டெல்லி: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரித் துறை வருமான வரிப் படிவம் 1 மற்றும் வருமான வரிப் படிவம் 4-ஐ வெளியிட்டிருக்கிறது.
2018 - 19 நிதி ஆண்டில் சம்பாதித்த வருமானத்துக்கு செலுத்த வேண்டிய வருமான வரிகளை இந்த படிவங்களை நிரப்பித் தான் செலுத்த வேண்டும். மற்ற வருமான வரிப் படிவம் 2,3,5,6,7 எல்லாம் தயார் செய்து கொண்டிருக்கிறார்களாம். கூடிய விரைவில் வெளியிடுவார்களாம்.
https://www.incometaxindiaefiling.gov.in/downloads/offlineUtilities?lang=eng
என்கிற இணைப்பில் இந்த புதிய வருமான வரிப் படிவம் 1 மற்Ruம் வருமான வரிப் படிவம் 4 கிடைக்கின்றன. Excel, Java என இரண்டு ஃபார்மெட்களில் கிடைக்கின்றன. ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்து நிரப்பி ஆன்லைனிலேயே சமர்பித்துவிடலாம்.
யாருக்கு எந்த படிவம்
இதில் வருமான வரிப் படிவம் 1-ஐ 2018 - 19 நிதி ஆண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு கீழ் சம்பளமாக வாங்கியவர்கள், சம்பாதித்தவர்கள் மட்டுமே நிரப்ப வேண்டும். ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர்கள், பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள் எல்லாம் வருமான வரிப் படிவம் 1-ஐ நிரப்பக் கூடாது.
பிசினஸ் & ப்ரொஃபஷனல்கள்
வருமான வரிப் படிவம் 4-ஐ டாக்டர், வழக்கறிஞர், ஆடிட்டர் போன்ற ப்ரொஃபஷனல்கள் மற்றும் சிறிய அளவில் பிசினஸ் செய்பவர்கள் நிரப்ப வேண்டும். இந்து கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள், எல் எல் பி என்றழைக்கப்படும் Limited Liability Partnership நிறுவனங்கள் கூட ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டினால் கூட இந்த வருமான வரிப் படிவம் 4-ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கட்டாய அதார்
இந்த புதிய படிவத்தில் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் அனைவருமே கட்டாயமாக ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆதார் பதிவு எண்ணையாவது கட்டாயம் குறிப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் வருமான வரிப் படிவம் ஏற்றுக் கொள்ளப்படாது.
கடைசி தேதி
வரும் ஜூலை 31, 2019-க்குள் தனி நபர்கள், பட்டையக் கணக்காளர்களிடம் தங்கள் நிறுவன அல்லது பிசினஸ் கணக்குகளை தணிக்கை செய்யத் தேவை இல்லாத பிசினஸ் செய்பவர்கள் அனைவருமே தங்கள் வருமான வரிப் படிவங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications