அப்போது உங்கள் மகள் 25 வயதை நிறைவு செய்யும்போது அவர்கையில் ரூ.1,08,08,700 இருக்கும். இதில் என்ன ஆச்சிரியம் என்றால் இந்த 1 கோடி பணத்திற்கு நீங்கள் 14 வருடத்தில்  முதலீடு செய்யும் தொகை வெறும் 21 லட்சம் தான்.

10,000/மாதத்திற்கு

10,000/மாதத்திற்கு

அதேபோல தற்போது உள்ள வட்டி விதிகள் படி நீங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கில் 10,000 முதலீடு செய்தால், 21 வருடங்கள் முடிவில் உங்கள் மகளுக்கு 35,00,000 ரூபாய் கிடைக்கும். மேலும் ஆறு வருடங்கள் கழித்து தான் உங்களுக்கு மகளுக்குத் திருமணம் செய்யப் போகிறீர்களா. அப்போது உங்கள் மகள் 27 வயதை நிறைவு செய்யும்போது அவர்கையில் ரூ.1,01,79,417 இருக்கும். இதில் என்ன ஆச்சிரியம் என்றால் இந்த 1 கோடி பணத்திற்கு நீங்கள் 14 வருடத்தில் முதலீடு செய்யும் தொகை வெறும் 16,80,000 லட்சம் தான்.

குறைந்தபட்ச தொகை

குறைந்தபட்ச தொகை

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் குறைந்தபட்சமாக நீங்கள் 250 ரூபாய் முதலீடு செய்யலாம்.

வரிச் சலுகைகள்

வரிச் சலுகைகள்

இந்தத் திட்டத்தின் மிகப் பெரிய நன்மை வரி விலக்கு. வருமான வரி சட்டம் 80C படி வரி மற்றும் முதிர்வுத் தொகைக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படும்.

எந்த வங்கியில் கணக்கை திறக்கலாம்

எந்த வங்கியில் கணக்கை திறக்கலாம்

இந்தக் கணக்கை பாரதிய ஸ்டேட் வங்கி, விஜயா வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா , யூகோ பாங்க்,சிண்டிகேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், இந்திய ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தேனா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, மத்திய வங்கி, கனரா வங்கி, மகாராஷ்டிரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, ஆக்ஸிஸ் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் அலாகாபாத் வங்கிகளில் திறக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+