அவசரமா லோன் வாங்க வேண்டுமா? இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்!

சென்னை: உங்களுக்கு அவசரமாக கடன் தேவைப்படும் நேரங்களில் எந்த செக்யுரிட்டியும் இல்லாமல் கடன் பெற உடனடி தனிநபர் கடன் பெரிய அளவில் உதவும்.

உங்களது கடன் நிலவை மற்றும் கணக்குகளை வைத்துதான் இந்த லோன் வழங்கப்படும். இதில் கடன் பெறுவதற்கான தகுதிகள் மிக எளிமையானது. நல்ல சிபில் ஸ்கோர் இருக்க கூடிய யாரும், நல்ல சம்பளம் மற்றும் வங்கி கணக்குவழக்கு இருக்கும் யாரும் இதன் மூலம் ஆன்லைனில் 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.

 அவசரமா லோன் வாங்க வேண்டுமா? இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்!

இந்த லோன்களை நீங்கள் எதற்காக வாங்குகிறார்கள் என்று விளக்கம் அளிக்க கூட அவசியம் கிடையாது. இது உங்கள் சொந்த தேவைக்கு என்பதால் அது குறித்து நீங்கள் விளக்கம் அளிக்க தேவையில்லை. இந்த பணத்தை நீங்கள் தவறான செயலுக்கோ, சூதாட்டம் செய்யவோ பயன்படுத்தாத வரை சிக்கலும் இல்லை.

இதன் மூலம் நீங்கள் எளிதாக லோன் பெற்று, எளிதாக உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். நீங்கள் லோன் பெற ஆசைப்பட்டு, அதை எப்படி பெற வேண்டும் என்று விரும்பினால், பின் வரும் வழிமுறைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சிலர் அதிக வட்டியில் கடன்களை வாங்கிவிட்டு அதை அடைப்பதற்காக மேலும் லோன் எடுக்க முயற்சி செய்வார்கள். இதனால் நிறைய கடன்களை வைத்திருக்கும் நபர்கள், ஒரே ஒரு லோன் மட்டும் எடுத்து அதற்கு மட்டும் இஎம்ஐ கட்டலாம் என்று நினைப்பார்கள். இது பொருளாதார சிக்கலை சரி செய்யும். இதனால் ஒருங்கிணைத்த கடன்களுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இதனால் ஒரே அடியாக உங்கள் கடன்களை எல்லாம் நீங்கள் அடைத்து ஒரே ஒரு இஎம்ஐ மட்டும் கட்ட முடியும்.

பொதுவாக அவசரமான மருத்துவ தேவைகளுக்கு கடன்களை வாங்குவது மிகவும் கடினம். மருத்துவ தேவைகள் எப்போதும் சொல்லிவிட்டு வராது. அவசரமான மருத்துவ தேவைகளுக்கும் நீங்கள் இந்த லோன்களை பெறலாம். உங்கள் மருத்துவ சேவைக்கு அதிக பணம் தேவைப்பட்டால் இந்த உடனடி கடன் உதவியை பெற முடியும். இதில் நீங்கள் 24 மணி நேரத்தில் எளிதாக கடன் பெறலாம்.

எங்காவது நீங்கள் செல்ல வேண்டும் என்றால், கனவு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் இந்த லோன்களை எடுக்க முடியும். இப்போதெல்லாம் அதிக வேலை இருக்கும் காரணத்தால் மக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளவதில்லை. அப்படி இருக்கும் சமயத்தில் வெளியூர் செல்ல நேரம் கிடைத்தாலும் மக்கள் செல்வதில்லை. காரணம், மக்கள் வெளியூர் செல்ல போதுமான பணம் கிடைப்பதில்லை. இந்த மாதிரி நேரங்களில் நீங்கள் 25 லட்சம் ரூபாய் வரை லோன் பெற முடியும்.

நீங்கள் உங்கள் வீட்டை சீரமைக்க பல ஆண்டுகளாக நினைத்துக் கொண்டு இருக்கலாம். வீட்டில் முக்கியமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முயன்று இருக்கலாம். வீட்டில் புதிய மாடி ஏற்படுத்துவது, புதிய அறை கட்டுவது, வாஸ்துவிற்கு ஏற்படி மாற்றுவது என அனைத்திற்கும் நீங்கள் எளிதாக லோன் பெறமுடியும்.

இதற்கு நீங்கள் உடனடி லோன் பெற முடியும். உங்கள் வயது 23-55 வரை இருந்து சரியான ஆவணங்கள் இருந்தால் எளிதாக லோன் எடுக்க முடியும்.

உங்கள் வியாபாரத்தை உடனடியாக பெறுக்குவதற்கு அவசர பண உதவி தேவைப்படலாம். உங்கள் வியாபாரத்திற்காக புதிய பொருள், சாதனம் வாங்கி வேண்டி இருக்கும். புதிய பணியாளர்களை நியமிக்க இருக்கும். இதற்கெல்லாம் அவசரமாக பணம் தேவைப்படும். அந்த மாதிரியான நேரத்தில் நீங்கள் அவசரமாக உடனடி லோன்களை பெற வாய்ப்புள்ளது.

வெளிநாடுகளில் திருமணம் நடத்த வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. ஆனால் போதிய பணம் இல்லாமல் மக்கள் தங்கள் கனவு திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த முடியாது. ஆனால் நீங்கள் உங்கள் திருமணத்தை நடத்த பஜாஜ் பர்சனல் லோன் எடுக்கலாம். இந்த பணம் மூலம் நீங்கள் தேன் நிலவு கொண்டாடலாம், திருமண விருந்து கொடுக்கலாம், வெளிநாடு செல்லலாம். இன்னும் நீங்கள் நினைத்ததை எல்லாம் செய்யலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வேகமாக உடனடி தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பித்து, உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+