வரி செலுத்தியாச்சா..? இல்லன்னா 12% வட்டியோடு செலுத்தனுமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதென்னய்யா அநியாயமா இருக்கு எனக் கொந்தளிக்காதீர்கள். இந்த சட்டம் கிட்ட தட்ட வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்தே இருக்கிறது. ஆனால் அவ்வப் போது புது பாலிஷ் எல்லாம் போட்டு இன்று 12% வரிக்கு வட்டி கட்டும் விதத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.

 

வரி வேறு வரி தாக்கல் வேறு

வரி வேறு வரி தாக்கல் வேறு

முதலில் உங்களுக்கு வரும் வருமானத்துக்கு தகுந்தாற் போல வரிகளை அரசிடம் செலுத்தி விட வேண்டும். அதன் பின் இந்தஇந்த தேதிகளில் அரசுக்கு வரி செலுத்தி விட்டேன். எனக்கு வந்த மொத்த வருமானம், இவ்வளவு நான் செலுத்திய வரி இவ்வளவு, இந்திய வருமான வரிச் சட்டப் படி என் வருமானத்து சரியாக வரி செலுத்திவிட்டேன் என்று சொல்வது தான் வரி தாக்கல். சரி வட்டி கணக்குக்கு வருவோம்.

சட்டம்

சட்டம்

நாம் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு வட்டி போடுவது வருமான வரிச் சட்டப் பிரிவு 234 தான். ஆக இதை கொஞ்சம்m புரிந்து கொள்வோம். இதில் முக்கியமாக மூன்று விஷயங்கள் அதாவது மூன்று சட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன.

234A
 

234A

தாமதமாக வரி தாக்கல் செய்யும் ஒவ்வொரு மாதத்துக்கும், செலுத்த வேண்டிய வரி தொகைக்கு 1% வட்டி செலுத்த வேண்டும். வரி தாக்கல் செய்ய அரசு சொல்லும் கடைசி தேதிக்கு அடுத்த நாளில் இருந்து தாமதமான மாதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

 உதாரணம்

உதாரணம்

ஜோசப் ஒரு மாத சம்பளதாரர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கு எல்லா வருமான வரிக் கழிவுகள் போக வரியாக 4,000 ரூபாய் செலுத்த வேண்டும். இவர் கடந்த 31 ஜூலை 2018-ல் வரி செலுத்தி, வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை வரியைச் செலுத்தவும் இல்லை, வரி தாக்கலும் செய்யவில்லை. ஆக ஜனவரி 2019 வரைக் கணக்கிட்டால் 4000 *1% * 6 = 240 ரூபாய் வட்டியாக செலுத்த வேண்டும். ஒட்டு மொத்தத்தில் 4,240 ரூபாய் வரி செலுத்தி, வரி தாக்கல் செய்ய வேண்டும்.

234B

234B

தாமதமாக வரி செலுத்தும் ஒவ்வொரு மாதத்துக்கும், ஒரு சதவிகிதம் வரி செலுத்த வேண்டிய தொகையில் வட்டியாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும 31 மார்ச் தான் வரி செலுத்துவதற்கான கடைசி தேதி. ஆக மார்ச் மாதத்துக்கு பின் ஏப்ரல் தொடங்கி எந்த மாதத்தில் வரி செலுத்துகிறோமோ அந்த மாதம் வரை இந்த ஒரு சதவிகித வட்டி கணக்கிடப்படும்.

உதாரணம்

உதாரணம்

அப்துல் ஒரு நிறுவனத்தின் மாதம் 30,000 சம்பளம் வாங்குகிறார். ஆக ஒரு நிதி ஆண்டுக்கு 3,60,000. இவர் வருமான வரியாக 5,500 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் அப்துல் 31 மார்சு 2018-க்குள் செலுத்தவில்லை. அவர் ஜூலை 2018-ல் வரி தாக்கல் செய்யும் போது செலுத்துகிறார். ஆக 5,500 * 1%*4 = 220 ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும். ஆக 5720 ரூபாய் வரி மற்றும் வட்டி செலுத்தி வரி தாக்கல் செய்ய வேண்டும்.

234C

234C

இந்த சட்டம் முன் கூட்டி வரி செலுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும். யார் எல்லாம் முன் கூட்டி வரி செலுத்த வேண்டும்..? ஒரு நிதி ஆண்டுக்கான வருமானத்தில் 10,000 ரூபாய்க்கு மேல் வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். இந்த சட்டப்படி...

