பங்கு சந்தையில் முதலீடு செய்தால் ரிஸ்க் உள்ளது என்று காரணத்திற்காகவே பெரும்பாலான முதலீட்டாளர்கள் பாதுகாப்பான அவசரத்திற்கு உடனே எடுக்கக் கூடிய ரிஸ்க் இல்லா பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் ப் ஓது முதிர்வு காலத்தின் போது எவ்வளவு வட்டி விகித லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார்களோ அதில் ஒரு ரூபாய் கூடக் குறையாமல் கிடைக்கும். ஆனால் பிற சேமிப்புத் திட்டங்களில் அப்படி இல்லை.
5 வருட வரிச் சேமிப்புத் திட்டம்
5 வருட வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது லாபமாக வரும் வட்டி தொகைக்கு வருமான வரித் துறை வரி விலக்கு அளிக்கிறது. அதுவும் அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரையில் மட்டும் தான்.
பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்
அன்மையில் வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ள நிலையில் அனைவரையும் கவரும் ஒரு திட்டமாகவும் மாறியுள்ளது. சில வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது 8.5 சதவீத வட்டி விகிதம் வரை லாபம் அளிக்கின்றன.
முதலீட்டாளர்கள்
சில பிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்கள் 10 வருடங்களை ஒரே அடியாக முதலீடு செய்வார்கள். சிலர் 5 வருடங்கள் எனப் பிரித்து முதலீடு செய்வார்கள். எனவே இதில் எது சிறந்தது என்று எங்குப் பார்ப்போம்.
எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கி தற்போது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடம் முதலீடு செய்யும் போது 6.5 சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. அதில் 1.50 லட்சம் ரூபாயினை 10 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது முதிர்வடையும் போது 2,85,839 ரூபாயாகத் திரும்பக் கிடைக்கும்.
இதுவே 5 வருடத்திற்கு முதலீடு செய்திருந்தால் 2,14,839 ரூபாயாகக் கிடைத்திருக்கும். வருமான வரி விலக்குக் கிடைத்திருக்கும். மீண்டும் அந்த முதிர்வு தொகையினை மறு முதலீடு செய்யும் போது அதே வட்டி விகிதம் என்றால் 10 வருடத்தில் 3,07,705 ரூபாயாக லாபம் கிடைக்கும்.
குறிப்பு
எனவே பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது 5 வருடங்கள் எனப் பிரித்து முதலீடு செய்யும் போது அதிக லாபம் கிடைக்கும் என்றும், குறைந்த காலத்திற்கு அதிக லாபம் என்றும், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது லாபம் குறையும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications