V G Siddhartha-வின் உயிரை வாங்கிய கடன்! நாம கடனுக்கு கை நீட்டும்போது எவ்வளவு உஷாரா இருக்கனும்?

Cafe Coffee Day founder V G Siddhartha-ன் கடன் பிரச்னையைப் பற்றிப் பார்க்கும் முன் நம் எதார்த்த நிலையை ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்வோம். ஒரு கல்லூரி மாணவர், தன் படிப்பை முடித்துவிட்டு, வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளம் தன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு முன்பே, ஏடிஎம் அட்டை அவர் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பே, இன்று க்ரெடிட் கார்ட் கொடுத்துவிடுகிறார்கள்.

முதல் மாத சம்பளத்திலேயே சில பல ஆயிரங்களை அப்படியே க்ரெடிட் கார்ட் கடனுக்கு திருப்பிச் செலுத்துவது, வாகன கடன்களுக்கு இ எம் ஐ செலுத்திய நண்பர்களை நாம் அறிவோம் தானே.

க்ரெடிட் கார்டில் கண்ட மேனிக்கு செலவழிப்பது, தனி நபர் கடன் வாங்கி உடனடி தேவை இல்லாத பொருட்களைக் கூட வாங்கிக் குவிப்பது என பல செயல்களால்... நமக்கே தெரியாமல் நாம் கடனாளி ஆகிக் கொண்டிருக்கிறோம்.

வலி

வலி

திடீரென ஒரு நாள், அடுத்த மாத சம்பளம் வாங்கி மொத்த சம்பளத்தையும் இ எம் ஐ அல்லது க்ரெடிட் கார்ட் பில்லுக்கு செலுத்தும் போது தான் நெற்றியில் அடித்தாற் போல் உரைக்கிறது நமக்கு. கடனை ஒழுங்காக கட்ட முடிந்தால் சரி பிழைத்தீர்கள். கட்ட முடியவில்லை என்றால்..? இதற்கான எதார்த்த, வலி நிறைந்த பதிலை தன் செயலில் காட்டி இருக்கிறார் Cafe Coffee Day founder V G Siddhartha. இவர் நம்மைப் போல சொந்த செலவுக்கு கடன் வாங்கவில்லை. பிசினஸுக்காக கடன் வாங்கி இருந்தார். தன்னைச் சார்ந்த 30,000 ஊழியர்களுக்காக கடன் வாங்கியவரே கடன் தொல்லை தாங்க முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் Cafe Coffee Day founder V G Siddhartha.

அப்படி என்ன கடன்

அப்படி என்ன கடன்

Cafe Coffee Day founder V G Siddhartha கடந்த ஜூலை 29, 2019 அன்று மாலை காணாமல் போனார். அவருடைய உடலை நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டு எடுத்திருக்கிறார்கள் கர்நாடக காவல் துறையினர். Cafe Coffee Day founder V G Siddhartha இறப்பதற்கு முன்பு கூட, தான் வாங்கிய கடனை, வேறு ஒருவரிடம் இருந்து கடன் வாங்கித் திருப்பிச் செலுத்துவது பற்றித் தான் பேசிக் கொண்டிருந்ததாக, விஷயம் தெரிந்த இரண்டு பேர் பேசி இருக்கிறார்களாம். Cafe Coffee Day founder V G Siddhartha பேசிக் கொண்டிருந்த கடன் தொகையின் அளவு 2,000 கோடி ரூபாயாம். இந்த 2,000 கோடி ரூபாய் கடன் Cafe Coffee Day நிறுவனத்துக்கு இருக்கும் கடன் தொகையான 6,547 கோடி ரூபாய் கணக்கில் சேராத கடனாம்.

காபி வியாபாரம்

காபி வியாபாரம்

"Cafe Coffee Day founder V G Siddhartha வாங்கும் பெரும் பகுதியான கடன் தொகைகளை அவருடைய காபி தோட்ட வியாபாரத்தில் முதலீடு செய்யவே வாங்கி இருக்கிறார்களாம். காபி தோட்ட விவகாரங்களோ, சித்தார்த்தா மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் தான் நிர்வாகம் இருந்தது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். காபி தோட்ட வியாபாரம் போதுமான லாபத்தைக் கொடுக்கவில்லை. லாப பற்றாக்குறையால், வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்த முடியவில்லை" எனச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

