வங்கிகளைப் போன்று வங்கி அல்லாது சில நிதி நிறுவனங்களும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன. அப்படி அளிக்கப்படும் டெபாசிட் திட்டங்களைத் தான் கம்பெனி டெபாசிட்ஸ் என அழைக்கின்றனர்.
முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிறுவனத்தில் பணத்தினை டெபாசிட் செய்வது கம்பெனி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் ஆகும். நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லா நிதி நிறுவனங்களும் இது போன்ற டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவை பாதுகாப்பானது அல்ல.
ஏன் பாதுகாப்பானது அல்ல?
ஒருவேலை நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனம் திவாலானால் டெபாசிட் பத்திரத்தினை விற்றுப் பணத்தினைத் திரும்பப் பெற முடியாத போகக் கூடிய ரிஸ்க் உள்ளது. ஆனால் ரிஸ்க் எல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடர மாதிரி என்பவர்கள் முதலீடு செய்தால் அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் சில கம்பெனி டெபாசிட் திட்டங்களை இங்குப் பார்ப்போம்.
கேரளா டிரான்ஸ்போர்ட் டெவலப்மெண்ட் ஃபினான்ஸ் கார்ப்ரேஷன் லிமிட்டட்
கேரளா டிரான்ஸ்போர்ட் டெவலப்மெண்ட் ஃபினான்ஸ் கார்ப்ரேஷன் லிமிட்டட் வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்தால் 8.50 சதவீதம் லாபம் கிடைக்கும்.
டிஎச்எப்எல்
டிரிபிள் ஏ ரேட்டிங் உடைய டிஎச்எப்எல் ஸ்வயம் சித்தா மற்றும் ஆஷ்ரே பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 18 மாதங்கள் முதலீடு செய்தால் 8.50 சதவீத லாபமும், 15 மாதம் முதலீடு செய்தால் 7.80 சதவீத லாபமும் அளிக்கின்றனர்.
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபினான்ஸ் லிமிட்டட்
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபினான்ஸ் லிமிட்டட் வழங்கும் டிரிபிள் ஏ ரேட்டிங் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் 12 மாதங்களுக்கு 7.75 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. ஆனால் குறைந்தபட்சம் 10,000 ரூபாயினை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
டிஎச்எப்எல் ஆஷ்ரே பிளஸ்
எடிஎச்எப்எல்-ன் ஆஷ்ரே டெபாசிட் பிளஸ் டிரிபிள் ஏ ரேட்டிங் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 12 மாதங்களது 7.75 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. ஆனால் குறைந்தபட்சம் 10,000 ரூபாயினை டெபாசிட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் ஃபினான்ஸ்
பஜாஜ் ஃபினான்ஸின் டிரிபிள் ஏ ரேட்டிங் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 12 முதல் 23 மாதங்கள் வரை முதலீடு செய்தால் 7.60 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும்.
மஹிந்தரா ஃபினான்ஸ்
மஹிந்தரா ஃபினான்ஸ் நிறுவனத்தின் டிரிபிள் ஏ ரேட்டிங் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7.50 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 10,000 ரூபாய் ஆகும்.
ஐசிஐசிஐ ஹோம் ஃபினான்ஸ்
ஐசிஐசிஐ ஹோம் ஃபினான்ஸ் நிறுவனத்தின் டிரிபிள் ஏ ரேட்டிங் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 20 மாதங்களுக்கு 7.50 சதவீதமும், 15 மாதங்களுக்கு 7.40 சதவீத வட்டி விகித லாபமும் கிடைக்கும். குறைந்தபட்ச முதலீடு 10,000 ரூபாய் ஆகும்.
எச்டிஎப்சி
எச்டிஎப்சி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 12 மாதங்களுக்கு 7.40 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும். ஆனால் குறைந்தட்சம் 20,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
பிஎன்பி ஹவுசிங் ஃபினான்ஸ்
பிஎன்பி ஹவுசிங் ஃபினான்ஸின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 22 மாதங்கள் முதலீடு செய்யும் போது 7.40 சதவீத வட்டி விகித லாபமும், 15 மாதங்கள் முதலீடு செய்யும் போது 7.35 சதவீத வட்டி விகித லாபமும் அளிக்கப்படும். குறைந்தட்ச முதலீடு 20,000 ரூபாய் ஆகும்.
எல்ஐசி ஹவுசிங் ஃபினான்ஸ்
எல்ஐசி ஹவுசிங் ஃபினான்ஸின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7.35 சதவீதம் முதல் 7.30 சதவீதம் வட்டி விகிதம் வரை லாபம் அளிக்கப்படுகிறது. ஆனால் குறைந்தபட்ச முதலீடு 10 லட்சம் ரூபாய் என்பது சாமினிய மக்களால் முடியாத ஒன்று.
ஹட்கோ
ஹட்கோவின் டிரிபிள் ஏ பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7.25 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது.
ஐசிஐசிஐ ஹோம் ஃபினான்ஸ்
ஐசிஐசிஐ ஹோம் ஃபினான்ஸ் நிறுவனத்தின் டிரிபிள் ஏ பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 13 முதல் 23 மாதங்கள் வரை முதலீடு செய்யும் போது 7.20 சதவீத லாபம் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடு 10,000 ரூபாய் ஆகும்.
எச்டிஎப்சி ஸ்மார்ட் டெபாசிட்
எச்டிஎப்சி ஸ்மார்ட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 12 மாதங்களுக்கு 7.20 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படுகிறது. 50,000 ரூபாய் குறைந்தபட்ச முதலீடு தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரம் பிஎன்பி பரிபாஸ் ஹோம் ஃபினான்ஸ்
சுந்தரம் பிஎன்பி பரிபாஸ் ஹோம் ஃபினான்ஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 12 மாதங்களுக்கு 6.75 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. இது வங்கிகளில் அளிக்கப்படும் அதே வட்டி விகித லாபமே ஆகும். குறைந்தபட்ச முதலீடு 10,000 ரூபாய் ஆகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications