ஒரே நாளில் ரீ ஃபண்டு கலக்கும் வருமான வரித் துறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இடைக்கால பட்ஜெட்டில் "ஒரே நாளில் மக்களின் வருமான வரிப் படிவங்கள் சரி பார்க்கப்பட்டு அவர்களுக்கான ரீ ஃபண்டுகள் வழங்கப்படும்" என பியுஷ் கோயல் பெருமிதத்துடன் அறிவித்தார்.

 

அதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே தொழில்நுட்ப அணியினரோடு பேசி தயாராகிக் கொண்டிருப்பதை நேரடி வரி வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா தற்போது தெரிவித்திருக்கிறார்.

அடுத்த சில வருடங்களில் மக்கள் வருமான வரித் துறை சார்ந்த அதிகாரிகளைக் கூட பார்க்காமல் நேரடியாக அவர்களே வரி தாக்கல் செய்துவிட்டு கிளம்புவது போன்ற வசதிகளைக் கொண்டு வர இருக்கிறார்களாம்.

நோட்டீஸ் (Assessment order)

நோட்டீஸ் (Assessment order)

வருமான வரித்துறையில் இருந்து சரியாக வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் (Assessment order) வழங்கப்படும். இதுவரை நோட்டீஸ் (Assessment order) வழங்கப்பட்டவர்கள் முதலில் நேரடியாக ஆடிட்டர்களைச் சந்தித்து வருமான வரிப் பிரச்னைகளை அறிந்து கொள்வார்கள். அதன் பின் தான் வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்று பிரச்னையை தீர்க்க முயல்வார்கள்.

இனி அப்படி அல்ல

இனி அப்படி அல்ல

இனி ஒருவருக்கு நோட்டீஸ் (Assessment order) வந்தால் அவர் தன்னுடைய ஆடிட்டரைப் பார்த்து நேரடியாக வருமான வரித்துறை வலைதளத்தில் கிடைக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பிரச்னைகளில் இருந்து வெளிவரும் விதத்தில் வருமான வரித்துறையின் வலைதலங்கள் மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.

 மேல் விசாரனைகள்
 

மேல் விசாரனைகள்

ஒரு படி மேலே போய், வருமான வரியை உண்மையாகவே செலுத்தாமல் வேண்டும் என்றே அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்தவர்களுக்குக் கூட இனி விசாரணைகளை ஆன்லைனிலேயே வருமான வரித் துறை அதிகாரிகளின் முகம் கூட பார்க்காத வண்ணம் தயார் செய்து வருகிறார்களாம்.

ஆன்லைனில் இதுவரை

ஆன்லைனில் இதுவரை

கடந்த 2017 - 18 நிதி ஆண்டுக்கான வருமான வரித் துறையினர் கொடுத்த நோட்டீஸ் (Assessment order)களில் 2.06 லட்சம் நோட்டிஸ்களுக்கு ஆன்லைனிலேயே தீர்வு கண்டு வரியைச் செலுத்த வைத்திருக்கிறார்களாம். எனவே இதை இந்தியா முழுமைக்கும் செய்வது தான் வருமான வரித் துறை இலக்கா வைத்திருக்கிறார்களாம்.

நமக்கு என்ன

நமக்கு என்ன

இனி வருமான வரிப் படிவத்தை ஆன்லைனில் நமக்கு நம் விவரங்கள் நிரப்பப்பட்டே கிடைக்குமாம். நம் வருமானங்கள், முதலீடுகள் மற்றும் செலவுகளை மட்டும் நிரப்பி submit கொடுத்தால் போதுமாம். அடுத்த 24 மணி நேரத்துக்குள் சரி பார்க்கப்பட்டு ரீஃபண்டு இருந்தால் வரி செலுத்தியவரின் கணக்கிற்கே வரவு வைக்கப்படுமாம். இந்த அளவுக்கு அரசு வேகமெடுக்க இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

income tax department is planning to process and initiate refudn within a day or two

income tax department is planning to process and initiate refudn within a day or two
Story first published: Sunday, February 3, 2019, 17:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X