கடன் சுழற்சி

கடன் சுழற்சி

மேலும் பேசியவர்கள் "கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வாங்கியிருந்த கடன்களுக்கான வட்டித் தொகை எல்லாம் சேர்நது, ஒரு பெரிய கடன் தொகையாக அழுத்தத் தொடங்கிவிட்டது. எனவே ஏற்கனவே வாங்கி இருக்கும் கடனை திருப்பிச் செலுத்த, மற்றொருவரிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார் Cafe Coffee Day founder V G Siddhartha. இந்த கடனுக்கு கடன் என்கிற சுழற்சியில் சிக்கிக் கொண்ட சித்தார்த்தாவால் மீள முடியவில்லை. அதோடு புதிதாக யாரிடமிருந்தும் புதிய கடன்களை வாங்கவும் முடியவில்லை" என்கிறார்கள் விஷயம் தெரிந்த இரண்டு பேர்.

அழுத்தம்

அழுத்தம்

Cafe Coffee Day founder V G Siddhartha மொத்தம் 38 அமைப்புகளில் ஈடுபட்டிருக்கிறார். 21 காபி டே குழும கம்பெனிகள், 9 மற்ற கம்பெனிகள், 5 தனி நபர் கம்பெனிகள், 3 ட்ரஸ்டுகள் என பட்டியல் நீள்கிறது. இந்த 38 அமைப்புகளில் சுமார் 9,400 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கின்றன. அதில் மிக முக்கியமாக காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனம் மட்டும் 8,083 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து காபி டே குளோபல் 1,252 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள். அதன் பின் சிவன் செக்யூரிட்டீஸ் 42 கோடி ரூபாய், இட்டியம் சிஸ்டம்ஸ் 32 கோடி ரூபாய் என மொத்தம் 9409 கோடி ரூபாய் கடன் இன்னும் நிலுவையில் இருக்கிறதாம்.

அடமானம்

அடமானம்

காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் மட்டும், கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டிற்குள் மட்டும் சுமார் 45 சதவிகிதம், கூடுதலாக கடன் வாங்கி இருக்கிறார்களாம். 2015-ல் பாக்கி இருந்த கடன் தொகை 1,781 கோடி ரூபாய். 2018-ல் பாக்கி இருந்த கடன் தொகை 2,604 கோடி ரூபாய். இந்த கடன் பிரச்னைகளைச் சமாளிக்க Cafe Coffee Day founder V G Siddhartha தன் கைவசம் இருந்த பெரும் பகுதியான பங்குகளை அடமானம் வைக்கிறார். ஜூன் 2018-ல் 39% பங்குகளை அடமானம் வைத்தவர், ஜூன் 2019-ல் 71% பங்குகளை அடமானம் வைத்த விவரங்களை மும்பை பங்குச் சந்தையிடம் சமர்பித்த விவரங்களில் பார்க்க முடிகிறது. இப்படி தன்னால் முடிந்த அனைத்தும் செய்து பார்த்துவிட்டு, கடனை அடைக்க முடியாது என மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். (இதுவரை தற்கொலை என்று தான் சொல்கிறார்கள்.)

கடன் உஷார்

கடன் உஷார்

Cafe Coffee Day founder V G Siddhartha அவர்களுக்கும் நமக்கு ஒன்றும் அதிக வித்தியாசம் இல்லை. நம்மில் எத்தனை பேர், க்ரெடிட் கார்டை அதிகம் பயன்படுத்திவிட்டு, அடுத்த மாத சம்பளம் வந்த உடன் திருப்பிச் செலுத்துகிறோம். எத்தனை முறை நம் சம்பளப் பணத்தை மிச்சப்படுத்த முடியாமல் தவிக்கிறோம். கையில் காசே இல்லாத போது கூட, க்ரெடிட் கார்டை தேய்த்து நமக்கு தேவை இல்லாத பொருட்களைக் கூட வாங்கிக் குவிக்கிறோம் என்பதை உணருங்கள். தயவு செய்து கடனை சரியான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். கடன் ஒரு இரு முனைக் கத்தி. அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால், அது நம்மையே கொன்று விடும். அதற்கு நிதர்சன சாட்சியாக இருக்கிறார் இந்தியாவின் மிகப் பெரிய காபி கடையான Cafe Coffee Day-வின் நிறுவனர் V G Siddhartha.

அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
நாமும் கடன் இன்றி வாழப் பழகுவோம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+