20 வருட சம்பளத்தை ஒரே நாளில் பெற்ற ஊழியர்..! உங்களுக்கும் வேண்டுமா..?

By Gowthaman Mj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சுனில் ஒர் தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த பிப்ரவரி 2019-ல் தான் ஓய்வு பெற்றார். வயது 60. இவர் ஓய்வு பெறும் போது மாத சம்பளம் 51,000 ரூபாய். இவர் ஓய்வு பெறும் போது கடைசி மாத சம்பளம், கொஞ்சம் ரோஜாப்பூ, ஒரு கிலோ இனிப்பு வாங்கிக் கொடுத்து அனுப்பி விட்டார்கள் நிறுவனத்தினர்.

  ஆனால் 2019 மார்ச் 01-ம் தேதி வருமான வரி எல்லாம் போக, இவர் கையில் 1,22,40,000 ரூபாய் பெற்றார் அதுவும் ஒரு நிமிடத்தில். எப்புடிங்க. இந்த காலத்துல ஒரு மனிஷன் கையில் காசு பாக்குறதே பெரிய விஷயம். அதுலயும் எப்படி 1.22 கோடி எனக் கேட்டால் விளக்குகிறார்.

   

  சுனில் தன் 23-வது வயதில் இருந்து வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார். தன் 46-வது வயதில் (2005-ல்) கையில் இருந்த 5.6 லட்சம் ரூபாயை அப்படியே 23.7 சதவிகிதம் அளவுக்கு அதிக வருமானம் தரக் கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில்  தொடர்ந்து முதலீடு செய்து வந்தார். அடுத்த 15 வருடங்களுக்கு முதலீடு செய்தாராம்.

  கூட்டு வட்டி

  5.6 லட்சத்துக்கு 23.7% வருமானம் போட்டால் 1.32 லட்சம் வரும். ஆக அடுத்த வருடம் 5.6 + 1.32 = 6.92 லட்சத்துக்கு 1.64 லட்சம் வருமானம் கிடைக்கும். இப்படி 15 வருடம் மனிதர் அந்த முதலீட்டில் கை வைக்கவில்லை. புத்திசாலித்தனமாக இந்த முதலீடுகள் மூலம் வந்த வருமானத்துக்கு வரியும் கட்டத் தேவை இல்லாத ரீதியில் நல்ல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளைத் தேடி தேடி செய்திருக்கிறார். அந்த கட்டுப் பாடுக்கும் கூட்டி வட்டியின் பலத்துக்குக் கிடைத்த பலன் தான் இந்த 1.22 கோடி ரூபாய்.


  Sunil Investments     
  Year Previous amount with returns Additional Bonus Amount Principal amount 23.70 % In the end of that yearTotal amount with returns
  2005 0 0 560,000 132,720 692,720
  2006 692,720   692,720 164,175 856,895
  2007 856,895   856,895 203,084 1,059,979
  2008 1,059,979   1,059,979 251,215 1,311,194
  2009 1,311,194   1,311,194 310,753 1,621,947
  2010 1,621,947   1,621,947 384,401 2,006,348
  2011 2,006,348   2,006,348 475,504 2,481,852
  2012 2,481,852   2,481,852 588,199 3,070,051
  2013 3,070,051   3,070,051 727,602 3,797,653
  2014 3,797,653   3,797,653 900,044 4,697,697
  2015 4,697,697   4,697,697 1,113,354 5,811,051
  2016 5,811,051   5,811,051 1,377,219 7,188,271
  2017 7,188,271   7,188,271 1,703,620 8,891,891
  2018 8,891,891   8,891,891 2,107,378 10,999,269
  2019 10,999,269   10,999,269 2,606,827 13,606,096

  என்ன செய்யப் போகிறார்

  60 வயதில் இந்த 1.22 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டால் சிரிக்கிறார். பிறகு விளக்குகிறார். தம்பி இந்த 1.22 கோடி ரூபாயை கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் மீண்டும் முதலீடு செய்யப் போகிறேன். கடன் மியூச்சுவல் ஃபண்டில் SWP - Standard Withdrawal plan என ஒரு வசதி உண்டு. அதன் படி ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய் மட்டும் என் வங்கிக் கணக்குக்கு வருவது போல எழுதிக் கொடுத்திருக்கிறேன். ஆக மாதம் வந்தால் நான் வேலையில் இருந்தது போல மாதம் 50,000 ரூபாய் வந்துடும். ஆக ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது செலவு.