15 ஜூன் - செலுத்த வேண்டிய மொத்த வரியில் 15%

15 செப்டம்பர் - செலுத்த வேண்டிய மொத்த வரியில் 45%

15 டிசம்பர் - செலுத்த வேண்டிய மொத்த வரியில் 75%

15 மார்ச் - செலுத்த வேண்டிய மொத்த வரியில் 100% என வரித் தொகையைப் பிரித்துச் செலுத்தி இருக்க வேண்டும்.

செலுத்தாதவர்களுக்கு..?

செலுத்தாதவர்களுக்கு..?

அப்படி மேலெ சொன்ன காலத்துக்குள், சொன்ன அளவுக்கு வரி செலுத்தவில்லை என்றால், செலுத்தாத வரித் தொகைக்கு ஒவ்வொரு மாதத்துக்கும் 1% வட்டி கூடுதலாக செலுத்த வேண்டும். உதாரணமாக ரஞ்சித் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 50,000 சம்பளம் வாங்குகிறார். எனவே ஆண்டுக்கு 6,00,000 மொத்த வருமானம். இதற்கு வரி கணக்கிட்டால் 32,500 ரூபாய் செலுத்த வேண்டும்.

எந்த மாதம் எவ்வளவு..?

எந்த மாதம் எவ்வளவு..?

15 ஜூன் - 4,000 ரூபாய், 15 செப்டம்பர் - 14,000 ரூபாய், 15 டிசம்பர் - 20,000 ரூபாய், 15 மார்ச் - 32,500 ரூபாய் என பிரித்து அந்தந்த காலத்துக்குள் செலுத்தி இருக்கிறார். ஆனால் 15 ஜூன் - 4,875 ரூபாய், 15 செப்டம்பர் - 14,625 ரூபாய், 15 டிசம்பர் - 24,375 ரூபாய், 15 மார்ச் - 32,500 ரூபாய் செலுத்தி இருக்க வேண்டும்.

ஆக ஜூன் மாதத்தில் 875 ரூபாயும், செப்டம்பர் மாதத்தில் 625 ரூபாயும், டிசம்பர் மாதத்தில் 4375 ரூபாயும் குறைவாக செலுத்தி இருக்கிறார்கள். இந்த தொகைக்கு விட்டுப் போன மாதத்துக்கு மட்டும் வட்டி கணக்கிட்டால் போதுமானது.

வட்டிக் கணக்கு

வட்டிக் கணக்கு

ஜூன் 15 க்கு வட்டி - ஜூலை முதல் மார்ச் வரையான 9 மாதத்துக்கு ஒரு சதவிகிதம் வட்டி என 875 ரூபாய்க்கு 78.75 ரூபாய் செலுத்த வேண்டும். செப்டம்பர் 15க்கு வட்டி - அக்டோபர் முதல் மார்ச் வரையான 6 மாதத்துக்கு ஒரு சதவிகிதம் வட்டி என 625 ரூபாய்க்கு 37.50 ரூபாய் செலுத்த வேண்டும். டிசம்பர் 15க்கு வட்டி - டிசம்பர் முதல் மார்ச் வரையான 3 மாதத்துக்கு ஒரு சதவிகிதம் வட்டி என 4375 ரூபாய்க்கு 131.25 ரூபாய் செலுத்த வேண்டும். ஆக மொத்தம் 78.75 + 37.50 + 131.25 = 247.50 ரூபாய் வட்டியாக மட்டும் செலுத்த வேண்டி இருக்கும்.

தப்பிச்சுக்குங்க சார்..?

தப்பிச்சுக்குங்க சார்..?

இந்த சிக்கலான கணக்கு வழக்குகள் தேவையா சார்..? சுருக்கமாக 2018 - 19-ல் ஆண்டுக்கு 4,40,000 ருபாய்க்கு கீழ் சம்பாதித்தவர்கள் வரும் மார்ச்சுக்குள் உங்கள் வரியைச் செலுத்துங்கள். 4,40,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தவர்களுக்கு முன் கூட்டி வரி செலுத்த வேண்டி இருக்கும் அதை உங்கள் ஆடிட்டரிடம் கணக்கு கேட்டு செலுத்தி இந்த வட்டிக் கணக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்களேன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

income tax act section 234A, 234B, 234C in tamil with explanations

income tax act section 234A, 234B, 234C in tamil with explanations
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X