ரூ.11.60 லட்சம் கோடிக்கு Home Loan! மொத்த இந்திய கடனில் 13.4% வீட்டுக் கடன் மட்டுமே..!

மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி, 30 மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவின் கடன் வளர்ச்சி (Indian Loan Growth) குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இந்தியா வங்கிகள் மொத்தம் 86,33,400 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள் எனச் சொல்கிறது.

அதோடு, இந்த 86,33,400 கோடி ரூபாயில், இந்திய தொழில் துறையினருக்கு 28.85 லட்சம் கோடி ரூபாயும், Priority Sector (முதன்மைத் துறை) என்கிற பிரிவின் கீழ் 27.39 லட்சம் கோடி ரூபாயும், இந்திய சேவைத் துறையினருக்கு 24.15 லட்சம் கோடி ரூபாயும், கடனாகக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறது ஆர்பிஐ அறிக்கை.

இதில் நான்காவது பெரிய துறையாக தனி நபர் கடன் வருகிறது. இந்த தனி நபர் கடனாக மார்ச் 2019 நிலவரப்படி 22.20 லட்சம் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்கள் இந்திய வங்கிகள். மார்ச் 2018-ல் இந்த பிரிவின் கீழ் 19.08 லட்சம் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்கள். இதில் வீட்டுக் கடன் (Home Loan)-ம் அடக்கம்.

தனி நபர்க் கடன்

தனி நபர்க் கடன்

இந்த தனி நபர்க் கடன் பிரிவின் கீழ் தான் நாம் குறைந்தபட்சம் 16% வட்டிக்கு கடன் வாங்கும் தனி நபர் கடன் (Personal Loan), வீட்டுக்கு தேவையான ஏசி ஃப்ரிட்ஜ், டிவி, வாசிங் மிஷின் போன்றவைகளை வாங்கும் இ.எம்.ஐ. திட்டக் கடன்கள், வீட்டுக் கடன், ஃபிக்ஸட் டெபாசிட்டையே பிணையாக வைத்து வாங்கும் கடன் எல்லாமே இந்த தனி நபர்க் கடன் பிரிவில் தான் ஆர்பிஐ காட்டுகிறது.

கவன்னித்தீர்களா..?

கவன்னித்தீர்களா..?

இதில் சுவாரஸ்யமாக கவனிக்க வேண்டிய விஷயம், இந்திய மொத்தக் கடன் வளர்ச்சியே 12.2 சதவிகிதம் தான். இந்தியாவில் தொழிற் துறைக் கடன் வளர்ச்சி வெறும் 6.9 சதவிகிதம், ஆனால் இந்தியாவில் இந்த நுகர்வுக் கடன் வளர்ச்சியோ 16.4 சதவிகிதம். ஆக இந்தியாவில் பொருளை உற்பத்தி செய்வதை விட கூடுதலாக நுகர கடன் வாங்குகிறார்கள்.

25% நுகர்வுக்கு

25% நுகர்வுக்கு

மேலே சொன்ன 86.33 லட்சம் கோடி ரூபாயில் 25 சதவிகிதம் நுகர்வுக்காக கடன் வாங்கி இருக்கிறார்கள். ஆக இந்தியாவில் வழங்கப்படும் கடனில், 75 சதவிகிதம் தொழில் வளர்ச்சிக்காக என்றால் மீதமுள்ள 25 சதவிகிதம் நுகர்வுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. சரி துறைக்கு வருவோம். இந்த Personal Loan பிரிவை ஆர்பிஐ 8 உப பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள். Consumer Durables, Housing (Including Priority Sector Housing), Advances against Fixed Deposits, Advances to Individuals against share bonds etc.., Credit Card Outstanding, Education loan, Vehicle Loans, Other Personal Loans.

யார் எவ்வளவு

யார் எவ்வளவு

வீட்டுக் கடன் 11.60 லட்சம் கோடி ரூபாய், தனி நபர்க் கடன் 6.06 லட்சம் கோடி ரூபாய், வாகனக் கடன் 2.02 லட்சம் கோடி ரூபாய், க்ரெடிட் கார்ட் கடன் 88,300 கோடி ரூபாய், தங்களின் சொந்த எஃப்.டி டெபாசிட் பணத்தையே பிணையாகக் கொடுத்து வாங்கிய கடன் 82,900 கோடி ரூபாய், கல்விக் கடன் 68,000 கோடி ரூபாய் எனப் பட்டியல் நீள்கிறது.

இவ்வளவு அதிகம்

இவ்வளவு அதிகம்

மேலே சொன்ன 8 பிரிவுகளில் வீட்டுக் கடன் தான் அதிகம் வாங்கி இருக்கிறார்கள் இந்திய மக்கள். மொத்த 22.20 லட்சம் கோடி ரூபாயில் 11.60 லட்சம் கோடி ரூபாய் வீட்டுக் கடனாக மட்டும் வாங்கி இருக்கிறார்கள் இந்திய மக்கள். வீட்டுக் கடன் கடந்த மார்ச் 2017-ல் 8.60 லட்சம் கோடி ரூபாயாகவும், மார்ச் 2018-ல் 9.74 லட்சம் கோடி ரூபாயாகவும், மார்ச் 2019-ல் 11.60 லட்சம் கோடி ரூபாயாகவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இ.எம்.ஐ-க் கடன் குறைவு

இ.எம்.ஐ-க் கடன் குறைவு

தவணை முறையில் வீட்டுக்கு தேவையான மின்சாதனப் பொருட்களான ஏசி, ஃப்ரிட்ஜ், வாசிங் மிஷின், மைக்ரோவேவ் அவன், டிவி... போன்றவைகளை வாங்கும் கடன் அளவு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சரிந்து கொண்டே வருகிறது. கடந்த மார்ச் 2017-ல் 20,800 கோடி ரூபாயாகவும், மார்ச் 2018-ல் 19,700 கோடி ரூபாயாகவும், மார்ச் 2019-ல் 6,300 கோடி ரூபாயாகவும் சரிந்து வருகிறது. வீடாவது 40 - 50 ஆண்டுகளுக்கு சொத்தாக இருக்கும், இந்த மின்சாதனப் பொருட்கள் அடுத்த 5 ஆண்டுகள் வரை நமக்கு பயன்பட்டாலே பெரிய விஷயமாக இருக்கும். ஆக இந்தக் கடன் குறைந்ததில் மகிழ்ச்சி தான்.

க்ரெடிட் கார்ட்

க்ரெடிட் கார்ட்

இ.எம்.ஐ-க் கடன்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் எப்படி குறைந்ததோ, அதற்கு நேர் மாறாக, க்ரெடிட் கார்ட் கடன் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் 2017-ல் 52,100 கோடி ரூபாயாகவும், மார்ச் 2018-ல் 68,600 கோடி ரூபாயாகவும், மார்ச் 2019-ல் 88,300 கோடி ரூபாயாகவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் சராசரியாக 28 சதவிகிதத்துக்கு மேல் க்ரெடிட் கார்ட் கடன் அதிகரித்து வருகிறது. இதை ஆர்பிஐயும் தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறது. உஷார் மக்களே, க்ரெடிட் கார்ட் இரு முனைக் கத்தி போன்றது, அது எப்போது வேண்டுமானாலும் நம்மை காலி செய்யும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+