டிசம்பர் 05, 2018 முதல் இந்த ஐந்து புதிய PAN அட்டை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறதாம்..?

இந்தியாவில் வருமான வரித் துறை வழங்கும் ஒரு அடையாள அட்டை தான் pan கார்ட். முதல் மாத சம்பளம் வாங்கும் போதே பான் அட்டை இல்லை என்றால் 20 % வரி பிடித்துவிடுவோம் என பயமுறுத்தி தான் நம்மில் பாதி பேர் வரி தாக்கல் செய்திருப்போம்.

மாற்றம்

மாற்றம்

இப்போது பணமதிப்பிழப்பு டிமானிட்டைசேஷன், சரக்கு மற்றும் சேவை வரி, மோடிஜியின் நம்ம சர்க்கார் போன்ற மொக்கை திட்டங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்த சூட்டில் இப்போது வரிதாரர்களின் பான் அட்டைகளில் சில மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மாற்றம் 1

மாற்றம் 1

நம்முடைய பான் அட்டையில் முதலில் நம் பெயரும், அதற்கு கீழ் நம் தந்தையின் பெயரும் குறிப்பிடுவார்கல். ஆனால் இனி அப்பா பெயரை இனி குறிப்பிட விரும்பினால் குறிப்பிடலாம். குறிப்பிட விருப்பமில்லை என்றால் தந்தை பெயர் இல்லாமலேயே பான் அட்டை வழங்கப்படும்.

வரிதாரர் பிரிவுகள்

வரிதாரர் பிரிவுகள்

வருமான வரித்துறை வரிதாரர்களை ஏழு பெரும் பிரிவுகளாக பிரிக்கிறது.
1. Individual - தனி நபர்கள்,
2. Hindu Undivided family - இந்து கூட்டுக் குடும்பம்,
3. Firm - சிறு நிறுவனம் அல்லது நிறுமங்கள்
4. Charitable trusts - தான தர்மங்களை மேற்கொள்ளும் ட்ரஸ்டுகள்,
5. Association of persons - தனி நபர்களால் உருவாக்கப்படும் சங்கங்கள்,
6. Body of individuals - தனி நபர்களால் உருவாக்கப்படும் மற்ற அமைப்புகள்,
7. Local Authority and Corporate - கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசு அதிகார அமைப்புகள்.

மாற்றம் 2

மாற்றம் 2

மேலே சொல்லிய ஏழு பிரிவுகளில் தனி நபர் தவிர மற்றவர்கள் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் சம்பாதித்தாலோ, நன்கொடைகள் பெற்றாலோ, வருவாய் ஈட்டினாலோ, விற்பனை செய்தாலோ கட்டாயம் பான் அட்டை வாங்க வேண்டும் என்பது பழைய விதி.

இப்போது

இப்போது

இனி ஒரு நிதி ஆண்டில் 2,50,000 ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டாலே கட்டாயம் பான் அட்டை வாங்க வேண்டுமாம். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பார்களாம்.

எப்போது

எப்போது

மேலே சொன்னது போல ஒரு நிறுவனம் ஒரு நிதி ஆண்டில் 2,50,000 ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது என்றால் அடுத்த நிதி ஆண்டின் மே மாதம் 31-ம் தேதிக்குள் பான் அட்டைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

 மாற்றம் 3

மாற்றம் 3

1. Individual - தனி நபர்கள்,
2. Hindu Undivided family - இந்து கூட்டுக் குடும்பம்,
3. Firm - சிறு நிறுவனம் அல்லது நிறுமங்கள்
4. Charitable trusts - தான தர்மங்களை மேற்கொள்ளும் ட்ரஸ்டுகள்,
5. Association of persons - தனி நபர்களால் உருவாக்கப்படும் சங்கங்கள்,
6. Body of individuals - தனி நபர்களால் உருவாக்கப்படும் மற்ற அமைப்புகள்,
7. Local Authority and Corporate - கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசு அதிகார அமைப்புகள்.

இந்த ஏழு பிரிவுகளில், தனி நபர் தவிர மற்ற அமைப்புகளில் பொறுப்பில் இருப்பவர்கள், இயக்குநர்கள், மேலாளர்கள், முதன்மை செயல் அதிகாரிகள், நிர்வாகிகள், உருப்பினர்கள், கூட்டாளிகள், நிறுவனர்கள் என அனைவரும் கட்டாயம் பான் அட்டை வைத்திருக்க வேண்டும்.

 

மாற்றம் 4

மாற்றம் 4

ஆதார் எண்ணை பான் அட்டை உடன் இணைப்பது கட்டாயம் என்று உச்ச நீதி மன்ற இறுதி தீர்ப்பே சொல்லி விட்டது. ஆக அதை நேரடி வருவாய் ஆணையமும் தன் சுற்றறிக்கை மூலம் வரிதாரர்களுக்கு அழுத்தமாகச் சொல்லி இருக்கிறது.

மாற்றம் 5

மாற்றம் 5

பான் அட்டைக்கு விண்ணப்பித்து அடுத்த ஐந்தாவது மணி நேரத்தில் கையில் புதிய பான் அட்டை உடன் வரிதாரர்கள் சென்றால் எப்படி இருக்கு. அதற்கான நடவடிக்கைகளை வருமான வரித்துறை எடுத்துவருகிறதாம். வரும் 2019-ம் ஆண்டிலேயே நான்கு மணி நேரத்தில் பான் அட்டை வழங்கும் சேவையை தொடங்க இருக்கிறார்களாம்.

மாற்றம் 6

மாற்றம் 6

இந்தியாவிலேயே வசிக்கும் இந்திய குடிமக்கள் பான் அட்டைக்கு படிவம் 49A விண்ணப்பிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் படிவம் 49AA விண்ணப்பிப்பார்கள். இனி அப்படிவங்களை விண்ணப்பிக்கும் போதே ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு எண் (Enrolment ID) விவரங்களையும் சேர்த்து வழங்க வேண்டும்.

விலக்கு

விலக்கு

வருமான வரிச் சட்டப்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், மிக மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஜம்மூர் & கஷ்மீர், அஸ்ஸாம், மேகாலயா போன்ற மாநிலங்களில் வசிப்பவர்கள் ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு எண்ணைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+