பான் கார்டுக்கு பதில் ஆதார்.. அடுத்தது 'ஒரே இந்தியா.. ஒரே வருமானவரி' படிவம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நேற்று (ஜூலை 05, 2019) நிர்மலா சீதாராமன் தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டார்.

சர்வம் தனியார்மயம் என்கிற அடிப்படையில் ஏவியேஷன், இன்ஷூரன்ஸ், சில்லறை வணீகத்துக்கு எல்லாம் பல அந்நிய நேரடி முதலீடு அறிவிப்புகள் வெளியாயின.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... நடுத்தர மக்களுக்கு என்ன சொல்லி இருக்கிறார் என்பதைத் தான் இதில் பார்க்கப் போகிறோம்.

 வரி செக்

வரி செக்

1. பான் கார்ட் பயன்படுத்தும் இடத்தில் இனி ஆதார் கார்டை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆக இனி வருமான வரி செலுத்த பான் அட்டை தேவை இல்லை. அடுத்த சில பட்ஜெட்டில் ஒரே இந்தியாவில் ஒரே வருமான வரிப் படிவத்தை அனைவரும் கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும் எனச் சொன்னாலும் சொல்லலாம். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகிறது. எனவே டியர் இந்தியன்ஸ் 120 கோடி பேரும் இனி வருமான வரி தாக்கல் செய்ய தயாராக இருங்க. இந்த ஷாட்ட எதிர்பார்க்கவே இல்லையே..?

 வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

2. வீட்டுக் கடனுக்கு செலுத்தம் வட்டியை ஏற்கனவே ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரிக் கழிவு பெறுகிறோம். அதை அடுத்த மார்ச் 2020-ம் ஆண்டு வரை 3.5 லட்சமாக உயர்த்தி இருக்கிறார். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளுக்கு கூடுதலாக பணப் புழக்கம் வரலாம். அப்படி வந்தால் வங்கிகள் மேற் கொண்டு கடன் கொடுக்கும். எனவே இந்தியப் பொருளாதாரத்தில் பணப் புழக்கம் பெருகும் என கணக்கிட்டிருப்பதை உணர முடிகிறது. இதனால் மேற் கொண்டு நடுத்தர மக்களுக்கு பிசினஸ் கடன் மற்றும் வீட்டுக் கடன் கிடைப்பது அதிகரிக்கலாம். நல்ல முயற்சி.

டிடிஎஸ்

டிடிஎஸ்

3. இனி வருஷத்துக்கு ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல பணம் எடுத்தால், 2% டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்படும். வியாபாரிக்ளை முழுமையாக டிஜிட்டல் பக்கம் திருப்பும் முயற்சி இது. வரவேற்கத்தக்கது. அதே போல வாடிக்கையாளர்களிடம் இந்த ஆன்லைன் பணப் பரிமாற்றங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். வாழ்க டிஜிட்டல் இந்தியா.

 ஓகே ஏற்றுக் கொள்ளலாம்.

ஓகே ஏற்றுக் கொள்ளலாம்.

4. முந்திரி, கேமரா, சிந்தடிக் ஃபைபர், வினைல் ஃப்ளோரிங், ஆப்டிக்கல் ஃபைபர், மார்பிள்ஸ், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் என பல பொருட்களுக்கு சுங்க வரியை அள்ளி வீசி இருக்கிறார். ஓகே ஏற்றுக் கொள்ளலாம்.
5. இந்தியர்களின் ஆசை உலோகம் மற்றும் சமூக அந்தஸ்துகளில் ஒன்றாக பார்க்கப்படும் தங்கத்துக்கான சுங்க வரியையும் 10%-ல் இருந்து 12.5% ஆக அதிகரித்திருக்கிறார். ஓகே ஏற்றுக் கொள்ளலாம்.

 என்னமா இப்புடி பண்றீங்களேம்மா

என்னமா இப்புடி பண்றீங்களேம்மா

6. பெட்ரொல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதித்து லிட்டருக்கு 2.5 ரூபாய் வரி அதிகரிக்கச் செய்திருக்கிறார். வருத்தமளிக்கிறது.
7. சுய உதவிக் குழுவில் இருக்கும் பெண்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால், முத்ரா திட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் வரை தற்காலிக கடன் (Overdraft) பெறலாம். வரவேற்கத்தக்கது.

 புத்தகத்துக்கு வரியா..?

புத்தகத்துக்கு வரியா..?

8. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5% சுங்க வரி என மறைமுகமாக மேக் இன் இந்தியா போல ப்ரிண்ட் இன் இந்தியாவை ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. இப்படியாவது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்தால் சரி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

budget 2019: 120 crore Indians may have to file income tax return in future

budget 2019: 120 crore indians may have to file income tax return in future
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X