  வரிக் கணக்கு

  அப்படி மாதம் 50,000 ரூபாய் என்றால் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வரும். அந்த 6 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு வருமான வரி வரம்பு போக மிச்ச பணத்துக்கு வரி கட்டினால் போதும். இந்த வருடத்துக்கு 6,00,000 ரூபாய் தான். இந்த கூடுதல் ஒரு லட்சத்துக்கு மீண்டும் விபிஎஃப் அல்லது லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து கழித்துவிடுவேன். இப்படித் தான் ஒரு ரூபாய் கூட வரி கட்டாமல் என்னால் நிம்மதியாக வாழ முடியும் என்கிறார் சுனில்.

  எத்தனை வருடங்களுக்கு

  சுனில் ஆண்டுக்கு 6 சதவிகிதம் என தன் செலவை அதிகரித்துக் கொண்டே போகிறார் என்று வைத்துக் கொண்டால் கூட 2019-ல் 6 லட்சம், 2020-ல் 6,36,000, 2021-ல் 6,74,160 என அதிகரித்துக் கொண்டே போகும். இத்தனை பெரிய தொகையை தன் 1.22 கோடி ரூபாயில் இருந்து கழித்துக் கொண்டே வருகிறார்கள்.


        
  Sunil Withdrawal details          
  Year Principal Amount Yearly Withdrawals Remaining Balance to calculate Interest 8.00 % Interest Remaining Balance + 8% Interest
  2019 12,240,000 600,000 11,640,000 931,200 12,571,200
  2020 12,571,200 636,000 11,935,200 954,816 12,890,016
  2021 12,890,016 674,160 12,215,856 977,268 13,193,124
  2022 13,193,124 714,610 12,478,515 998,281 13,476,796
  2023 13,476,796 757,486 12,719,310 1,017,545 13,736,855
  2024 13,736,855 802,935 12,933,919 1,034,714 13,968,633
  2025 13,968,633 851,111 13,117,521 1,049,402 14,166,923
  2026 14,166,923 902,178 13,264,745 1,061,180 14,325,925
  2027 14,325,925 956,309 13,369,616 1,069,569 14,439,185
  2028 14,439,185 1,013,687 13,425,498 1,074,040 14,499,537
  2029 14,499,537 1,074,509 13,425,029 1,074,002 14,499,031
  2030 14,499,031 1,138,979 13,360,052 1,068,804 14,428,856
  2031 14,428,856 1,207,318 13,221,538 1,057,723 14,279,261
  2032 14,279,261 1,279,757 12,999,504 1,039,960 14,039,465
  2033 14,039,465 1,356,542 12,682,922 1,014,634 13,697,556
  2034 13,697,556 1,437,935 12,259,621 980,770 13,240,391
  2035 13,240,391 1,524,211 11,716,180 937,294 12,653,474
  2036 12,653,474 1,615,664 11,037,811 883,025 11,920,835
  2037 11,920,835 1,712,603 10,208,232 816,659 11,024,891
  2038 11,024,891 1,815,360 9,209,531 736,762 9,946,293
  2039 9,946,293 1,924,281 8,022,012 641,761 8,663,773
  2040 8,663,773 2,039,738 6,624,035 529,923 7,153,958
  2041 7,153,958 2,162,122 4,991,835 399,347 5,391,182
  2042 5,391,182 2,291,850 3,099,332 247,947 3,347,279
  2043 3,347,279 2,429,361 917,918 73,433 991,351

  ஆனால் வருமானம் வரும்

  ஆனால் மீத தொகைக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு பக்கம் வட்டி கூடிக் கொண்டே இருக்க, இவர் இன்னோரு பக்கம் ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் என செலவு செய்து கொண்டே இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் கூட 2043-ம் ஆண்டு வரை இவர் ஜாலியாக செலவு செய்யலாம். அதற்குள் எனக்கு 83 வயதாகிவிடும். நானும் நிம்மதியாக இறந்துவிடுவேன் என்கிறார்.

  நாம் எப்படி செய்வது

  இன்றைய தேதிக்கு ஒருவர் 40,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால், அவருக்கு 15 வருடம் கழித்து எவ்வளவு சம்பளம் வரும். ஆண்டுக்கு 5 சதவிகிதம் சம்பள உயர்வு வைத்துக் கொண்டால் கூட 15 வருடத்துக்கு பின் 2034-ம் ஆண்டில் 83,150 ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொண்டிருப்போம்.


  our Investments     
  Year Previous amount with returns Additional Bonus Amount Principal amount 23.70 % In the end of that yearTotal amount with returns
  2019 0 0 850,000 201,450 1,051,450
  2020 1,051,450   1,051,450 249,194 1,300,644
  2021 1,300,644   1,300,644 308,253 1,608,896
  2022 1,608,896   1,608,896 381,308 1,990,205
  2023 1,990,205   1,990,205 471,678 2,461,883
  2024 2,461,883   2,461,883 583,466 3,045,349
  2025 3,045,349   3,045,349 721,748 3,767,097
  2026 3,767,097   3,767,097 892,802 4,659,899
  2027 4,659,899   4,659,899 1,104,396 5,764,295
  2028 5,764,295   5,764,295 1,366,138 7,130,433
  2029 7,130,433   7,130,433 1,689,913 8,820,346
  2030 8,820,346   8,820,346 2,090,422 10,910,768
  2031 10,910,768   10,910,768 2,585,852 13,496,620
  2032 13,496,620   13,496,620 3,198,699 16,695,319
  2033 16,695,319   16,695,319 3,956,791 20,652,110
             

  எவ்வளவு ரூபாய்

  ஆக 83150 *12 = 9,97,800 ரூபாய் ஒரு ஆண்டு சம்பளம். என்றால் 9.98 லட்சம் * 20 வருடம் கணக்கிட்டால் சுமார் 2 கோடி ரூபாய் வேண்டும். ஆக 15 வருடங்கள் பிறகு நம்முடைய 20 வருட சம்பளத்தை ஒன்றாக பெற வேண்டும் என்றால் 2 கோடி ரூபாய் வேண்டும்.


  Our Withdrawal details     
  Year Principal Amount Yearly Withdrawals Remaining Balance to calculate Interest 8.00 % Interest Remaining Balance + 8% Interest
  2034 20,166,178 960,000 19,206,178 1,536,494 20,742,672
  2035 20,742,672 1,017,600 19,725,072 1,578,006 21,303,078
  2036 21,303,078 1,078,656 20,224,422 1,617,954 21,842,376
  2037 21,842,376 1,143,375 20,699,000 1,655,920 22,354,920
  2038 22,354,920 1,211,978 21,142,943 1,691,435 22,834,378
  2039 22,834,378 1,284,697 21,549,681 1,723,975 23,273,656
  2040 23,273,656 1,361,778 21,911,878 1,752,950 23,664,828
  2041 23,664,828 1,443,485 22,221,343 1,777,707 23,999,050
  2042 23,999,050 1,530,094 22,468,956 1,797,516 24,266,472
  2043 24,266,472 1,621,900 22,644,573 1,811,566 24,456,139
  2044 24,456,139 1,719,214 22,736,925 1,818,954 24,555,879
  2045 24,555,879 1,822,367 22,733,512 1,818,681 24,552,193
  2046 24,552,193 1,931,709 22,620,484 1,809,639 24,430,123
  2047 24,430,123 2,047,611 22,382,512 1,790,601 24,173,113
  2048 24,173,113 2,170,468 22,002,645 1,760,212 23,762,857
  2049 23,762,857 2,300,696 21,462,161 1,716,973 23,179,134
  2050 23,179,134 2,438,738 20,740,396 1,659,232 22,399,628
  2051 22,399,628 2,585,062 19,814,566 1,585,165 21,399,731
  2052 21,399,731 2,740,166 18,659,566 1,492,765 20,152,331
  2053 20,152,331 2,904,576 17,247,756 1,379,820 18,627,576
  2054 18,627,576 3,078,850 15,548,726 1,243,898 16,792,624
  2055 16,792,624 3,263,581 13,529,043 1,082,323 14,611,366
  2056 14,611,366 3,459,396 11,151,970 892,158 12,044,128
  2057 12,044,128 3,666,960 8,377,168 670,173 9,047,342
  2058 9,047,342 3,886,977 5,160,365 412,829 5,573,194
  2059 5,573,194 4,120,196 1,452,998 116,240 1,569,238

  எவ்வளவு முதலீடு

  இன்று 8.50 லட்சம் ரூபாயை 23.7 சதவிகிதம் வருமானம் தரக் கூடிய நல்ல பங்கு மற்றும் ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்துவிட்டு 15 வருடங்கள் காத்திருந்தால் 2 கோடி ரூபாய் ரெடி. ஆக இன்றே உங்கள் 8.5 லட்சம் ரூபாயை முறையாக கணக்கில் காட்டி வங்கி நல்ல வருமானம் தரக் கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். 2034-ல் 2 கோடி ரூபாய் கையில் இருக்கும். நாமும் சுனில் சார் மாதிரி அடுத்த 20 வருடங்களுக்கு ஜாலியாக இருக்கலாம். இப்போது கூட ஈக்விட்டி டெக்னாலஜி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், மிட் கேப் ஃபண்டுகள், எம்.என்.சி ஃபண்டுகள் எல்லாம் 23 சதவிகிதத்துக்கு மேல் 10 ஆண்டு காலத்தில் வருமானம் கொடுக்கின்றன.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  a man who withdrawn his 20 years salary in one minute

  a man who withdrawn his 20 years salary in one minute
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more