இன்று 10 கம்ப்யூட்டரோடு நான்கு பேர் அவ்வளவு ஏன் ஒரு கம்ப்யூட்டரோடு ஒருவர் இருந்தால் கூட தை ஸ்டார்ட் அப் என சொல்லிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு தென் இந்தியாவில் குறிப்பாக பெங்களூரூ மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் ஸ்டார்ட் அப் மோகம் தலைவிரித்தாடுகிறது.
எம்பிஏ படித்தவர்கள் எல்லாம் ஒருவனிடம் கைநீட்டி சம்பளம் வாங்குவதற்கு பதிலாக செத்துவிடலாம் என கல்லூரிகளிலேயே சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள்.
பத்தாக் குறைக்கு மோடிஜி வேறு தன் பங்குக்கு அங்கிட்டு "ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா" என வீர முழக்கம் செய்கிறார். ஆனால் இங்கிட்டு வருமான வரித் துறையினர் மூலம் நோட்டிஸ் (angel tax notices) அம்பாக விட்டுக் கொண்டிருப்பதை கணக்கெடுத்துச் சொல்கிறது Indian Private Equity and Venture Capital Association (IVCA) என்கிற ஸ்டார்ட் அப் அமைப்பு.
ஏஞ்சல் டேக்ஸ் என்றால் என்ன..?
ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தன் முதல் முதலீடாக பெறும் தொகையைத் தான் எஞ்சல் இன்வெஸ்மெண்ட் என்பார்கள். இந்த முதலீடுத் தொகையை கடந்த நிதி ஆண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்த நபர்களிடமிருந்தோ அல்லது ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் இருப்பவர்களிடமிருந்தோ அல்லது பெறு நிறுவனங்களில் இருந்தோ பெற்றால் மட்டுமே இந்த ஏஞ்சல் டேக்ஸ் விதிக்கப்படாது. அப்படி இல்லாமல் வேறு யாரிடம் இருந்து முதல் முறையாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடுகளை வாங்கினாலும் அதற்கு வருமான வரி விதிக்கப்படும். இந்த வரிக்குப் பெயர் தான் ஏஞ்சல் டேக்ஸ். இந்த வரியைச் செலுத்தச் சொல்லிக் கேட்கும் நோட்டீஸுக்குத் தான் ஏஞ்சல் டேக்ஸ் நோட்டிஸ் என்று பெயர்.
உனக்குமா... உனக்குமா...
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சுமார் 2,100 நிறுவனங்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்தியாவில் பதிவ் செய்து ஓரளவுக்கு ஒழுங்காக செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,883. இதில் ஓலா, உபர் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களும் அடக்கம். அதில் சுமார் 73 சதவிகித நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விட்டிருக்கிறது வருமான வரித்துறை.
இது என்ன பிரிவுங்க..?
வருமான வரிச் சட்டம் பிரிவு 68 மற்றும் வருமான வரிச் சட்டம் பிரிவு 56(2)(viib} (angel tax)-ன் கீழ் நோட்டிஸ் வழங்கப்படுகிறதாம். 2,883 ஸ்டார்ட் அப்களில் 73 % ஸ்டார்ட் அப்கள் 50 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றவர்களுக்கு மட்டுமே கட்டம் கட்டி ஏஞ்சல் டேக்ஸ் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்களாம்.
என்ன செய்யலாம்
Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) மற்றும் Central Board of Direct Taxes (CBDT) ஆகிய இரண்டு அமைப்புகளிடமும் ஏஞ்சல் முதலீடுகளுக்குச் சில விவரங்களைத் தாக்கல் செய்தால் இந்த பிரச்னையே வராதாம். ஆனால் அது என்ன மாதிரியான விண்ணப்பங்கள் என்கிற செய்திகள் இதுவரை வெளியாகவில்லை.
ஏன் எங்களா நோண்டுறீங்க..?
பல பணக்காரர்கள் தங்களின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க இப்படி போலி நிறுவனங்கள் பெயரில் பணத்தை அனுப்பி சொகுசாக வாழ்கிறார்கள். புதிதாக வளரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொந்தரவு செய்வது எங்கள் நோக்கமல்ல, போலி நிறுவனங்கள் மூலம் பண மோசடி செய்யப்படக் கூடாது என்பது தான் எங்கள் நோக்கமென விளக்கமளித்திருக்கிறது. குறிப்பாக ஏஞ்சல் இன்வெஸ்மெண்ட் பெறுபவர்களின் எப்படிப் பெற்றார்கள், யாரிடம் இருந்து பெற்றார்கள் என்கிற விளக்கம் வருமான வரித்துறைக்கு திருப்தி அளிக்க வேண்டும் இல்லை என்றால் வரி செலுத்தியே ஆக வேண்டும் என கறார் காட்டுகிறார்களாம்.
ola uber
ஓலா, உபர், சுவிக்கி போன்ற நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நிறுவனங்களே கோடிக் கணக்கில் முதலீடு செய்வதால் இந்த நோட்டிஸ்கள் அவர்களுக்கு வழங்கப்படவில்லையாம். ஆனால் மாறாக அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளிடமே கடன் வாங்கி ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தும் இளம் தலைமுறை பிசினஸ்மேன்களுக்கு ஏஞ்சல் டேக்ஸ் நோட்டிஸ் வந்து கொண்டே இருக்கிறது. காரணம் அப்பா, அம்மா, தம்பி தங்கைகள் யாருமே கடந்த ஆண்டில் 50 லட்சத்துக்கு மேல் வருமான வரி தாக்கல் செயயவில்லையே..? என்கிறார்களாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications